Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

ஸ்ரீ திருநாராயூர் நம்பி பெருமாள் கோயில்- திரு நாரையூர் (நாச்சியார் கோவில்), கும்பகோணம்

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர்.
கோச் செங்கணான் என்ற சோழ மன்னன் சிவனுக்கு எழுபது கோயில்கள் கட்டினான் என்றும் விஷ்ணுவுக்காகக் கட்டியது திருநறையூரில் உள்ள திருநறையூர் நம்பி திருக்கோவில் மட்டுமே என்றும் அறியப்படுகிறது. சோழ மன்னன் கோச் செங்கணான் கட்டிய திருக்கோயில் என்பதைத் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமங்கையாழ்வார்.

இத்திருக்கோயில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் ஸ்தலபுராணம் பெண்ணுக்கு முன்னுரிமை தந்த பெருமாளின் பெருமையைக் குறிக்கிறது. மஹாலஷ்மி தாயார் திருநறையூரில் வகுளா தேவி நாச்சியாராக வளர்ந்துவந்ததால், மகரிஷி மேதவி விருப்பத்திற் கிணங்க நாச்சியார் கோயிலாக இவ்வூரின் பெயர் மாறியது என்பது புராண கதை.
மேதாவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வந்தார். வழக்கம் போல் ஓர் நாள் நதியில் புண்ணிய நீராடினார். அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர் கைகளில் சிக்கியது. அந்தக் கணம் ஓர் அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்து வந்தார்.
இவ்விடத்தில் வந்து தங்கி வளர அன்னை மஹாலஷ்சுமி விரும்பினார். எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார்.

அந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள். தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.
அவை வகுளா தேவியின் சொல் கேட்டு நடக்க வேண்டும், அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேலும் பல நிபந்தனைகளை விதித்தார் முனிவர். அவற்றை ஏற்றார் மகாவிஷ்ணு. கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தேரியது. தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் எனப் பெயர் பெற்றது.

பெருமாள் தலங்கள் அனைத்திலும் பெருமாளுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கபடுகிறது. ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதைக் காட்டும் வண்ணம் இப்பெயர் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி இங்கு தாயார் முன்னே செல்ல பெருமாள் தாயார் பின்னே சென்று எழுந்தருளுவது, பெண்ணுக்கு முன்னுரிமை தருவதைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது.

இக்கோவில் நந்தவனத்தில் இரண்டு கருட பட்சிகள் வசித்து வந்தன. தினமும் கோவில் பூஜை நேரத்தில் இக்கருட பட்சிகள் பெருமாள், தாயார், கருடன் பூஜை முடியும் வரை கோவிலிலேயே பிரகாரத்தின் சுவர்கள் மீது அமர்ந்திருந்து பூஜை முடிந்தவுடன் சென்றுவிடும்.

1999 ஜனவரி 18ஆம் தேதி காலை பூஜைக்கு இவ்விரு பட்சிகள் வரவில்லை. பதைத்துப்போன அர்ச்சகர்கள், பக்தர்கள் கருட பட்சிகளை தேடிச் சென்ற பொழுது கோவில் தல விருட்சமான மகிழ மரத்திற்கு கீழே இவ்விரு கருட பட்சிகளும் ஒன்றை அணைத்தவாறு பகவானுக்கு உகந்த தினமான சிரவண தினத்தன்று மோட்சம் அடைந்தன. இதனை சிறப்பிக்க தனி சன்னதி வைத்து வழிபட்டு வருகின்றனர்.

மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையை நிறைவேற்ற அவருக்கு மகளாக மகாலட்சுமி அவதரித்தார். அவரை மானிட உருவில் வந்து ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் புரிந்து கொண்டார். இங்கு ஸ்ரீனிவாசப் பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றனர். அதனால் தாயாருக்கு என தனி சன்னதி இல்லை.
இந்த ஸ்தலத்தில் காணப்படும் தையார் வஞ்சுலவள்ளி நாச்சியார். கர்பக்ரிஹாமில் உள்ள மூலவருக்கு அடுத்தபடியாக அவள் காணப்படுகிறாள். இந்த ஸ்தலத்தின் மூலவர் திருநாராயூர் நம்பி. சீனிவாசன் மற்றும் வாசுதேவன் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கி (கல்யாணா திருக்கோலம்) தையரை திருமணம் செய்யத் தயாராக இருப்பதால், மூலவர் தனது சேவையை நிற்கிறார். மேதவி முனிவர் மற்றும் பிரம்மா தேவனுக்கு ப்ரத்யக்ஷம்.
இந்த கோயிலில் ஒரே கல்லால் ஆன மிகப் பெரிய கல் கருட பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. நாள் தோறும் 6 கால பூஜை நடைப்பெறுகிறது. பங்குனி மற்றும் மார்கழி மாதம் என இரு முறை மட்டும் வெளியே வரும் இந்த கல் கரு ட பகவான் சன்னதியிலிருந்து வெளியே வரும் போது வெறும் 4 பேர் மட்டும் சுமப்பார்கள். அதை தொடர்ந்து 8, 16, 32, 64, 128 பேர் என கருட பகவானின் எடை அதிகரித்துக் கொண்டே போகும். அதே போல் மீண்டும் சன்னதியை சென்றடையும் போது கருடரை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16, 8, என குறைந்து சன்னதியை அடையும் போது 4 பேர் தூக்கி செல்வார்கள். இந்த கல் கருட பகவானை 7 வியாழக் கிழமை தொடர்ந்து வழிபடுவதன் மூலம் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

இந்த ஸ்தலத்தில் காணப்படும் தையார் வஞ்சுலவள்ளி நாச்சியார். கர்பக்ரிஹாமில் உள்ள மூலவருக்கு அடுத்தபடியாக அவள் காணப்படுகிறாள். இந்த ஸ்தலத்தின் மூலவர் திருநாராயூர் நம்பி. சீனிவாசன் மற்றும் வாசுதேவன் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கி (கல்யாணா திருக்கோலம்) தையரை திருமணம் செய்யத் தயாராக இருப்பதால், மூலவர் தனது சேவையை நிற்கிறார். மேதவி முனிவர் மற்றும் பிரம்மா தேவனுக்கு ப்ரத்யக்ஷம்.
தொடர்புக்கு: அர்ச்சகர் (கே.லட்சுமிநாராயணன் -9486823692)

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter