Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் – அஷ்டபுயாகரம் (அஷ்டபுஜம்), காஞ்சிபுரம்

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

அட்டபுயக்கரம்அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் தோன்றி காளியை அடக்கி அரக்கர்களை அழித்தார். எனவே இறைவன் அட்டபுயக்கரத்தோன் ஆனார். இவ்விடத்தில் ஆதிகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள் எழுந்தருளியிருந்ததாகவும் அவரே அட்ட புயக்கரமாக வந்தாரென்றும் ஒரு வரலாறும் உண்டு. மேலும் இத்தலத்திலே தான் கஜேந்திரனுக்கு முக்தி அளிக்க எட்டுகைகளுடன் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. வைரமேகன் என்னும் தொண்டை நாட்டு மன்னன் இப்பெருமாளுக்கு தொண்டு புரியும் பொருட்டு தற்போதுள்ள வடிவமைப்பில் இக்கோவிலைக்கட்டினான் என்றும் அறியமுடிகிறது

மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் வலப்புறம் நான்கு கைகளுடனும் இடப்புறம் நான்கு கைகளுடனும் காட்சி தருகிறார். ஆதிகேசவப் பெருமாள், கஜேந்திரவரதன் என்பன இறைவனின் பெயர்கள் திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற பிறகு அட்டபுயக்கரத்தான் ஆனார்.இறைவி -அலர்மேல் மங்கை, பத்மாசனி. தீர்த்தம் -கஜேந்திர புஷ்கரணி. விமானம்- க்கோயிலின் விமானம் ககநாக்ருதி, சக்ராக்ருதி விமானமென்றும், வியோமாகர விமானமென்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் ராமானுஜர் அவதரித்ததால் இது நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று இந்த கோவிலுக்கு வருபவர்கள் வைகுண்டம் சென்ற பலனை அடைவார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் என்று அழைக்கப்படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் ஒரு நாள் சிவபெருமான் கைலாயத்தில் தன்னை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவர் உடம்பில் இருந்த வஸ்திரம் நழுவி விழுந்தது. இதை பார்த்த சிவகணங்கள் சிவனை பார்த்து சிரித்தன. இதை உணர்ந்த சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சபித்தார். இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவமிருந்தனர்.

இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக பூத கணங்களுக்கு காட்சி அளித்து, பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார். அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோச்சனம் பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது.

ராமானுஜர் அவதரித்ததால் இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அந்த நேரத்தில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, இங்குள்ள மணிக்கதவை திறப்பர். வைகுண்ட ஏகாதசியன்று இந்த கோவிலுக்கு வருபவர்கள் வைகுண்டம் சென்ற பலனை அடைவார்கள். இன்றைக்கும் ஸ்ரீபெரும்புதூரில் யார் இறந்தாலும் மேளம் அடித்துக்கொண்டு வந்து சுவாமிக்கு சூட்டப்பட்ட மாலை, ஆளவந்தார் கஷாயம், பரிவட்டம், பெற்றுச்சென்று இறந்தவர் உடலில் சாற்றுவர்.

ஆதிசேஷனின் அம்சமான ராமானுஜரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாருகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும். சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஊரின் நடுவே கோயில் அழகிய வடிவில் அமைந்துள்ளது.

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter