About Images

தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய தனுசு ராசி அன்பர்களே தங்களுக்கு இதுவரை ஏழரை சனி தோஷமாக கடந்த ஏழரை வருடமாக பாடாய் படுத்திய சனி பகவான் தற்போது ஏழரை சனி தோஷத்தில் இருந்து திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் தை மாதம் 3 ம் நாள் செவ்வாய்க்கிழமை 06 நாழிகை 04 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ம் நாள் புதன்கிழமை 17 நாழிகை 07 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். இதன் அடிப்படையில் இனி தனுசுக்கு ஏழரை சனி தோஷமானது விலகுகிறது. இதுவரை தாங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சியில் தடைகளையும் எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும், முன்னேற்றம் இன்மையும் சந்தித்து வந்தீர்கள் மேலும் தொழில்ரீதியாக கடுமையான நெருக்கடியை சந்திப்பதும், பொருளாதார ரீதியாக பல தடைகளையும் சந்தித்து கடுமையான குழப்பங்களில் இருந்த தங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியினால் என்ன பலன்கள் நடைபெற போகிறது என்பதை பார்ப்போம் வாருங்கள். ்

.

தனுசு ராசி சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
  • • தன லாபம். சொத்து சுகம் கிட்டும்
  • • பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள்
  • • கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்
  • • கைத் தொழில் சிறக்கும்
  • • ஏற்றுமதித் தொழிலில் லாபம் கிட்டும்
  • • உத்தியோகத்தில் உயர்வு கிட்டும்
  • • இயற்பியல் துறை மாணவர்கள் பிரகாசிப்பார்கள்
விரிவான பலன்கள்

தனுசிற்கு வீரம், வீரியம் மற்றும் இளய சகோதரத்தை குறிக்கும் மூன்றாம் ஸ்தானத்தில் சனி தன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். மூன்றாம் ஸ்தானத்தில் நின்று பூர்வ புண்ணியம் மற்றும் புத்திரத்தை குறிக்கும் ஐந்தாம் ஸ்தானத்தையும், பாக்கியத்தை குறிக்கும் ஒன்பதாம் ஸ்தானத்தையும், விரயத்தை குறிக்கும் பன்னிரெண்டாம் ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். விருச்சிகராசிக்கு மூன்றாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் மிகுந்த நற்பலன்களை விருச்சிகராசி அன்பர்களுக்கு அளிக்கவிருக்கிறார். தனுசு ராசி அன்பர்கள் எடுக்கும் அனைத்து புது முயற்சிகளிலும் வெற்றிபெறக்கூடிய அமைப்பை இந்த சனி பெயர்ச்சியானது ஏற்படுத்தி கொடுக்கப்போகிறது. தரகு, பிரயாணம் மற்றும் வெளிநாடு தொடர்புடைய தொழில்களில் ஏற்றத்தை ஏற்படுத்தி கொடுக்க போகிறார்..

பொதுவாக தனுசு ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல மேன்மையைத் தரும் காலமாக அமையும் தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிராத்தனை செய்து நிறைவு செய்கின்றோம்.
நன்றி வணக்கம்.