Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

சாரங்கபாணி சுவாமி கோயில், கும்பகோணம்

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin
சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும்.
மகாலட்சுமியின் அவதார தலமாக கருதப்படுவதாலும், இருந்த இடத்திலேயே தவமிருந்து பெருமாளை தம் இருப்பிடத்திற்கே வரவழைத்து மணம் புரிந்த மகிமையாலும் இத்தலம் சிறப்பு பெறுகிறது.
மூலவர் திருநாமம் சாரங்கபாணி என்பதாகும். இவரை ஆராவமுதன், அபர்யாப்தாம்ருதன், சார்ங்கராஜா, சார்ங்கேசன் போன்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். மூலவர் பெருமாள் இரு திருக்கைகளுடன் வலது திருக்கையை திருமுடியின் கீழ் அமர்த்தி, உத்தான சயன கோலத்தில் பாம்பணை மீது பள்ளி கொண்டுள்ளார். உற்சவர் நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம், உடைவாள் ஆகிய ஐந்து திவ்விய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அழகாக காட்சியளிக்கிறார். சார்ங்கம் என்ற வில்லை வைத்து இருப்பதால் சார்ங்கபாணி என அழைக்கப்படுகிறார்.ஒரு சமயம் முனிவர்கள் ஒன்று கூடி யாகம் வளர்த்தனர். யாகத்தின் அவிர்பாகத்தை மும்மூர்த்திகளில் சாந்தமானவர்கள் யாரோ அவருக்கு வழங்க முடிவுசெய்தனர். அதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிருகு மகரிஷியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பிரம்மா, சிவனிடம் சென்றார். அவர்கள் பிருகு முனிவரை கண்டும் காணாததுபோல் இருந்தனர். வைகுண்டம் சென்ற பிருகு முனிவர் திருமாலின் சாந்தகுணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைத்தார். திருமால் அதைத் தடுக்காமல் பிருகுவின் பாதத்தை வருடினார்.

இதைப் பார்த்த மகாலட்சுமி கோபத்துடன், ‘சுவாமி! முனிவர் உங்கள் மார்பில் உதைக்கும் போது, அதைத் தடுக்காமல் விட்டுவிட்டீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழமாட்டேன்’ எனக்கூறி கணவரை பிரிந்து பூலோகம் வந்தார். பூலோகத்தில் கும்பகோணத்தில் உள்ள ஹேமபுஷ்கரணியில் 1008 தாமரை இதழ்களில் அழகிய குழந்தையாக அவதரித்தாள். அந்த நேரத்தில் அங்கு தவம் செய்துகொண்டிருந்த ஹேம மகரிஷி, குழந்தையை எடுத்து அவளுக்கு கோமளவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். கோமளவல்லிக்கு திருமண வயது வந்ததும், அவள் திருமாலை திருமணம் செய்யவேண்டி தவம் இருந்தாள். கோமளவல்லியின் தவத்துக்கு மகிழ்ந்து திருமால் வைகுண்டத்திலிருந்துதான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் இங்கு வந்து கோமள வல்லியை திருமணம் செய்துக்கொண்டார்.

மகாலட்சுமியின் அவதார தலமாக கருதப்படுவதாலும், இருந்த இடத்திலேயே தவமிருந்து பெருமாளை தம் இருப்பிடத்திற்கே வரவழைத்து மணம் புரிந்த மகிமையாலும் இத்தலம் சிறப்பு பெறுகிறது. கோமளவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புடவை சாத்தி வழிபட்டால், பெண்களுக்கு திருமணம் கைகூடும். மேலும் இறைவனையும் இறைவியையும் ஒரு சேர வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

தாயாரை மணந்துக்கொள்ள வைகுண்டத்தில் இருந்து இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமியின் சன்னிதி, தேரின் அமைப்பில் இருக்கிறது. இந்தத் தேரில் குதிரை, யானை, தேர் சக்கரங்கள் எல்லாம் கல்லினால் ஆனவை. பார்ப்பவர்கள் பரவசப் படுத்தும் வகையில் இக்கோவில் கோபுரம் 150 அடி உயரத்தில் 11 நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தில் 108 கரணவகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
திருமால், தாயாரை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். ஆகவே தாயாருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும். ஆகையால் தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னிதிக்குள் செல்லும் வகையில் ஆலயம் வடிவமைப்பு உள்ளது. 
திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் சீனிவாசப் பெருமாளே, பிருகு மகரிஷி காலத்தில் அங்கிருந்து கும்பகோணத்திற்கு எழுந்தருளி சிலகாலம் தங்கி இருந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக வந்த சீனிவாசன், பூமிக்கு கீழே ஒளிந்துகொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள்முன் தோன்றிய சுவாமி தாயாரை மணந்துகொண்டார். திருமால் ஒளிந்த இடம் கோவில் நிலவறைக்கு கீழ், பாதாள சீனிவாசன் சன்னிதி என்றப்பெயரில் உள்ளது. திருமணத்திற்கு பிறகு இவர் மேடான இடத்தில் மேட்டு சீனிவாசராக தாயார்களுடன் தனிசன்னிதியில் இருக்கிறார்.
Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter