Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

ஸ்ரீ ஓப்பிலியப்பன் கோயில் – திருவின்நகர், கும்பகோணம்

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

உப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும்.. பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. பக்தர்கள் நினைத்ததை நடத்தி வைப்பவர் ஒப்பிலியப்பன். மார்க்கண்டேய முனிவரின் தவத்தின் பயனால் பெருமாளும், பூமாதேவியும் இங்கு அவதரித்து நித்யவாசம் செய்வதால், ‘மார்க்கண்டேய ஷேத்திரம்’ என்றும் வழங்கப்படுகிறது. திருத்துழாய்காட்டில் பூமாதேவி இங்கு அவதரித்ததால் துளசி வனம் என்ற பெயரும் உண்டு.

மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர், துளசி வனமான இத்தலத்தில் வசித்து வந்தார். அவருக்கு லட்சுமி தேவியை தனது மகளாகவும், நாராயணரை மருமகனாகவும் அடைய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இதற்காக அவர் இங்கு ஒரு திருத்துளாய் செடியின் அடியில் அமர்ந்து கடும் தவம் இருந்தார். அவரது தவத்தை கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள், பெரிய பிராட்டியை நோக்கி ‘தேவி! நீ சென்று மார்க்கண்டேயருக்கு மகளாக இரு.

தக்க நேரத்தில் நான் வந்து உன்னுடன் உறைவேன்’ என்றார். அதன்படி லட்சுமி தேவி சிறு குழந்தையாக அவதரித்து துளசி வனத்தை அடைந்தாள். மார்க்கண்டேயர் மனம் மகிழ்ந்து அந்தக்குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார். குழந்தை வளர்ந்து பருவ வயதை அடைந்ததும், அவருக்கு திருமணம் செய்து வைக்க தக்க மணமகனைத் தேடினார். அவரிடம் நாராயணர் கொஞ்சம் விளையாடத் தீர்மானித்தார்.

வயோதிக வடிவம் பூண்டு கந்தலான ஆடையை உடுத்திக்கொண்டு முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார் நாராயணர். அவரை வணங்கி வரவேற்ற முனிவர், ‘தாங்கள் விரும்புவது யாது?’ எனக் கேட்டார்.

அதற்கு முதியவர், நான் உயர்ந்த குடியில் பிறந்தவன். வயதான காரணத்தால் தள்ளாமையால் வருந்துகிறேன். மனைவி இல்லாதவனுக்கு இல்லறமில்லை. தங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்’ என்றார்.

இதைக் கேட்டு திடுக்கிட்ட முனிவர் ‘இதற்கு நான் உடன்பட மாட்டேன்’ என்று உறுதியுடன் கூறி விட்டார்.
ஆனால் முதியவரோ ‘தங்கள் மகளை திருமணம் செய்து தராவிட்டால் தங்கள் எதிரிலேயே உயிரை விடுவேன்’ என்றார். செய்வதறியாது திகைத்த முனிவர் தனது மகளிடம் சென்று நடந்ததை விளக்கினார். அதற்கு அவள், ‘வயோதிகரை மணக்க சம்மதிக்கமாட்டேன். வற்புறுத்தினால் உயிரை விட்டு விடுவேன்’ என்றாள்.

மன கலக்கமடைந்த மார்க்கண்டேயர், பகவானை சரண் அடைந்தார். பகவான் தனது நாடகத்தை முடித்து அவர் முன்பு மகாவிஷ்ணுவாக காட்சி அளித்தார். ‘முனிவரே! உமது ஆசையை நிறைவேற்றவே இங்கு வந்தேன். உமது மகள் பூமாதேவியை எனக்கு திருமணம் செய்து தரவேண்டும். உமது மகள் சிறு பெண்ணாதலால் உப்பை சரியான விகிதத்தில் சேர்க்க முடியாது என்று கூறினீர். ஆதலால் இந்த தலத்தில் யாம் உப்பை மறுத்தோம். உப்பில்லாமல் எனக்கு நைவேத்தியம் படைப்பவரும், உப்பற்ற பண்டங்களை உண்பவரும் எனது அருளை பரி பூரணமாக பெறுவர். உமது மகளை எனக்கு மணம் செய்து தருவீராக’ என்றார்.

இதைகேட்டு மகிழ்ந்த முனிவர், ‘பரந்தாமனே! எனது புதல்வியை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள். நீர் எந்நாளும் எனது புதல்வியுடன் இத்தலத்திலேயே இருக்க வேண்டும். இந்த தலம் எனது பெயரால் அழைக்கப்பட வேண்டும். உப்பற்ற உனது உணவு பக்தருக்கு, பெரும் சுவையுடன் இருக்க வேண்டும்’ என்ற வரங்களை கேட்டார். பெருமானும் அவர் கேட்ட வரங்களை வழங்கி அருளினார்.

திருமால் பூமாதேவியை பிரம்மன் முன்னிலையில் தேவர்கள் அனைவரும் கூடி நிற்க இந்த துளசி வனத்தில் ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொண்டார். இத்தலத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தோர் அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ளது அஹோத்ர புஷ்கரணி என்ற பொய்கை. வத தேவ சர்மா என்ற அந்தணர், ஜைமினி முனிவரின் சாபம் பெற்று பறவையாக இங்குள்ள மரத்தில் தங்கி இருந்தார். ஒருநாள் புயல் காற்றில் மரக்கிளை முறிந்து, இந்த பொய்கையில் விழுந்ததில் அவரது சாபம் நீங்கியது. இந்த பொய்கையின் முற்புறத்தில் உள்ள துளசி செடியின் அடியில் அமர்ந்து பிறருக்கு அன்னமளிப்பவன் தனது சாபங்கள் அனைத்தும் நீங்கப்பெறுகிறான். செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் திருவோண நட்சத்திரம் போன்ற நாட்களில் இந்த திருக்குளத்தில் நீராடி பெருமாளை தரிசிப்பவர் வைகுந்தம் செல்வதாக ஐதீகம். சாரங்க தீர்த்தம், சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்கள் கோவிலில் உள்ளன.

ஒப்பிலியப்பனை துளசியால் அர்ச்சிப்பவர், ஒவ்வொரு இதழுக்கும் அசுவ மேத யாகம் செய்த பலனை அடைகிறார். சந்தனம், குங்குமம், பூ இவற்றை சமர்பிப்பதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடு கிறார்கள். ஆடை, அணிகலன்களை சமர்ப்பிப்பவர்கள் பாவ விமோசனம் பெறுகின்றனர். புரட்டாசி அல்லது பங்குனி சிரவனத்தன்று காலையில் புஷ்கரணியில் நீராடி, தானங்களை செய்பவர்கள் பாவங்கள் அகன்று போகும்.

தொடர்புக்கு: அர்ச்சகர் (கே.லட்சுமிநாராயணன் -9486823692)

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter