விளக்கம்
குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் ஸ்ரீ கல்யாண நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சங்கர் மடமும் கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இந்த கோயில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த இந்திய கோயிலின் ஐந்து மாடிகள் 72 தூண்களில் கட்டப்பட்டுள்ளன. கோயில் கோபுரத்தின் உயரம் 235 அடி. இந்த கோவிலின் சன்னதி ஜகத் மந்திர் அல்லது நிஜா மந்திர் என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு
ஸ்ரீ கல்யாண நாராயண பெருமாள் கோயில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணரின் பேரனால் கட்டப்பட்டது. இந்த இந்திய கோயிலின் வடக்கு நுழைவாயில் மோக்ஷா துவாரா என்றும் கோமதி நதிக்கு அடுத்ததாக இருக்கும் இந்த கோயிலின் தெற்கு நுழைவாயில் ஸ்வர்கா துவாரா என்றும் அழைக்கப்படுகிறது. துவாரகா, பெட் துவாரகா கிருஷ்ணாவின் அரண்மனைகள் மற்றும் அவரது ராணிகளான நாத்வாரா, டகோர் மற்றும் கங்ரோலி ஆகியோரை பஞ்ச துவாரகா என்று அழைக்கின்றனர். துவாரகா ஷிலா, சக்ரா அடையாளங்களுடன் வெள்ளை கற்கள் கோமதி நதி படுக்கையிலிருந்து கடலின் குறைந்த அலைகளின் போது சேகரிக்கப்படுகின்றன.
துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் thirteen பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.
தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு four hundred இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும். இந்துத் தொன்மங்களின்படி கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்நகரம் கண்னனால் நிர்மாணிக்கப்பட்டு இருந்து இறுதி வரை அரசாண்ட இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் காட்சியளிக்கிறார். இறைவி கல்யாண நாச்சியார் (இலக்குமி) ருக்மணி, அஷ்டமகிசிகள் (எட்டு பட்டத்தரசிகள்). இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.விமானம் ஹேம கூட விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
இத்தலம் உலகப்பாரம்பரிய களமாக அறிவிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜகத் மந்திர் எனப்படும் துவாரகைக் கண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது பட்டத்தரசிகளுக்கும் அண்ணன் பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள்.
காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 7 half of மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து அமுதும் சிற்றுண்டியும் தரப்படுகிறது. அதன்பிறகு கனி வர்க்கங்கள் தரப்படுகின்றன. பிறகு செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் உறக்கம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு போக் என்று பெயர். துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்த தலத்திலேயே ஆகும். சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது.
புராண முக்கியத்துவம் மதுராவை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னனும் தனது மாமனுமான கம்சனை ஷீ கிருஷ்ணர் கொன்றழித்தார். இது யாதவ குலத்தார்க்கும் கம்சனின் மாமனாரான ஜராசந்தனுக்கும் இடையே தீராப்பகையை உருவாக்கியது. கம்சனை கொன்றதற்கு பழி தீர்க்கும் விதமாக ஜராசந்தன் யாதவர்கள் மீது 17 முறை தாக்குதல் நடத்தினார். எனவே கிருஷ்ணர் தனது யாதவ குலத்தாரை இடம் பெயர்த்து கிர்ணார் மலைப்பகுதியை கடந்து சௌராஷ்டிரா எனும் இப்போதைய குஜராத் பகுதிக்கு குடியேறச்செய்தார். இப்படி போர்ப்பாதையிலிருந்து விலகியதால் கிருஷ்ணருக்கு ரண்சோத்ராய் எனும் பெயர் வழங்கப்பட்டது. ஓக்கா எனும் துறைமுகப்பகுதிக்கு அருகிலுள்ள பெய்த் துவாரகா எனும் இடத்தில் அவர் தனது இனத்தார்க்கான குடியிருப்புகளை நிர்மாணிக்கச்செய்தார். இங்கு அவர் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்ததாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் மரணத்திற்கு பிறகு இந்த நகரத்தை மாபெரும் வெள்ளம் மூழ்கடித்ததாக சொல்லப்படுகிறது. இப்படி ஏழு முறை வெள்ளத்தால் மூடப்பட்டு ஏழாவது முறையாக இதே இடத்தில் உருவான நகரமே இப்போதுள்ள துவாரகா என்று ஸ்தலபுராணம் கூறுகிறது. புனித நகரம் துவாரகா எனும் பெயரிலுள்ள ‘த்வார்’ என்பது வாசலை குறிக்கிறது. துவாரக என்பதற்கு பிரம்மனை அடையும் வாசல் என்பது பொருளாகும். வைணவ நம்பிக்கையை பின்பற்றுபவர்கள் மத்தியில் இந்த துவாரகா நகரம் முக்கியமான புனித நகரமாக வணங்கப்படுகிறது. இங்குள்ள ஜகத்மந்திர் எனும் கோயிலில் த்வாரகாதீஷ் எனும் கிருஷ்ணரின் அவதாரம் வீற்றிருக்கிறது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான நாகேஷ்வர ஜோதிர்லிங்கம் இந்த துவாரகா நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
பேட் துவாரகா இந்த இடத்தில்தால் கிருஷ்ணர் தனது இனத்தார்க்கான ராஜ்ஜியத்தை நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு தீவுப்பகுதியான இது கட்ச் வளைகுடாப்பகுதியில் அமைந்துள்ளது. ஓக்கா துறைமுகம் அமைக்கப்படுவதற்கு முன்பு இப்பிரதேசத்தின் முக்கிய துறைமுகமாக இந்த பேட் துவாரகா விளங்கியிருக்கிறது. ஓக்கா படகுத்துறையை அடைந்து அங்கிருந்து ஃபெர்ரி பயணிகள் படகு மூலமாக இந்த தீவுக்கு செல்லவேண்டியுள்ளது. தொல் ஆய்வு முடிவுகளின் மூலம் இந்த தீவுப்பகுதியில் கிடைக்கும் சான்றுகள் கி.மு 3 ம் நூற்றாண்டுக்குரியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்தலத்தில் மஹாவிஷ்ணு ஷங்காசுரா எனும் அசுரனை வதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த தீவுப்பகுதிக்கு பேட் ஷங்கோதரா என்ற பெயரும் உண்டு. பேட் துவாரகா திவுப்பகுதியில் டால்பின்கள் மற்றும் கடல் உயிரினங்களை பார்த்து மகிழும் வகையில் கடல் சுற்றுலா செல்ல வசதிகள் உள்ளன. பிக்னிக் பொழுதுபோக்குகளில் ஈடுபடவும், கூடாரத்தங்கல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடவும் இந்த தீவுப்பகுதி உகந்தது. புவியியல் இருப்பிடம் துவாரகா நகரம் குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. குஜராத் தீபகற்பத்தின் மேற்குக்கோடி முனையில் இந்த துவாரகா நகரம் வீற்றிருக்கிறது. சுற்றுலா அம்சங்கள் துவாரகா மற்றும் பேட் துவாரகா நகரத்திலும் அவற்றை சுற்றியுள்ள இடங்களிலும் ஏராளமான கோயில்கள் அமைந்திருக்கின்றன. துவாரகதீஷ் கோயில், நாகேஷ்வரா ஜோதிர்லிங்கா கோயில், மீராபாய் கோயில், ஷீ கிருஷ்ணா கோயில், ஹனுமான் கோயில் மற்றும் பேட் துவாரகாவில் உள்ள கச்சோரியு போன்றவை இவற்றில் முக்கியமானவையாகும். இப்படி ஏராளமான ஆன்மிக திருத்தலங்களை கொண்டிருப்பதால் குஜராத் மாநிலத்தில் யாத்ரிகர்கள் அதிகம் விஜயம் செய்யும் நகரமாக இந்த துவாரகா நகரம் பிரசித்தி பெற்றுள்ளது.