About Images

துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

அன்பிற்குரிய துலாம் ராசி அன்பர்களே தற்போது வரை தங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி தோஷத்தை கொடுத்துக் கொண்டிருந்த சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் தை மாதம் 3 ம் நாள் செவ்வாய்க்கிழமை 06 நாழிகை 04 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ம் நாள் புதன்கிழமை 17 நாழிகை 07 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். அதன் அடிப்படையில் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். தங்களுக்கு இதுவரை அர்த்தாஷ்டமச் சனியாக இருந்த இருந்து தங்களுக்கு நிறைய துன்பங்களையும் மன நிம்மதி இன்மையும் வீடுகட்ட தடைகளையும் தாய்க்கு உடல் உபாதைகளையும் கொடுத்துக்கொண்டிருந்த அர்த்தாஷ்டமச் சனி பகவான் தற்போது பஞ்ச மைதானத்திற்கு பெயர்ச்சியாகி தங்களுக்கு பலன்களை வழங்க இருக்கிறார் வாருங்கள் பார்ப்போம்

.

0
துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
  • • பொருளாதார நிலை உயரும்
  • • திருமணம் கை கூடும். புத்திர பாக்கியம் கிட்டும்
  • • உத்தியோக உயர்வு கிட்டும்
  • • ஆரோக்கியத்தில் கவனம் தேவை
  • • ஊக வணிகம் கை கொடுக்கும்
  • • மாணவர்களின் கல்வி சிறக்கும்
விரிவான பலன்கள்

சனிபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். இந்த ஸ்தானத்தில் சனி பகவான் மிக்க நன்மைகளையே அளிப்பார். சனி பகவான் அருளால். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் தங்களுக்கு சிந்தனை தடுமாற்றம் உருவாகும் நிறைய குழப்பமான சூழலில் சந்திக்க வேண்டியது வரும் இருப்பினும் குழப்பத்தில் ஒரு தீர்வு நிச்சயம் கிடைக்கும் சனி பகவான் துலாம் ராசி காரர்களுக்கு பொருளாதார நிலையில் முன்னேற்றமான நிலைகளை ஏற்படுத்தி கொடுப்பார். திருமணம் மற்றும் புத்திரபாக்கியத்தை அமைத்து தருவார். தனது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் நிலையையும் சனியின் சஞ்சாரமானது துலாம் ராசி அன்பர்களை அனுபவிக்க வைக்கப்போகிறது

திருமண வாழ்க்கை குடும்பம், குழந்தைகள்

கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து இனக்கமான சூழ்நிலை ஏற்படும். துலாம் ராசி அன்பர்களுக்கு காதல் உணர்வுகள் அதிகரிக்கும். துலாம் ராசிக்காரர்களின் காதல் கைகூடும். திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். திருமணம் ஆனவுடனேயே புத்திரபாக்கியத்தை அருளக்கூடிய நிலையில் சனிஸ்வர பகவானின் சஞ்சாரம் நிகழ்த்தப்போகிறது. குழந்தைகளின் கல்வியில் மேம்பாடு இருக்கும்.. குழந்தைகளுக்கு தொழில் வளம் பெருகும் குழந்தைகள் வேலைகள் எதிர்பார்த்திருந்தால் வேலைகள் கிடைக்கும் பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்றமான வாழ்க்கையை இந்த சனிப் பெயர்ச்சி கொடுக்கும் என கூற வேண்டும்

பொதுவாக துலாம் ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் சுப,அசுப பலன்களை கலந்து தரும் காலமாக அமையும் எனக் கூறி தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிராத்தனை செய்து நிறைவு செய்கின்றோம்.