Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில், திருத்தங்கல், விருதுநகர்.

இது 108 திவ்யதேசங்களில், 91 வது திவ்ய தேசம். பழம்பெருமை மிக்க பாரம்பர்ய வரலாறு இந்தத் தலத்துக்கு உண்டு. இந்தக் கோயில், திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் அடைந்த 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 91வது திவ்ய தேசமாகும். தங்காலமலை மேல் அமைந்துள்ள இது குடைவரைக் கோவிலாகும். இக்கோவில் அமைந்துள்ள மலையின் மீதே …

ஸ்ரீ நின்ற நம்பி பெருமாள் கோயில் – திருக்குருங்குடி, திருநெல்வேலி

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குருங்குடி என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ வைணவ நம்பி மற்றும் திருக்குருங்குடிவள்ளி நாச்சியார் கோயில் இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோயில் கி.பி 6 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து அஸ்வர் புனிதர்களின் ஆரம்பகால இடைக்கால தமிழ் நியதி திவ்ய பிரபந்தாவில் மகிமைப்படுத்தப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்யாதேசங்களில் இதுவும் …

ஸ்ரீ வடபத்ரா சாயி பெருமாள் கோயில் – திருவில்லிபுத்தூர் (ஸ்ரீ வில்லிபுத்தூர்), விருதுநகர்.

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம்கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் …

தோத்தாத்ரிநாதர், என்னும் வானமாமலை பெருமாள் கோவில்,திருவரமங்கை,திருநெல்வேலி.

மூலவர் தோத்தாத்ரிநாதன், வானமாமலைப் பெருமாள்உத்ஸவர் தெய்வநாயகன்தாயார் சிரீவரமங்கை தாயார்திருக்கோலம் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்தீர்த்தம் இந்திர தீர்த்தம்விமானம் நந்தவர்தன விமானம்மங்களாசாசனம் நம்மாழ்வார்இருப்பிடம் திருச்சிரீவரமங்கை, தமிழ்நாடுவழிகாட்டி தற்போது ‘வானமாமலை’ என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலியிருந்து நாங்குநேரிக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து நடந்து சென்று சிறிது தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ. திருமகள் ஸ்ரீவரமங்கையாக இந்த க்ஷேத்திரத்தில் வளர்ந்து திருமாலை மணந்ததால் ‘ஸ்ரீவரமங்கை’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள திருக்குளம் முற்காலத்தில் நான்கு ஏரிகளாக வெட்டப்பட்டிருந்ததால் …

திருத்தொலைவில்லிமங்களம், அரவிந்தலோசனன் திருக்கோயில், இரட்டை திருப்பதி,திருநெல்வேலி.

108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு.தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே நவதிருப்பதிகளில் ஒன்றான தொலைவில்லிமங்கலம் பெருமாள் கோயிலில் கருடசேவை நடந்தது. தென்தமிழகத்தில் தாமிரபரணி நதியின் கரையோரம் ஆன்மிக சிறப்புபெற்ற நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில்களுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் …

அருள்மிகு பூமிபாலகர் என்ற ஸ்ரீ காய்சினவேந்தன் பெருமாள்-திருபுளியங்குடி, திருநெல்வேலி.

திருப்புளிங்குடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது. இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலர் என்ற பெயர்களில் பள்ளி கொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார். இறைவியின் பெயர் மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி; தீர்த்தம் இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம் ஆகியன. விமானம்: …

அருள்மிகு மாயகூத்தர் திருக்கோவில்,ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் – திருகு ளந்தாய், திருநெல்வேலி.

நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலம். வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்து தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாகஸ்தல வரலாறு.பாலிகை (குழந்தை / தாயார் திருநாமம் கவனிக்க!) தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அ‌‌வனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி …

ஸ்ரீ விஜயாசன பெருமாள் கோயில் (வரகுணமங்கை) திருநெல்வேலி.

வெற்றியைத் தரும் விஜயாசனப் பெருமாள் கோவில், வரகுணவல்லி, நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வரகுணமங்கை விஜயாசனப்பெருமாள் திருத்தலத்தைப் பற்றி இந்த வாரம் நலம் தரும் ஆலயங்கள் பகுதியில் அறிந்து கொள்ளலாம். நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதியான அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் நவக்கிரக தலங்களில் சந்திரன் தலமாக வழிபடப்படுகிறது. நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் இது விளங்குகிறது நத்தம் என்றழைகப்படும் திருவரகுணமங்கை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் …

ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள் கோயில் (ஸ்ரீ வைகுண்டம்) திருநெல்வேலி.

நவதிருப்பதிகள் என்று அழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும் நவக்கிரகங்களுடன் தொடர்புடையவை எனக் கருதி வழிபடப்பட்டு வருகின்றன. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவக்கிரகங்களாக கருதப்பட்டு வழிபடப்படுகின்றன. சோழ நாட்டில் அமைந்துள்ள தலங்களுக்கு ஒப்பாக இந்த பாண்டிய நாட்டு நவதிருப்பதி தலங்கள் நவக்கிரக தலங்களாகப் போற்றப்படுகின்றன. இந்த தலங்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளன. நவக்கிரகங்களில் தலைமைப் பதவி வகிக்கும் சூரியன் மகாவிஷ்ணுவே ஆவார். அவரை சூரிய நாராயணன் என்றும் கூறுகின்றனர். ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனி பகவானைத் …

அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன் திருக்கோவில்,தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம்.

தென்திருப்பேரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது. புராணச் சிறப்பு:திருமாலின் தேவியரில் ஸ்ரீதேவி சிவந்த நிறம் கொண்டவர். பூதேவி கருமை நிறம் கொண்டவர். சிவந்த நிறம் கொண்ட தம்மைவிட பூதேவியிடம் அதிக அன்பு கொண்டவராக திருமால் இருப்பதைக் கண்ட திருமகள் துர்வாச முனிவரிடம் சென்று பூதேவியின் கரிய நிற மேனியை சிவந்த பொன்மேனியாக மாற்றுமாறு வேண்டிக்கொண்டார். துர்வாச முனிவர் திருமாலைக் …