6, 8, 12 மதிபரான சனிக்கு கேந்திரத்தில் குரியன் – தொழில் வருவாயில் தொல்லை.
2- 12ல் சூரியன் – சந்திரன் – ஜாதகருக்கும் தந்தைக்கும் சுமுகமான உறவு இராது.
சதிரவற்கு இரண்டு ஈராறில் காரியும் தந்தைக்காகா மதி தனக்கு இரண்டு ஈராறில் மந்தனும் மாதுர்க்காகா. (சாதக அலங்காரம்)
அன்னையுடன் சுமுகமான உறவு இராது.
2ல் சந்திரன் – 3ல் குரு – ராஜயோகம்.
2ல் சுக்ரன் – மனைவியால் தனவிருத்தி.
3, 7, 10ஸ் சந்திரன் – கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் சந்திரனை சனி தீர்க்கமாக பார்த்தால் இருவரும் நடத்தை கெட்டு ஒருவரை ஒருவர் ஏமாற்றுவார்கள்.
3ல் சந்திரன் + ராகு, கேது – மார்புப் புற்றுநோய்.
4, 7, 10 மிடமான விருச்சிகத்தில் சூரியன் – பந்தனயோகம்.
4ல் செவ்வாய் – களத்திரதோஷம்.
4,7, 10 ல் செவ்வாய் – தங்கள் திசை முழுவதும் நற்பலனைத்
தரமாட்டார்கள்.
4ல் சுக்ரன் – ஜாதகர் பிறர் மனையாளிடம் செல்வார்.
5ல் சந்திரன் நிறைய வருமானம் வந்தாலும் உடனே செலவாகிவிடும். வீட்டில் ஒருவருக்குக் கூட குடும்ப பொறுப்பு இராது.
5ல் குரு – மேஷம், துலாம், மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஒன்றில் வழக்கறிஞர், நீதிபதி,
5ல் ராகு – ராஜயோகம்.
6, 7, 8ல் சுபர்கள் – நீண்ட ஆயுள், நிலையான புகழ் வாழ்வில் மாபெரும் சாதனை.
7ல் சூரியன் – ஜாதகருக்கும் அவருடைய தந்தைக்கும் சுமுகமான உறவு இராது. இவர் வளர, வளர தந்தைக்கு இருளுண்டாகும் மிகவும் கடிமாக உழைத்து உண்ண வேண்டும்.
1ல் சூரியன் – 7ல் சனி களாத்திர நாசம் நிச்சயம்.
சூரியன் <-> சனி – தங்கள் தசை முழுவதும் நற்பலனைத் தரமாட்டார்கள். தொழில், குடும்பம், மனைவி உறவில் இழுக்குண்டாகும்.
7ல் இரட்டை ராசியில் சூரியன் <- செவ்வாய் – அலி.
7 மிடம் லக்னத்தில் சூரியன் + சந்திரன் – ஜெயிலில் மரணம்.
7ல் சந்திரன் – தாயாருக்கு கண்டம், கெடுபலன்.
7ல் சந்திரன் + செவ்வாய் – பெற்றோருக்கு அரிட்டம், ஸ்மரணை தவறுதல், காக்கை வலிப்பு.
7ல் செவ்வாய் – கடுமையான குணம், சகோதர இறப்பு இல்லை, தங்கள் தசை முழுவதும் நற்பலனை தரமாட்டார்கள் உடல் நலக்குறைவு ஏற்படும்.
7ல் புதன் – நண்பர்களால் கஷ்ட நஷ்டங்களும், கவுரவு பாதிப்புகளும் ஏற்படும். பொருள் இழப்பும் ஏற்படும்
7ல் இரட்டைராசியில் புதன் <- செவ்வாய் – அலி.
7ல் குரு – புத்திர ஹீனன், முளை குழப்பம் உண்டாகும்.
7ல் சுக்ரன் – மனைவி ககம் சரிவர அமையாது – கீழ்த்தரமான நீச ஜாதி பெண்களையே போகம் செய்ய விரும்புவான்.
7ல் ராகு – இருதாரம் (இருவாட்சி)
8, 12ல் சந்திரன் – புதன் – ஏற்றமான வாழ்வு. இல்வாழ்வில் மகிழ்ச்சி எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி.
9ல் குரு (மேஷம், துலாம், மிதுனம், சிம்மம், தனசு,
கும்பத்தில்) வழக்கறிஞர், நீதிபதி.
10ல் லக்கினாதிபதி – லக்னாதிபதிக்கு 4ல் சனி கால்நடையாக நடந்து செல்வான் சைக்கிள்கூட வைத்திருக்க முடியாது.
10ல் சந்திரன் – ஆண், பெண்கள் இருவர் ஜாதகத்திலும் சந்திரனை சனி தீர்க்கமாக பார்த்தால் இருவரும் நடத்தை கெடுவார்கள்.
10ல் சுக்ரன் – சுக்ரனுக்கு சனி வேதகன்.
12ல் சந்திரன் தந்தையின் பொருளை வேற்றர் கைக்கொள்வர். இவனோ ஸ்வயமாய் தேடிய பொருளை வைத்து அரசரை சேவித்துக்கொண்டு லாபம் அடைவான். (சாதக அலங்காரம்)
12ல் சந்திரன் + புதன் ஏற்றமான வாழ்வு காரியவெற்றி. இல்வாழ்வில் மகிழ்ச்சி.