தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும். 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாகத் தொகுத்தளித்த நாதமுனிகளின் மாணவர் திருக்கண்ண மங்கை ஆண்டான், பெருமாளை வழிப்பட்டு வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.
மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.
திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர். மூலவரின் ஒரு பெயரான பத்தராவி (பக்தர்+ஆவி) என்பது பக்தர்களுக்கு வேகமாக வந்து அருளுவதால் அமைந்தது.
மூலவர்
பக்தவத்சலப் பெருமாள். இவர் பக்தராவிப் பெருமாள் என்றும் அறியப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். தாயார்-அபிஷேகவல்லித் தாயார்.விமானம்- உட்பல விமானம். தல விருட்சம் -மகிழம், தீர்த்தங்கள்- தர்சண, புஷ்கரணி தீர்த்தம்
இத்தலத்தில், விமானம்,மண்டபம்,வனம்,ஆறு,கோவில், அமைவிடம்,ஊர்,
புஷ்கரணி, ஆகிய ஏழும் மரணமில்லா வாழ்வைத் தரும் அமிர்தத்தின் சிறப்பைக் கொண்டமைந்துள்ளதால், இத்தலம் சப்தமிர்த தலம் என அழைக்கப்படுகிறது.
திருவிழா
ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும் சித்ரா பௌர்ணமித் திருவிழா, இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழா.
தொடர்புக்கு: அர்ச்சகர் (பக்ஷிராஜன் -9362711070)