காஞ்சி மாநகர் என்றாலே சட்டென்று எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வருவது கைலாச நாதர் திருக்கோயிலும், வரதராஜப் பெருமாள் கோயிலும்தான்.
ஆனால், கைலாசநாதர் கோயிலுக்கு இணையான சிறப்புகளுடன் ஓங்கி, உயர்ந்து நிற்கிறது வைணவத் திருத்தலமான ‘உலகளந்த பெருமாள் கோயில்’.
’நகரேஷூ காஞ்சி’ என்று போற்றப்பட்ட நகரங்களில் சிறந்த காஞ்சியில் 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாக அமைந்துள்ளது ஆழ்வார்களால் பாடல் பெற்ற உலகளந்த பெருமாள் கோயில்.
அதுவும் 108 திவ்ய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம், திரு நீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்களும் இக்கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
மகாபலி மன்னனிடம் அந்தணச் சிறுவனாக அவதரித்திருந்த வாமனப் பெருமாள், மூன்றடி மண் தானம் கேட்டார். மன்னனும் அதற்கு ஒத்துக்கொள்ள, இரண்டே அடிகளில் விண்ணையும் மண்ணையும் அளந்து விடுகிறார் வாமனத் திருமால். மூன்றாவது அடிக்காக பாதாளத்தில் தள்ளப்படும் மகாபலிச் சக்ரவர்த்தி, திருமாலிடம் அவரது உலகளந்த தோற்றத்தை காண வேண்டுகிறார். அவரது வேண்டுதலுக்கு இணங்கவே பெருமாள் இங்கு நான்கு நிலைகளில் காட்சியளிக்கிறார். இந்நான்கு திவ்ய தேசங்களையும் திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
இங்கு பெருமாள், உலகளந்தவராக ‘திருவிக்ரமன்’ என்கிற திருநாமத்தில் வழங்கப்படுகிறார். தாயார் அமிர்தவல்லி நாச்சியாராக இங்கு காட்சியளிக்கிறார்.
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு இங்கு பிரசாதமாக வழங்கப்படும் ‘திருக்கண்ணமுது’. பச்சரிசி, பயத்தம்பருப்பு, நெய், காய்ச்சாத பால், வெல்லம் சேர்த்து வேகவைத்து, குழைவாக செய்யப்படும் பாயசம் இது. இப்பாயசத்தில் இடப்படும் ‘இரகசிய பொடி’ ஒன்றே அப்பாரம்பரிய சுவைக்குக் காரணமாம்.
’தீர்த்த பரிமளம்’ என்றழைக்கப்படும் அப்பொடி லவங்கம், ஜாதிக்காய், ஜாதிபத்திரி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய வாசனைப் பொருட்களை இடித்து, சலித்து தயாரிக்கப்படுகிறது. மேலும், பெருமாள் கோயிலில் வழங்கப்படும் துளசி தீர்த்ததிலும் இப்பொடியே கலக்கப்படுகிறதாம்!
காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் , காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாக திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடற்பெற்ற இத்தலம் திருமாலின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்தக் கோவிலுள்ளேயே 108 திவ்விய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம் மற்றும் திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.
திருமாலின் திருவுருவத்திற்கு திருவிக்ரமன் என்பதாக வழங்கப்படுகிறது. 30 அடி உயரமுள்ள நீண்ட நெடியோனின் திருவுருவம் சிறப்பம்சமாகும். அதுமட்டுமல்லாமல், வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இந்த திருவுருவத்தின் இடது கால் உடலுக்கு செங்குத்தான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. வலது கால் மகாபலியின் தலை மீது அழுத்தியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளும் இரண்டு பக்கங்களிலும் விரிந்திருப்பதும் சிறப்பாகும்.
பிறபெயர்கள்: காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்
மூலவர்: உலகளந்த பெருமாள், திரு ஊராகத்தான், திரிவிக்ரமன்
தாயார்: அமிர்தவல்லி நாச்சியார்
உத்சவர்: திரு லோகநாதன்
உத்சவ தாயார்: படிதாண்டா தாயார்
புஷ்கரணி: நாக, சேஷ தீர்த்தம்.
விமானம்: சார ஸ்ரீகர விமானம்
பாசுரம்: திருமங்கை (4), திருமழிசை (2).
அமைவிடம்: காஞ்சிபுரம்
108 திவ்ய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம், திரு நீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்களும் இக்கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49 வது திவ்ய தேசம் ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்
திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்காரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 53 வது திவ்ய தேசம் ஆகும். இத்தல இறைவனை கார்ஹ மகரிஷி தரிசனம் செய்துள்ளார். இத்தல இறைவனை ஆணவம் நீங்கும் பொருட்டு பிரார்த்தனை செய்வதுண்டு, பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம் ஆகும்.
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருஊரகம்எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே கொடிமரத்திற்கு எதிரே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருநீரகம், திருக்காரகம்,திருகார்வனம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு.
ஆணவம் நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் வழிபாடு செய்யப்படுகிறது.
பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, பாயாசம் படைத்து வழிபாடு செய்கின்றனர்.