Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில்-திருமலை, திருப்பதி.

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

திருமலையில், திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயில்

திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.

திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் ஏடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும்.

கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார். தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை. அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன. வேங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.

திருப்பதி வந்த கதை:
மூன்று மூர்த்திகளில் யார் சாந்த மூர்த்தி என உணர நினைத்த பிருகு முனிவர், முதலில் பிரம்ம லோகம் சென்றார், அங்கு பிரம்மன் தேவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதனால் முனிவரை யாரும் கவனிக்கவில்லை. அவரை சபித்து விட்டு நேராக கைலாயம் சென்றார்.

அங்கும் முனிவரை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் சிவனையும் சபித்த முனிவர், வைகுண்டத்துக்கு சென்று சேர்ந்தார்.

அங்கேயும் தன் பாம்பு படுக்கையில் மோகன புன்னகையுடன் படுத்திருந்தார் திருமால், அவரின் திருவடிகளை லட்சுமி தேவி பிடித்த வண்ணம் இருந்தார். கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பிருகு முனிவர் நான் வந்ததையும் கவனிக்காமல் உறக்கமா என கூறி, பெருமாளின் மார்பில் உதைத்தார்.

பதறிப்போய் எழுந்த பெருமாள், பிருகு முனிவரை வணங்கி, தன்னை உதைத்ததால், கால் ஏதும் நோகிறதோ என நினைத்து அவருக்கு இதமாக கால்களைப் பிடித்து விட்டார்.


இதைப்பார்த்து மூன்று உலகிலும் சாந்தமானவர் மகா விஷ்ணு தான் என மகிழ்ந்து பிருகு முனிவர் அங்கிருந்து வாழ்த்தி சென்றார்.

இருப்பினும், நாராயணனின் மார்பில் மகா லட்சுமி குடிகொண்டிருப்பதால், அவர் கோபம் கொண்டு நாராயணனை விட்டு பிரிந்து சென்றார்.

லட்சுமி தேவி பிரிந்ததால் பொழிவிழந்த நாராயணன், சீனிவாசனாக அவதரித்து திருமலை முழுவதும் தேடி திரிந்தார். அப்படி வந்து அமர்ந்தவர் தான் திருப்பதி வெங்கடேஸ்வரர்.

ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன். திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார். பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார். பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.

அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும்பொருட்டு திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்’ என்றார்.

அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார். திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு. ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல் (வேம்- பாவங்கள், கடம்-எரித்தல்), மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் (வேம்-அழிவில்லாதது, கடம்- ஐஸ்வர்யம்). சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன. திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள். திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

பிருகு முனிவரால் ஒரு முறை மகாவிஷ்ணுவை பிரிந்தாள் மகாலட்சுமி. வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்து கோல்காப்பூரில் தங்கியிருந்தாள். (கோல்காப்பூரில் இன்றும் மகாலட்சுமிக்கு தனி ஆலயம் உள்ளது). மகாலட்சுமியைத் தேடி மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்து திருமலையில் (திருப்பதி) ஒரு புற்றில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

அப்போது ராமாவதாரத்தில் வாக்கு கொடுத்தபடி, வேதவதி என்றப் பெண்ணை (கலியுகத்தில் பத்மாவதி) மகாவிஷ்ணு மணந்து கொண்டார். திருமணச்செலவுக்கு மகாவிஷ்ணுவிடம் பணம் இல்லை. மகாலட்சுமி தான் பெருமாளிடம் தற்போது இல்லையே?. இதனால் திருமணச்செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்கக் காசுகளை கடனாகப் பெற்றார் திருமால். அந்த தங்கக்காசுகளை கலியுக முடிவில் தந்து விடுவதாகவும், அதுவரை வட்டியைக் கொடுத்துவிடுவதாகவும் கூறினாராம்.

இந்த நிலையில் மகாவிஷ்ணு, பத்மாவதியை மணந்து கொண்டதை நாரத மகரிஷி மூலம் அறிந்து கொண்ட மகா லட்சுமி, கோல்காப்பூரில் இருந்து திருமலைக்கு வந்தார். அப்போது மகாவிஷ்ணு மகாலட்சுமியை வாஞ்சையுடன் அணைத்து, தமது திருமார்பில் இருத்திக் கொண்டார். திருச்சானூர் என்ற இடத்தில் அலர்மேலுமங்கை என்னும் பத்மாவதி தாயாரை அமர்த்தினார்.

திருமலையில் வெங்கடாசலபதியின் கோவிலுக்கு அருகிலேயே ‘சுவாமி புஷ்கரணி’ என்னும் தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்தின் மேற்குக்கரையின் வடமேற்கு மூலையில் வராகமூர்த்தி ஆலயம் இருக்கிறது. இந்த வராக மூர்த்தியே திருமலையின் ஆதிமூர்த்தி ஆவார். எனவே திருமலையில் வெங்கடாசலபதியை தரிசிக்கும் முன்பு ஆதிவராக மூர்த்தியை தரிசிப்பதே முறையான வழிபாடு ஆகும்.



குல தெய்வம்:
நம்மில் பலரும் குல தெய்வமாக திருப்பதியை ஏற்றுள்ளோம். அங்கு சென்று முடி காணிக்கை செலுத்தி தங்களின் குல தெய்வ வழிபாட்டை செய்து வருகின்றனர்.
இப்படி இருக்க திருப்பதி வேங்கடவனுக்கு குலதெய்வம் என ஸ்ரீ நரசிம்ம பெருமாளை குறிப்பிடப்படுகிறது.

ஆம், திருமலை வாசனின் திருமண பத்திரிக்கையில் குலதெய்வம் என்ற இடத்தில் ‘ஸ்ரீ நரசிம்மர்’ புகைப்படம் போடப்படுகிறது.
ஸ்ரீனிவாசருக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் திருமணம் முடிந்த பிறகு அஹோபிலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிபட்டனர் என வேங்கடேச மகாத்மியம் என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.

இன்று எல்லோருக்கும் இருக்கும் ஒரு அவசர தன்மை காரணமாக திருப்பதி பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள் பெரும்பாலானோர் நேரே திருமலைக்கு சென்று பெருமாளை மட்டும் வணங்கி திரும்புகின்றனர். அந்த வெங்கடாசலபதியின் முழுமையான அருளை நாம் பெற முதலில் அந்த வெங்கடேசனின் மனதில் என்றென்றும் வீற்றிருக்கும் நாயகியாகிய பத்மாவதி தாயாரை வழிபட வேண்டும். ஆகையால் முதலில் அந்த தாயார் வீற்றிருக்கும் திருச்சானூர் கோவிலுக்கு சென்று உங்கள் வாழ்வின் பொருளாதார நிலை உயர அந்த பத்மாவதி தாயாரை மனதார வேண்டிக்கொள்ளவேண்டும். இப்படி இந்த பத்மாவதி தாயாரிடம் வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யுமாறு தன் பதியாகிய வேங்கடவனிடம் பத்மாவதி தாயார் சிபாரிசு செய்வதாக ஒரு ஐதீகம்.

பிறகு அன்றைய தினமோ அல்லது அதற்கு மறுதினமோ திருமலை மீது வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக செல்வது சிறந்த பலனைக் கொடுக்கும். அப்படி நடந்து மலையேற முடியாதவர்கள் வாகனங்கள் மூலமாகவும் மலைக்கு செல்லலாம். அந்த புனிதமான ஏழுமலைகளை கடந்து திருமலை வந்த பின்பு முதலில் அந்த ஏழுமலையான் இங்கு கோவில் கொள்ள அனுமதித்த, இந்த மலைக்கு சொந்த காரரான “ஸ்ரீ ஆதி வராகர்” ஸ்வாமியின் கோவிலில் உள்ள புஷ்கரணியில் நீராடி அந்த வராகர் ஸ்வாமியை வழிபட வேண்டும். இதற்கு பிறகு திருமலையில் கோவில் கொண்டிருக்கும் “ஸ்ரீனிவாசனை” தரிசிக்க செல்ல வேண்டும். அப்படி அந்த வெங்கடேஸ்வரனை தரிசிக்கும் போது அவருக்கு உரிய மந்திரம் தெரிந்தால் அதை சில முறை ஜெபித்த பின்பு உங்களின் கோரிக்கையையோ அல்லது விருப்பதையோ அவரிடம் மனமுருகி பிராத்தனை செய்து தெரிவிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் திருச்சானூரில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரின் சிபாரிசை அந்த பெருமாளும் ஏற்றுக்கொண்டு, தன்னை மலை போல நம்பி மலை மீது ஏறி வரும் பக்தர்களின் அனைத்து குறைகளையும் அவர் போக்கி அருளிபாலிப்பர் என்பது ஐதீகம்.

திருமலையில் தரிசனம் செய்யும்முறை:

மலை மேல் சென்றதும் முடிந்தால் கோவிலுக்குள் செல்லும் முன் ஸ்வாமி புஷ்கரிணி எனப்படும் குளத்தில் நீராடுதல் நல்லது.

நீராடிய பின் நெற்றியில் அவரவர்கள் குலாச்சாரப் படி குறியீடு செய்து கொள்ளுதல் முக்கியம்.

அடுத்து குளத்தின் கரையில் இருக்கும் ஆதி வராஹப் பெருமாள் சன்னதியில் (இது தனிக்கோவிலாக இருக்கும்) சென்று சேவிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த சன்னதி மூடி இருக்கும் என்பதால் உள்ளே உள்ள வராஹரை சேவிக்கலாம். முதலில் இவரை சென்று வணங்குவதன் காரணம், திருமலை வராஹரது பூமி, அதில் பெருமாள் குடியிருப்பதால் எந்த ஒரு offeringம் முதலில் வராஹருக்குத்தான் என்பது தேவஸ்தானத்தில் கடைப்பிடிக்கும் வழக்கம். இங்கே போக நேரம் இல்லை என்றால் உள்ளே ஸ்தம்பத்தில் (தூணில்) உள்ள ஆதிவராஹரை சேவித்துக்கொள்ளலாம்.

வராகர் சன்னதி முடிந்ததும் கோவிலுக்குள் செல்வது… இன்றைய கால கட்டத்தில் நேரே அது முடியாது, க்யூவில் நின்றாலும் கோவிலின் entrance வந்ததும் முதலில் காணப்படும் த்வஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) முன்பே கீழே விழுந்து சேவிக்கலாம். ஆண்கள் மட்டும் நெடுஞ்சாண்கிடையாகவும் பெண்கள் மண்டியிட்டும் சேவிக்கணும். இங்கே உள்ள பலி பீடத்தையோ கொடிக்கம்பையோ எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. இது எல்லாக் கோவில்களுக்கும் பொது. த்வஜஸ்தம்பத்தைத் தாண்டியபின் கீழே விழுந்து சேவிக்கலாகாது…இதுவும் எல்லா கோவிலுக்கும் பொருந்தும்.

க்யூவில் நிற்பதால் ஒரு வேளை இது முடியாது போனால் இருந்த இடத்திலிருந்து கையால் கும்பிடலாம்.

க்யூ வளைந்து இடதுபக்கம் செல்லும். அங்கே வரதர் சன்னதி இருக்கும், க்யூவில் இருந்தாலும் இவரை சேவித்துச் செல்லலாம்.

அங்கிருந்து பெருமாளின் கர்பக்ருஹத்தின் முன் மண்டபம் வழியாக செல்வோம். உள்ளே உள்ள ஒரு ஸ்தம்பத்தில் வராகர் கோவிலில் உள்ளது போலவே ரூபத்துடன் வெளியில் சேவிக்கத் தவறின ஆதி வராகர் இருப்பார். அவரையும் சேவித்துவிட்டு பெருமாளின் முன் எப்போதும் நிற்கும் கருடாழ்வாரையும் வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்ல வேண்டும். சில சமயம் அதிக கூட்டம் என்றால் வெளியில் இருந்தே திருப்பி விடுவார்கள், எப்படியும் த்வாரபாலகர் வரை போகலாம்.

சன்னதிக்குள் நுழையும் முன் வாசலில் இருக்கும் த்வார பாலகர்கள் இருவரையும் கை கூப்பி வணங்கி உள்ளே நுழைய அனுமதி கோரவேண்டும். இதை மனதால் செய்தால் போதும், பிறகு பெருமாளின் திவ்ய தரிசனம்.

முடித்ததும் வெளியில் வந்தால் இடது கோடியில் பழைய மடப்பள்ளி (கோவிலின் kitchen) இருக்கும், அங்கே உள்ளே மேற்பார்வை பார்த்துக்கொண்டு வகுளாதேவி (ஸ்ரீனிவாசப் பெருமாளின் தாயார்…யசோதையாக பிறந்தவரும் இவரே…) இருப்பார். அவரை கண்டிப்பா சேவிக்கணும்.

முடித்ததும் தீர்த்தம் சடாரி சாதிப்பார்கள். அது முடிந்து பிராகாரத்தை வலம்வந்தால் ஒரு இடத்தில் எல்லாரும் படியில் ஏறி ஏறி பார்ப்பார்கள், நீங்களும் பாருங்கள், விமானத்தின் மேலே (தங்க விமானத்தில் வெள்ளியால் ஒரு பிரபை இருக்கும்) விமான வெங்கடேசர், அவரையும் வணங்கிவிட்டு வந்தால், எதிரில் உள்ள ராமானுஜர் சன்னதி, அருகிலேயே யோகநரசிம்மர் சன்னதியையும் விடாமல் சேவித்துவிட்டு வெளியில் வரலாம்.

திருப்பதி லட்டு:

இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது.] 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்

வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி, புரட்டாசி மாத பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். ரத சப்தமி(மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திருஉருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.

இங்கு கீழ்த் திருப்பதியில் மட்டும் கங்கம்மா ஜாத்ரா என்னும் திருநாள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா, கோவிந்த கடவுளின் தமக்கையாக கருதப்படுகிறார்.

இங்கு வியாழக்கிழமைகளில் அதிகாலைப் பூஜைக்குப்பிறகு வேங்கடவனின் அனைத்து ஆபரணங்களும், கவசங்களும் கழற்றப்பட்டு, அவருக்கு வேஷ்டியும், துண்டும் அணிவித்து அழகு செய்கிறார்கள். இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர். அதேநாளில் பின்பு பெருமாளுக்கு அலங்கார மாற்றம் செய்விக்கிறார்கள். இதற்கு ‘பூலாங்கி சேவை’ எனப் பெயர். இந்த சேவையில் பெருமாளை தரிசித்தால் தரித்திரம், வறுமை அகன்று வாழ்வில் வளம் சேரும் என்கிறார்கள்.

திருமலையில் ஆண்டுக்கு நான்கு முறை கருவறையில் மூலவரை கவசத்தால் மூடி, கருவறை சுவர்கள், தரைப்பகுதிகள் மற்றும் அனைத்து சன்னிதிகளையும் சுத்தம் செய்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ எனப்பெயர். கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சியில் அடியவர்கள் பங்கு கொள்ளலாம். காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் இந்நிகழ்வு நடைபெறுமாம். இந்த சேவையில் கலந்துகொண்டால் நம் பரம்பரை சாப, பாவங்களை நிவர்த்தி செய்யும் என்கிறார்கள்.

12 ஆல்வார்களில் பத்து பேர் நாளேரா திவ்ய பிரபாண்டத்தின் மொத்தம் 202 வசனங்களில் திருகடத்தை பாடியுள்ளனர் அல்லது குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் கோயில்கள் / புண்ணிய தலங்கள் அதிகம் பார்வையிடப்படுவது திருப்பதி என்பது தெளிவாகத் தெரிகிறது; ஆண்டு முழுவதும் மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள் திருப்பதிக்கு வருகிறார்கள். ஆந்திராவில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களில் திருப்பதி ஒன்றாகும்.

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter