108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு.தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே நவதிருப்பதிகளில் ஒன்றான தொலைவில்லிமங்கலம் பெருமாள் கோயிலில் கருடசேவை நடந்தது. தென்தமிழகத்தில் தாமிரபரணி நதியின் கரையோரம் ஆன்மிக சிறப்புபெற்ற நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில்களுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நவதிருப்பதி கோயில்களில் 4வது ஸ்தலமான தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி) சுவாமி அரவிந்தலோசனப்பெருமாளுக்கு ஐப்பசி ரேவதி பிரமோற்சவ திருவிழா கோலாகலமாக நடக்கிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலையில் தோளுக்கினியானிலும், இரவில் இந்திர, சிம்ம, அனுமார், சேஷ, யானை, சந்திரபிரபை, குதிரை ஆகிய வாகனங்களிலும் மற்றும் வெற்றிவேர் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது.
ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன. குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர். இதனாலேயே இவ்வூர் துலை, வில்லி மங்கலம் எனும் பெயர் பெற்றது.
பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட திருமால் காட்சியளித்தார். தேவப்பிரான் எனும் திருப்பெயரும் பெற்றார்.
பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம்,நரசிம்மபுராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது
புராணப் பெயர் திருத்துலைவில்லி மங்கலம்
தேவர்பிரான் திருக்கோயில் (தெற்கு கோயில்..ராகு அம்சம்)
மூலவர்- ஸ்ரீஅரவிந்த லோசனன் (செந்தாமரைக் கண்ணன்)
தாயார்- கருந்தடக்கண்ணி நாச்சியார்
தீர்த்தம்- அஸ்வினி தீர்த்தம் (அசுவனி தேவர்கள் நீராடிய தீர்த்தம்)
பிரத்யட்சம்- அஸ்வினி ,தேவர்கள்,சுப்ரபர்
நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்
இது இரட்டைத் திருப்பதி எனவும் வழங்கப்படும் தலமாகும்
திருத்துலைவில்லி
மங்கலம்
(திருத்தொலைவில்லி மங்களம்)
இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து, ஒரு திவ்வியத் திருத்தலமாகக் கருதப் படுகிறது.ஆயினும், நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலமாகிறது
இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது
ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுதபோது ஒளிரும் வில்லையும், தராசையும் கண்டு வியப்புற்று கையில் எடுக்க , அவை சாபவிமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உரு பெற்றன.
குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர்.இதனாலேயே இவ்வூர்,துலை,வில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது
பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட பெருமாள் காட்சித் தந்தார்.தேவப்பிரான் என்ற பெயரும் பெற்றார்
இத்தலம் இரட்டத் திருப்பதியில் தெற்குத் திருக் கோயில்.ராகு அம்சம் திருக்கோயில்..
தினந்தாறும் தேவர்பிரானுக்கு தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தார் சுப்ரரர்.இத்தகைய அழகு வாய்ந்த மலர்களை எங்கிருந்து கொண்டு வருகிரார் என்றறிய பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை தடாகத்தில் இருந்து எடுக்க வரும் போது, பின் தொடர்ந்து வரும்போது, சுப்ரரர் காரணத்தைக் கேட்டார்.செந்தாமரை மலர்கள் கொண்டு வந்த வழிபாட்டில் மயங்கி வந்ததாகவும், அங்கேயே தமக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் பெருமாள் கூறினார்
இத்தலம் இரட்டத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில்.
சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.
இத்திருத்தலம் இரட்டைத் திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில். இங்கு பெருமாள் குப்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
அஸ்வினி தேவர்கள் நீராடி தவம் மேற்கொண்ட தீர்த்தம், அஸ்வினி தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. இந்த ஆலயத்திற்கு ராஜ கோபுரம் இல்லை. என்றாலும் கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. 5 கால பூஜை வைகானச ஆகம முறைப்படி செய்யப்படுகின்றன. வாரத்தில் 7 நாட்களும் தோஷ நிவர்த்திக்காக அர்ச்சனை போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. பக்தர்கள் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனம் செய்வதும் சிறப்பானது. கேது திசை நடப்பவர்கள், கேதுவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதுவோரும் இந்தத் திருக்கோவிலுக்கு வந்து, 108 தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.