Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

ஸ்ரீ தேவாதி ராஜான் பெருமாள் கோயில்-திருவழுந்தூர், மாயாவரம்

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.

சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது.

பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்கு சாதகமாகக் கூற, சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாற சாபமிட, அவருக்கு துணையாக சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் பசுவாகி பூமிக்கு வந்த போது மேய்ப்பவராக பெருமாள் ’ஆ’மருவியப்பன் எனும் பெயரில் வந்த திருத்தலம்.

க்கோவிலில் மூலவர் ஸ்ரீதேவாதிராஜன் என்ற பெயரிலும், உற்சவர் ஆமருவியப்பன் என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். இத்தலத் தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். அந்த தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களை காப்பாற்ற அந்த தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.

பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுத்திய அரசனுக்கு கோஹத்தி தோஷம் உண்டாகவே, மன்னன் சுவாமிக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணை சமர்ப்பித்து முறையிட்டு, பிரார்த்தனை செய்து, கோஹத்தி சாபம் நீங்கப்பெற்றான் என்பது வரலாறு.

மன்னன் கோஹத்தி சாபம் நீங்கப்பெற்ற நிகழ்வை ஒட்டி, இப்போதும் வருடத்தில் 2 நாட்கள் தை அமாவாசை தினத்திலும், புரட்டாசி கடைசி சனிக் கிழமையும் மூலவர் பெருமாளுக்கு ஆயிரம் குடம் வெண்ணை உற்சவம் நடைபெறுகிறது. மேலும் இந்த கோவிலில் பெருமாளுக்கு வைகாசி மாதத்தில் தேர் திருவிழா, பிரம்மோற்சவம், கார்த்திகை உற்சவம், பகல்பத்து, ராப்பத்து உற்சவம், தெப் போற்சவம், தாயாருக்கு தனியாக பிரம்மோற்சவம், பவித்ரோத்சவம் ஆகிய உற்சவங்கள் சிறப்பாக நடை பெறுகின்றன.

இந்த கோவிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். 107 திவ்ய தேசங்களிலும் சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள் பாலிக்கிறார்.

மேலும் சுவாமிக்கு வலது புறத்தில் பிரகலாதன் இத்தலத்தில் மட்டுமே உள்ளார். உக்கிரமாக காட்சியளித்த சுவாமியிடம் பிரகலாதன், சாந்த சொரூ பியாக, கண்ணன் உருவில் காட்சிதர வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து, இத்தலத்தில் பிரகலாதனை அருகில் வைத்துக்கொண்டு சுவாமி கண்ணனாக சாந்த சொரூபியாக காட்சி அளிக்கிறார். மேலும் இத்தலம் மார்க்கண்டேயன் தவம் செய்த தலமாகும்.

இக்கோவிலில் திருமண வரம் வேண்டுவோர், புத்திர பாக்கியம் வேண்டுவோர் வெண்ணெய் மற்றும் எண்ணை தந்து வழிபட, தோஷங்கள் நீங்கப்பெற்று, வேண்டிய வரம் பெறுவர். இத்தலத்தில் வேண்டு வோர்க்கு ராஜபதவி கிடைப் பதுடன், ராஜபதவியை பெற ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அத்தடைகளும் நீங்கும். இக்கோவிலின் தல விருட்சம் பலாமரம் ஆகும்.

இக்கோவிலின் முன்பு தரிஷ புஷ்கரணி உள்ளது. தரிஷம் என்றால் அமா வாசை. அமாவாசை யன்று உருவானதால் இது தரிஷ் புஷ்கரணி எனப்படுகிறது. மேலும் கஜேந்திர புஷ்கரணி என்ற தீர்த்தமும் உள்ளது.


கவி சக்கரவர்த்தி கம்பர் தேரழுந்தூரில் தான் பிறந்தார். இதனால் இக்கோவிலில் கம்பருக்கு புடைப்பு சிற்பம் உள்ளது. இந்த சிலை சேதமானதால் 1972-ல் அமைக்கப்பட்ட புதிய சிலையும் அதன் அருகிலேயே உள்ளது. இக்கோவிலின் எதிரில் சிவாலயமான வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளதும் சிறப்பம் சமாகும்.

அகத்திய முனிவருக்கு சைவ கோவிலில் தான் சிலைகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் அகத்தியருக்கு சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் எதிரே தனிக்கோவிலில் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

ஒருதடவை இப்பகுதி அரசன் 999 குடத்தில் வெண்ணை வைத்து ஒரு குடத்தை காலியாக வைத்து கிருஷ்ணரை ஏமாற்றினான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த கிருஷ்ணர், ஒரு குடத்தில் வெண்ணையும் 999 குடங்கள் காலியாகவும் செய்து, அந்த அரசனின் ஆணவத்தை அடக்கினார். இத்தகையை சிறப்புடைய இந்த தலத்தில் விதிப்படி பூஜைகள் செய்தால் எல்லா கஷ்டங்களும் தூள்-தூளாகிவிடும். மேல் அதிகாரிகள் அராஜகத்துடன் நடந்து கொண்டால், இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால் பலன் உண்டாகும். காணாமல் போனவர்கள் வீடு திருப்பவும், தொலைந்து போன பெ£ருட்கள் மீண்டும் கிடைக்கவும் இத்தல வழிபாடு உதவுகிறது.

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter