திரு நிலாத்திங்கள் துண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் (திருக்கள்வனூர்)ஆகும். இத்தலத்தில் பார்வதியின் வேண்டுகோளின் படி பெருமாள் குளிர்ந்த கிரணங்களை வழங்கிக் கொண்டே இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதாக நம்பிக்கையாகும். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நிலாத்திங்கள் துண்டத்தான். சந்திரசூடப் பெருமாள் எனற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவிக்கு நேரொருவர் இல்லா வல்லியென்றும், நிலாத்திங்கள் துண்டத்தாயார் என்றும் பெயர். இத்தலத் தீர்த்தம் சந்திர புஷ்கரணி விமானம் புருஷ ஷீக்த விமானம் (ஆர்ய விமானம்) என்ற வகையைச் சேர்ந்தது. காஞ்சியில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் அமைந்துள்ள இந்த தலத்தில் சிவன் கோவில் குருக்களே பூஜை செய்து தீர்த்தம் கொடுக்கின்றார். தமிழ்நாட்டிலுள்ள வைணவத் திருத்தலங்களில் சிவனடியார்களால் பூஜை செய்யப்படும் பெருமாள் இவர் ஒருவர் தான்
விஷ்ணுவுக்கும் சிவபெருமானுக்கும் வேறுபாடு எதுவுமில்லை. நாம்தான் வித்தியாசமாக பார்க்கிறோம் என்பதை திருமாலே மெய்ப்பித்துக் காட்டிய சம்பவங்கள் எத்தனையோ உண்டு. சிவபெருமானுடைய மனைவி பார்வதி தேவியை தனது தங்கையாக ஏற்றுக்கொண்ட திருமால் என்னென்ன வகையில் உதவி செய்திருக்கிறார் என்பது ஒரு பெரிய வரலாறு. அதன் ஒரே ஒரு சம்பவத்தை மாத்திரம் இந்த காந்திபுரம் மண்ணில் மிகவும் அற்புதமாக திருநிலா திங்கள் துண்டம் கோயிலில் காணலாம். இந்தக் கோயில் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் உட்புறத்தில் இருப்பதுதான் மிகப் பெரிய சிறப்பு.
மூலவர் நிலாத் திங்கள் தூண்டத்தான். விமானம் புருஷ சுக்தம் நின்ற திருக்கோலம். தாயார் நேர் ஒருவரில்லா வள்ளி தாயார். தீர்த்தம் சந்திர புஷ்கரணி. சிவபெருமானுக்குரிய பெருமையை பறைசாற்றும் விதத்தில் திருமலே இந்த திருத்தலத்திற்கு வந்ததாக ஒரு தல புராணம் உண்டு.
இன்னொரு தல புராணம் இது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த எடுக்கும்பொழுது ஏற்பட்ட வெப்பத்தை நீக்குவதற்காக பிரம்மனை நோக்கி திருமால் பிரார்த்தனை செய்தார். அமிர்த கடல் வெப்பம் நீங்க வேண்டுமானால் காஞ்சியிலுள்ள சிவ பெருமான் குடிகொண்டிருக்கும் ஏகாம்பரநாதன் திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை வணங்கினாள் போதும் என்று பிரம்மன் வழிகாட்ட திருமால் இக்கோயிலில் வந்து தவம் செய்தார்.
சிவபெருமான் தலையில் இருக்கும் சந்திர ஒளி திருமால் மீது பட்டதும் திருமாலுக்கு வெப்பம் நீங்கியது. இதனால் பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் என்று பெயர் வழங்கலாயிற்று.
சிவபெருமானின் சடையில் அணிந்துள்ள பிறைத் துன்பத்தின் குளிர்ந்த ஒளி, திருமால் மீது பட்டதால், திருமாலின் நோய் தீர்ந்தது. அதனால் தான் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதாக இன்னொரு செய்தி. ஒரு மாமரத்தின் கீழே பார்வதி தேவி தவம் செய்யும் பொழுது, இந்த ஜெபத்தை சோதிக்க சிவன் அந்த மாமரத்தை எரித்ததாகவும் அப்பொழுது பெருமாள் தனது அம்ருத கிரகணங்களை கொண்டு எரிந்து போன மாமரத்தை தழைக்கச் செய்து குளிர்ச்சியை உண்டு பண்ணியதாகவும் மற்றும் ஒரு வரலாறு. இந்த கோயிலில் பார்வதியின் அருகே வாமனர் இருக்கிறார். இந்த வாமனர் தான் மாமரத்தை தொலைக்க வைத்த பெருமாள் என்று புராணச் செய்தி கூறுகிறது.
மூலவர் – நிலாத்திங்கள் துண்டத்தான், சந்த்ர சூடப்பெருமாள், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
விசேஷங்கள் – இங்கே ஒரு மாமரத்தின் கீழே பார்வதி தவம் செய்ததாகவும், பார்வதியின் தவத்தை சோதிக்க சிவன், மாமரத்தை எரிக்க, பார்வதி, வாமனனைப்ரார்த்திக்க, வாமனர் சங்கசக்ரகதாபாணியாக அம்ருத கிரணங்கள்கொண்டு மாமரத்தைத் தழைக்கச் செய்து, பார்வதியும் தாபம் தீர்ந்து, தவம் செய்ததாகவும், பார்வதியின் தாபத்தை துண்டித்தபடியால் பெருமாளுக்கு ‘நிலாத்திங்கள் துண்டத்தான்’ என்ற பெயர் உண்டாயிற்றாம்.
சிவன், தன் தலையிலுள்ள கங்கையை பார்வதியின் தவத்தைக் கெடுக்க ஏவ, கங்கையும் வேகமாக வர, பார்வதி தன் தமக்கை என்று கருதி வணங்கியும் லக்ஷ்யம் செய்யாததால் மணலினால் செய்த லிங்கம் கரையாமல் இருக்க, பார்வதி அதை அணைத்துக்கொள்ள, சிவன் சந்துஷ்டனாகி அந்த லிங்கத்தில் ஆவிர்பவித்ததாக ஐதீஹம். பார்வதி வேண்டுகோளின்படி வாமனர் அவள் பக்கத்தில் இன்னும் இருப்பதாக புராண வரலாறு.
கோபத்தால் செய்த பஞ்சமஹா பாவங்கள் எதுவாக இருந்தாலும் அத்தகைய பாவங்களைப் போக்க இந்த ஸ்தலத்திற்கு வந்து பெருமாளை சேவித்தால் போதும். அத்தகைய பாவங்கள் விலகி விடும். அது மட்டுமல்ல நெருப்பினால் எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும். பொருள் நஷடம் வியாபார நஷ்டம் ஏற்படாமல் தடுக்கவும், பெரியவர்கள், பெரும் பதவியில் இருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பாதிப்பு நீங்கவும், ‘ கெமிக்கல்’ விஷம் சம்பந்தமாக நோயினால் திண்டாடிக் கொண்டிருப்பவர்கள், அதிலிருந்து விலகவும் இங்குள்ள பெருமாளை வேண்டி பிரார்த்தனை செய்தால் போதும். புண்ணியவானாக மாறிவிடலாம்.
]