Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

ஸ்ரீ லோகநாத பெருமாள் கோயில் – திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம்

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

 திருவாரூருக்கு 14 கிலோ மீட்டர் தொலைவில் சிக்கலுக்கும் கீவளூருக்குமிடையில் அறிவு என்னும் சிறிய ஊரில் இருந்து 1  கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆறு,  காடு,  நகரம்,  ஆலயம்,  தீர்த்தம் என்று இந்த ஐந்தும் கொண்டு மிகவும் அற்புதமாக அமைந்த ஸ்தலம் என்பதால்  பஞ்ச பூத்ர ஸ்தலம் அல்லது பஞ்ச கிருஷ்ண சேத்திரம் என்று பெரிதும் போற்றப்படுகிறது.

லோகநாதப் பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும்.

 ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம்,  இரண்டு பிரகாரங்களுடன் பக்த உலா மண்டபம், சோபன மண்டபம்,  மகா மண்டபம், அர்த்தமண்டபமும் கொண்டு  மூலவர் ஸ்ரீ லோகநாதப் பெருமாள்,  சியாமள  மேனிப் பெருமாள்  நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.  தாயார் லோகநாயகி,  உத்சவர் அரவிந்தவல்லி. தீர்த்தம்ராவண புஷ்கரணி.  கோவிலுக்குள் எட்டு தீர்த்தக் கிணறு உண்டு.  உற்சவர் தாமோதர பெருமாள்.  இடது கரத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு தரிசனம் தருகிறார். விமானம் உற்பலாவதகம். ‘தல விருட்சம் மகிழமரம்.  காயா மகிழ்;  உறங்காப்புளி;  தோலா வழக்கு ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி என்று என்று பல்வேறு அதிசயங்களை கொண்டு இத்தலம் விளங்குகிறது.

வசிஷ்ட முனிவர் வெண்ணெயால் கிருஷ்ண விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த விக்கிரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து வெண்ணெய் விக்கிரகத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார். ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்றார் வசிஷ்டர். சிறுவன் ஓடிய வழியில் ஒரு மகிழ மரத்தடியில் சில முனிவர்கள் அமர்ந்து கிருஷ்ணரைத் தியானம் செய்துகொண்டிருந்தனர். ஓடிவந்த சிறுவன் கிருஷ்ணரே என அவர்கள் புரிந்து கொண்டனர். சிறுவனாய் வந்த கிருஷ்ணர் அவர்களின் பக்தியில் மகிழ்ந்து, அவர்களுக்கு ஒரு வரம் தருவதாகச் சொல்ல, அவர்கள் கிருஷ்ணரை அவ்விடத்திலேயே தங்கிவிடுமாறு வேண்டினர். அவரும் அங்கேயே தங்கிவிட்டார். துரத்தி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. அவ்விடத்தில் லோகநாதப் பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது.

ஒரு சமயம் திருமங்கையாழ்வார் திருவரங்கம் கோயிலுக்கு திருப்பணி செய்யும் பொருட்டு நாகப்பட்டினத்திலிருந்து தங்கமயமான ஒரு புத்த விவரத்தை எடுத்து வந்தார்.  நள்ளிரவில் ஓய்வெடுக்க விரும்பிய பொழுது,  இத்தலத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் புதைத்துவிட்டு நான் அயர்ந்து உறங்கினாலும் நீ உறங்க விடாமல் இந்த விவரத்தை பார்த்துக்கொள் என்று புளிய மரத்தைப் பார்த்து சொன்னார்.  புளிய மரமும்,  திருமங்கையாழ்வார் சொன்னபடி கேட்டு உறங்காமல் அந்த விவரத்தை காத்தது.  அதனால் இன்றுவரை இங்குள்ள புளிய மரத்திற்கு ‘உறங்காப் புளிய மரம்’  என்ற பெயரும் உண்டு.  இன்னொரு அதிசயம் இங்குள்ள கிணறுகளில் தண்ணீரை தென்படுவதில்லை.  இந்த ஊரில் என்ன வழக்கு நடந்தாலும் அது இன்றுவரை முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இத்தளத்தில் நடைபெறும் திருவிழாக்களில் ‘ திருநீர்’  அணிந்துகொண்டு பெருமாள் காட்சியளிப்பது ஆச்சரியமான செய்தியாகும்.  கருடன்  இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தரிசனம் தருகிறார்.  தாயார்  சன்னதியிலுள்ள மூலவரும்,  உற்சவரும் ஒரே ஜாடையில் இருப்பது,  வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாத அதிசயம்.  திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

பரம்பரை பரம்பரையாக வந்த சொத்துக்கள் கைவிட்டு போகாமல் இருப்பதற்கும் நம் குலமக்கள் வழி தவறி நடக்காமல் குடும்பப் பெருமையை நிலைநாட்டுவதற்கும் தெரியாத்தனமாக தவறுகள் செய்து வம்பில் மாட்டிக் கொண்டு அவர்களுக்கும், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் தத்தளிப்போர்க்கும் கடன் சுமையால் வாடுபவர்களுக்கும் இந்த ஸதலம் நன்மையைச் செய்யும். இங்குள்ள பெருமாளை சேவித்து, அபிஷேகம் ஆராதனை செய்து வந்தால் போதும். பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும்.

குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறியதும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter