2 ம்மிடத்தில் சனி, முகத்தில் நோயுள்ளவன், அதிக தனமுள்ளவன், அரசர்களால் பிடுங்கப்பட்ட தனமுள்ளவன், பொய் பேசுபவன், ஏமாற்றுபவன், எப்போதும் அலைந்து கொண்டிருப்பவன் (ஜாதக பாரி ஜாதகம்) நோயாளிபோன்ற முகத்தோற்றம் உள்ளவன், தனமற்றவன், மேலும், கடை வயதில் அயல் தேசத்தில் வரிப்பவனாகவும், வாகனம் பொருள் இவையுள்ளவனாயுமிருப்பான், தன்னின ஜனங்கள் இல்லாதவன், பூர்வார்ஜித சொந்துகளை நாசம் பண்ணுவான் (பூர்வபராசரியம்) கடுமையாகப் சேர்த்து வைத்திருக்கிற திரவியத்தை நாசம் செய்து வெளிதேசத்தில் வெகுலாபம் அடைவான். அபகீர்த்தியுடையவன், இதரதேசம் செல்பவன், அடிமை செய்து தனம் பெறுவான், அழகில்லாத முகம், தனஹீனன், முன் வம் அநியாயமும், பின் வயதில் நியாயம் செய்பவனுமாக இருப்பார் தாமதமான திருமணம். லக்னாதிபதிக்கு சனி சுபரானால் தாமதமானாலும் சுபமான திருமண வாழ்க்கை அமையும் (பிரம்மரிஷிவாக்கியம்) திரவியமில்லாதவன், இரண்டு நாம் உடையவன், பொய்யன், ஜன அபராதி, தரித்திரன், கபடன் ஜாதகன் குடும்பத்தை விலக்குவான், எல்லா போகங்களுடனும் கூடினவன், கடுமையாய்ப் பேசுபவன். (ஜாதக கணிதம்) பொருள்
நாசமேம்படும்.
சனி <- தேய்பிறை சந்திரன் – அதிக செல்வ இழப்பு ஏற்படும்.
2 மிடத்தில் சனி இருந்தாலும், 2 மிடத்தை பார்த்தாலும் ,2 ம்மிடத்ததிபதியாக சனி இருந்தாலும், கபடமாகப் பேசுவார் குடும்ப சுகமில்லாதவர். பிறரை வாய்ப் பேச்சினால் ஏமாற்றி அவர் மூலம் பொருளுதவி பதவி, மன தம் பெற்றுக்கொண்டு சக்கிரத்தில் நன்றி மறப்பார்.
சிம்மலக்னம் 2ல் சனி + சுக்ரன் நீசம் – 8 ல் மதிபர் குரு.
2ல் சனி ஆட்சி ஜாதகர் அநேக சாஸ்திரங்களை அறிந்தவர்.
2 ம்மிடத்தில் சனி – களத்திரதோஷம் ஏற்படும் (பாவங்களில் யோக பலன்) பால்ய விவாகமாயின் இருதாரம் அமையும் (நவக்கிரகஜோதிட வழிகாட்டி).
2 ம்மிடத்தில் சனி சத்துருவீட்டில் – பற்பல வழிகளிலும் ஆபத்து தரும். யுக்தியுடையவன் பற்பல வழிகளில் காமதூரனாகவும் செலவு செய்வான்.
2ல் சனி ஆட்சி உச்சமாக அமையாவிடில் பல வரிசை ஒழுங்கற்றதாக இருக்கும் (ஜோதிடமும் நவக்கிரகமும்)
கன்னி, தனுசு, மகர லக்னம் 2 ம்மிடத்தில் சனி – நன்றாக வாழ்வார் மற்ற லக்னங்களுக்கு நல்லதல்ல வேகமாக முரட்டுத்தனமாக பேச்சுவரும், மற்றவர்களிடம் பழகும் முறை சரியிருக்காது. கடின உழைப்பு இருக்கும். ஆனால், உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காது. காரணமில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருப்பார். வருத்தம் தோய்ந்த முகத்தினராயிருப்பார். பல நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் அதை உபயோகம் படுத்திக்கொள்ளாமல் விட்டுவிடுவார். குடும்ப வாழ்வில் சந்தோஷமில்லாமலிருப்பார். பலவித தொழில்களில் சம்பாதித்தாலும் இரும்பு, எவர் சில்வர், பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் கற்கள் முதலியவற்றினாலும், கூலியாட்களை வைத்து வேலை வாங்குவதாலும் முனிசிபாலிட்டி, கார்ப்பரேஷனில் வேலை செய்வதாலும் பணம் சம்பாதிப்பார். உலகில் இவர் செய்யும் நற்காரியங்கள் எடுபடாது. தீய காரியங்கள் பளிச்சென்று தெரியும். எனவே புகழ்பெற முடியாது. பேச்சில் தாழ்வான சொற்கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இராது. அமைதியில்லாத குடும்பம் அதிக அளவு இம்சை செய்யக்கடியவர், இவரிடம் பணி புரியும் வேலையாட்களும், மனைவியும், படாதபாடு பட அவிற்கு கொடுமைப்படுத்துவார். மற்றவர்களை இழித்தும், பழித்தும் பேசி கூறி வருவதால் மற்றவர் இவரை வெறுப்பார்கள்.
2ம்மிடத்தில் சனி வக்ரம் – பல தோல்விகளை சந்திக்க வேண்டிவரும் கருப்புப் பொருட்களை விற்பனை செய்வார். சொந்த நாட்க விட்டு அயல்நாட்டில் வரிப்பார், அயல்நாடு சென்று வரும் யோகம் அல்லது அயல் மாநிலம் செல்வார்.
2ல் சனி வக்ரம் – 7 மதிபர் – கணவனும், மனைவியும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவார்கள் ஆதலால், பிரிந்தே இருப்பர்.
2 ம்மிடத்தில் சனி வக்ரம் ஆட்சி – நன்மையே தரும்.
மீன லக்னம் – 2ம்மிடத்தில் சனி வக்ரம் நீசம் – அயல்நாடு செல்லும் யோகம் எதிர்பாராத நிலையில் செல்வம் தரும். ரேஸ், வட்ட யோகம். உடன்பிறப்பால் நண்பர்களால் நன்மை பெறுவார்.
தனுசு லக்னம் – இளவரசி டயானா.
2 ம்மிடத்தில் சனி வக்ரம் + குரு கோடீஸ்வர யோகம். இளவரசியானார்.
2 ம்மிடத்தில் சனி வக்ரகிரகம் – மத்திம ஆயுள்.
குரு 3வது நட்சத்திரதசை விபத்தாரையில்.
குருவும் ராகுவும் 6/8ஆக,
2ல் குரு + 2 மதிபர் – குருதசை ராகுபுத்தியில் விபத்தில் மரணம்.
மற்ற இடங்களில் சனி வக்ரம் – மரவேலை, கட்டிடம் கட்டும் தொழிலாளி, துப்புரவு தொழிலாளி, செல்வநிலையில் பற்றாக்குறை பிறரை நம்பி வாழ வேண்டிய நிலை. உறவுக்கு பகையாகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வார். கண் நோய், தந்தையின் உறவு பாதிக்கப்படும் வாடகை வீட்டில் விரிப்பார் பெண்களால் ஏமாற்றப்படுவார். விவசாயத்தில் லாபம் வரும்.
ரிஷபலக்னம் – ரஷியநாட்டு மாணவர் இந்தியா இலங்கையில் உயர்கல்வி கற்று பரிசு பெற்றார்.
2ல் சனி வக்ரம் 9, 10 மதிபர் – ராகு <-> 8 ம்மிடத்தில் புதன் + 3 சந்திரன் + 4 சூரியன் 7ல் <- 7 செவ்வாய்.
9,10 சனி வக்ரம் -2, 5 புதன் வக்ரம் அயல்நாடு சென்று கல்வி கற்று வருவார்.
4 மதியர் – வக்ரசனி பகை – தன் தாய் நாட்டைவிட்டு நீண்ட காலம் இந்தியாவில் தங்கினார்.
சூரியன் பார்த்ததால் சனிக்கு வக்ரம் நீங்கி யோகம் செய்தது. 5-10 மதிபர்கள் பரிவர்த்தனை 2ம் உபயரரியில் அயல்நாட்டில் உயர்கல்வியும் பணியும்.