ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலம் இதுவாகும். இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் eight மைல் தொலைவில் உள்ளது.
இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. இந்து தொன்மப்படி துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம்.[ கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.
இறைவன், இறைவிஇத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நவமோகன கிருஷ்ணன் என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவி ருக்மணி தேவி, சத்திய பாமா ஆகியோர். இதன் விமானம் ஹேம கூட விமானம் எனும் அமைப்பினைச் சேர்ந்தது.
இங்கு யமுனை நதி ஓடுகிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது. புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை, பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோருக்கு மரத்தினால் செய்யப்பட்ட மூர்த்திகள் உள்ளன.
சிறைச்சாலையில் தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் உள்ள நந்த கோபர் வீட்டிற்கு வந்த நாளை ஆண்டுதோறும் இங்கு விழாவாக நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமியின் மறுநாள் (கோகுலாஷ்டமியின் மறுதினம்) இதே பெயரில் இந்த உற்சவம் வடநாட்டிலும், பிற முக்கிய தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கௌடில்யா மடத்தில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக்க சிறப்புடன் தற்போதும் நடத்தப்பட்டு வருகிறது.
புராண கோகுலம் கோயில் வாசலை ஒட்டியே யமுனை நதி ஓடுகிறது. இந்த புராண கோகுலம், கோகுலம் இரண்டையுமே தரிசித்தால்தான் இந்த திவ்ய தேச யாத்திரை பூரணமாகும் என்கிறார்கள். கோகுலத்தில் கிருஷ்ணன் நிகழ்த்திய லீலைகளை எத்தனை முறை சொன்னாலும், கேட்டாலும், படித்தாலும் அலுப்பே ஏற்படுவதில்லை என்பது ஒவ்வொருவருடைய அனுபவம். வெறும் பட்டியலிட்டாலே அந்த லீலைகள் வெகுவாக நீளும். ஆனாலும், அத்தனை லீலைகளையும் நாம் பார்த்து மகிழும் வண்ணம் சிற்ப சாட்சிகளாக கோகுலம் நெடுகக் காண முடிகிறது.
பிற்காலத்தில் கோயிலை தரிசிக்க வரும் பக்தர்களைக் கவர இப்படி சிற்பங்களை உருவாக்கியிருக்கலாமென்றாலும், அவற்றைப் பார்க்கும்போதே நம் உள்ளத்தில் அந்த லீலைகள் நர்த்தனமாடுவதை உணர்ந்து பெருமகிழ்வு கொள்ளலாம். கம்சனால் ஏவிவிடப்பட்ட பூதனையை, அவளுடைய முலைப்பாலோடு உயிரையும் உறிஞ்சி வதைத்த கதை, சிற்ப ரூபமாக அமைந்திருப்பதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். ‘தன் வீட்டை விட்டுச் சென்றால்தானே பிற மனைகளில் புகுந்து வெண்ணைய் திருடவும், அதை அந்தந்த வீட்டு கோபியர் தன்னிடம் வந்து புகார் செய்யவும் நேரும்?
அவனைக் கட்டிப் போட்டுவிட்டால்…’ என்று சிந்தித்த யசோதை, அவனைக் கட்டிப் போட தாம்புக் கயிற்றை அவன் இடுப்பைச் சுற்றிக் கட்டினாள். ஆனால், கயிறு போதாதோ என்றளவுக்கு அவன் தன் இடுப்பைப் பெரிதாக்கிக்கொண்டான்! யசோதை நொந்துபோய், ‘அடேய், உன்னைக் கட்டிப்போட என்னை விடடா. ஊர் வம்பெல்லாம் சேகரிக்கும் உன்னை இப்படிக் கட்டிப்போட்டால்தான் தகும்’ என்று கெஞ்ச, தன் இடுப்பைச் சுருக்கிக்கொண்டு, தாய்க்கும் தாம்புக் கயிற்றுக்கும் கட்டுப்பட்டான் கிருஷ்ணன். ஒருமுனை அவன் வயிற்றை ஆனந்தமாக சுற்றிக்கொண்டிருக்க, மறுமுனை ஏக்கமாக ஓர் உரலுடன் பிணைந்திருந்தது. அவன் இனி வீட்டைவிட்டுப் போகமாட்டான், பிற வீடுகளிலிருந்தும் அவனைப் பற்றிய புகார் வராது என்று நிம்மதியடைந்தாள் யசோதை. இந்தச் சம்பவத்தை இளங்கோவடிகள், தன் சிலப்பதிகாரத்தில்,
புராண கோகுலம் கோயில் வாசலை ஒட்டியே யமுனை நதி ஓடுகிறது. இந்த புராண கோகுலம், கோகுலம் இரண்டையுமே தரிசித்தால்தான் இந்த திவ்ய தேச யாத்திரை பூரணமாகும் என்கிறார்கள். கோகுலத்தில் கிருஷ்ணன் நிகழ்த்திய லீலைகளை எத்தனை முறை சொன்னாலும், கேட்டாலும், படித்தாலும் அலுப்பே ஏற்படுவதில்லை என்பது ஒவ்வொருவருடைய அனுபவம். வெறும் பட்டியலிட்டாலே அந்த லீலைகள் வெகுவாக நீளும். ஆனாலும், அத்தனை லீலைகளையும் நாம் பார்த்து மகிழும் வண்ணம் சிற்ப சாட்சிகளாக கோகுலம் நெடுகக் காண முடிகிறது.
அவனைக் கட்டிப் போட்டுவிட்டால்…’ என்று சிந்தித்த யசோதை, அவனைக் கட்டிப் போட தாம்புக் கயிற்றை அவன் இடுப்பைச் சுற்றிக் கட்டினாள். ஆனால், கயிறு போதாதோ என்றளவுக்கு அவன் தன் இடுப்பைப் பெரிதாக்கிக்கொண்டான்! யசோதை நொந்துபோய், ‘அடேய், உன்னைக் கட்டிப்போட என்னை விடடா. ஊர் வம்பெல்லாம் சேகரிக்கும் உன்னை இப்படிக் கட்டிப்போட்டால்தான் தகும்’ என்று கெஞ்ச, தன் இடுப்பைச் சுருக்கிக்கொண்டு, தாய்க்கும் தாம்புக் கயிற்றுக்கும் கட்டுப்பட்டான் கிருஷ்ணன். ஒருமுனை அவன் வயிற்றை ஆனந்தமாக சுற்றிக்கொண்டிருக்க, மறுமுனை ஏக்கமாக ஓர் உரலுடன் பிணைந்திருந்தது. அவன் இனி வீட்டைவிட்டுப் போகமாட்டான், பிற வீடுகளிலிருந்தும் அவனைப் பற்றிய புகார் வராது என்று நிம்மதியடைந்தாள் யசோதை.
ஆனால், அப்படி யசோதை கட்டிப்போட்டது, உலக நன்மைக்காகத்தான். ஆமாம், தன்னைக் கட்டிய தாய்க்கு மரியாதை கொடுக்கும் வகையில் ஒத்துழைப்பு கொடுத்த கண்ணன், பிறகு அந்த உரலையே இழுத்துக்கொண்டுபோய், ஒரே வேரிலிருந்து கிளைத்த இரு மருத மரங்களுக்கு ஊடாக செலுத்தி இரண்டையும் சாய்த்து வீழ்த்தினான். இந்த இரு மரங்களும் நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு தேவர்கள்.
கிருஷ்ணரின் ஸ்பரிசத்தால் தற்போது சாபவிமோசனம் பெற்றனர். நாவல் பழம் விற்ற பழக்காரிக்கு தனக்கு அவள் கொடுத்த நாவல் பழங்களுக்கு விலையாக அரிசியை, கண்ணன் அன்புடன் அளிக்க, அந்த அரிசி அப்படியே மாணிக்கக் கற்களாக மாறி பழக்காரியின் ஏழ்மையை விலக்கியது இன்னொரு லீலை. ஆநிரைகளுடன் பழகுபவன்தானே, அவனை ஏமாற்றிக் கொன்றுவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்ட வற்சாசுரன் கன்று ரூபத்தில் வந்தபோது, அந்த மாறுவேடத்தை எளிதாகப் புரிந்து கொண்ட கண்ணன், கன்றின் கால்களைப் பற்றி சுழற்றியெறிந்து மாய்த்ததும் ஒரு லீலை.
கொக்கு உருவில் வந்தான் பகாசுரன். கண்ணனைக் கொத்தியே கொன்றுவிட வாய் திறந்தான். பளிச்சென்று அலகுகளைக் கைகளால் பற்றி, அப்படியே அதனைப் பிளந்து இருகூறாக்கி அசுரனை வதைத்தான் கண்ணன். மலைப்பாம்பாக வந்த அகாசுரன் தன்னை விழுங்க அனுமதித்து, அவன் வயிற்றுக்குள் போய் பேருருக் கொண்டு அதனால் அவன் வயிற்றைக் கிழித்து, அவனை வதைத்தபடி வெளியே வந்தான். அரக்க மாயையால் மறைந்துவிட்ட ஆயர்குலச் சிறுவர்களையும், கன்றுகளையும் மீட்டு அவரவர் வீடுகளிலேயே மீண்டும் தோன்றுமாறு செய்த லீலை இன்னொன்று.
யமுனை நதியிலிருந்தது காளிங்க மடு. இங்கே வாசம் செய்த காளிங்கன் என்ற பாம்பு, தன் விஷ மூச்சுக் காற்றால் நதிக்கரையோரம் வந்த கோபர்களை மரணம் எய்த வைத்தது. இந்தக் காளிங்கன் தலைமீது நின்று நர்த்தனமாடி, அவனை வதைத்து, இறந்துபட்ட கோபர்களையும் கண்ணன் உயிர்ப்பித்தது வேறொரு லீலை. திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் கோகுல வாசிகள் துன்புற, அந்தத் தீயை அப்படியே தான் விழுங்கி அவர்களைக் காத்ததும் ஒரு லீலை. இப்படித் தொடர்ந்து, தன்னைப் பிடிக்க இயலாத கம்சன், தம் தாய்-தந்தையரை சிறைபிடிக்க, உடனே வெகுண்ட கண்ணன் கம்சன் மீது பாய்ந்து அவனைக் கொன்றது வரை பால லீலைகள் கிருஷ்ணனைப் பொறுத்தவரை ஏராளம், ஏராளம்.
இப்படிப்பட்ட கோகுலத்தில், புராண கோகுல ஆலயத்தில் மூலவராக நவமோகன கிருஷ்ணன் கிழக்கு நோக்கி திவ்ய தரிசனம் தருகிறார். ஆலய வாசலை ஒட்டியே யமுனை நதி ஓடுகிறது. அந்நாளில் கிருஷ்ணனை நேரில் தரிசித்துப் பரவசமுற்ற இந்த நதி இப்போதும் அவனது அர்ச்சாவதார தரிசனத்தைக் கண்டவாறே கோயில் வாசலிலேயே தவமிருக்கிறது! கோயிலுக்குள் இந்த யமுனாதேவிக்கு தனி சந்நதியும் உண்டு. கோயிலுக்கு உள்ளேயும்தான் நம் கண்களையும், மனதையும் கொள்ளைகொள்ளும் சிற்பங்கள் எத்தனை, எத்தனை!
தவழும் கிருஷ்ணன், வளர்ப்புப் பெற்றோரான நந்தகோபர் – யசோதையுடன் கிருஷ்ணர், தனக்கு முன்னால் பிறந்து கம்சன் தன்னால் கொல்லப்படுவான் என்று கட்டியம் கூறிய மாயாதேவி மற்றும் யசோதாவுடன் கிருஷ்ணன், தொட்டிலில் அழகு கொஞ்ச தரிசனம் தரும் கிருஷ்ணன், பூதனை வதம் என்று நிறைய சந்நதிகள், சிற்பங்கள்… மிகச் சிறிய உருவானாலும் ராதா-கிருஷ்ணர், பேரழகுடன் தனி சந்நதியில் தரிசனம் தருகிறார்கள். அருகிலேயே கிருஷ்ணனைக் கட்டிய உரல்! இந்த ராதாகிருஷ்ணன் கோயிலில் சிவன் தன் முன்னே ரிஷபம் வீற்றிருக்க, லிங்கரூபமாய் அருள்பாலிக்கிறார்.
விநாயகர் – லக்ஷ்மி – பிரம்மாவுக்கும் தனியே சந்நதி உள்ளது. அனுமனும் தனி சந்நதியில் தரிசனம் தருகிறார். இவ்வளவு ஏன், நவகிரகங்களும் உண்டு! கோயிலில் ஒவ்வொரு பகுதியும் கிருஷ்ண ஸ்மரணையாகவே இருப்பதை உணர்ந்து அனுபவிக்க முடிகிறது. திருஆய்ப்பாடி என்ற கோகுல தரிசன நிறைவாக ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்கள் சிலவற்றைப் பாடி மகிழ்வோம். விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ
‘வைகுந்தத்திலிருக்கும் நித்ய சூரிகளும், சுவர்க்கத்திலுள்ள தேவர்களும் விரும்பித் தொழ வந்தும், கிருஷ்ணன் அவர்களைப் பொருட்படுத்தாமல், திருஆய்ப்பாடியில் பசுக்களின் பின்னால் போய்க்கொண்டிருக்கிறான். தம்மீது அவன் காட்டும் இந்தக் கரிசனத்தால் மனம் நெகிழ்ந்த கோபியர் அவன்மீது மீளா அன்பு பூண்டிருக்கிறார்கள். இவ்வாறும் இதுபோலவும் நான் இயற்றிய பத்துப் பாசுரங்களையும் இசையோடு பாடி மகிழ்வோருக்கு வைகுந்தத்தில் பரமனைத் தொழும் பாக்கியம் நிச்சயம்’ என்கிறார் ஆழ்வார்.
‘ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் திருமகளான, வில்லையும் பழிக்கும் அழகு புருவம் கொண்ட நான், ஆய்ப்பாடியின் அழகிய விளக்காகத் திகழும் கண்ணபிரானுக்குப் பத்து பாசுரங்களாலான மாலையை அணிவிக்கிறேன். தன்னை அடைய விரும்பும் பக்தர்களுக்கு சோதனைகள் தந்து பிறகு ஆட்கொள்பவன் அந்தக் கண்ணன். அவனை அடைய நினைப்பவர்கள் இந்தப் பாடல்களைப் பாடி அவனையே எண்ணி நெகிழ்ந்தால், எந்தத் துன்பமும் அவர்களைத் தொடாது’ என்பது
‘நப்பின்னை பிராட்டியை அடைய, அழகிய ஏழு உலகங்களும் அறியுமாறு ஏழு காளைகளை வீழ்த்திய எம்பெருமான் திருஆய்ப்பாடியில் எழிலுடன் கோயில் கொண்டிருக்கிறான். அழகிய மதில்களால் சூழப்பெற்ற திருப்பேர் நகரில் திவ்ய தரிசனம் தரும் பெருமாளும் இவனே. இப்பெருமானின் திவ்ய நாமங்களை உச்சரித்து, போற்றிப்பாடி, நான் உய்வடைந்தேன்.‘ என்று நா தழுதழுக்கச் சொல்கிறார்.
கோகுல் என்ற இடத்துக்கு சுமார் முக்கால் மைல் தூரத்தில் “புராணா கோகுல்” (பழைய கோகுலம்) என்று ஓர் ஆலயத்தை ஸ்தாபித்துள்ளனர்.
கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. நந்தகோபர், யஸோதா, பலராமர் விக்ரஹங்களுக்கடியில் குழந்தை கிருஷ்ணன் ஒரு சிறிய மரத்தொட்டிலில் ஸேவை ஸாதிக்கிறார். இவை எல்லாம் மர விக்ரஹங்கள்.
இந்த இரண்டு கோகுலங்களில் எது உண்மையானது என்று தெரியாததால் இரண்டையும் ஸேவித்துவிடுவது நல்லது.