Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

அருள்மிகு பூமிபாலகர் என்ற ஸ்ரீ காய்சினவேந்தன் பெருமாள்-திருபுளியங்குடி, திருநெல்வேலி.

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

திருப்புளிங்குடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது. இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலர் என்ற பெயர்களில் பள்ளி கொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார். இறைவியின் பெயர் மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி; தீர்த்தம் இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம் ஆகியன. விமானம்: வேதசார விமானம் வகையைச் சேர்ந்தது. நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட தலம் இதுவாகும். இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களால் பாடல் பெற்றுள்ளது

இத்தலத்திலுள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப் பெரியவைகள். வேறு கோயில்களில் காணவியலாத காட்சியாக பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரியகாட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை கருவறையைச் சுற்றி வருகையில் வடக்குப்புற சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு சன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிற தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும்.

மூலவர்: பூமிபாலகர்
உற்சவர்: காய்சினவேந்தன்
அம்மன்/தாயார்: மலர் மகள் நாச்சியார், நில மகள் நாச்சியார் புளியங்குடிவள்ளி
தீர்த்தம்: வருணத்தீர்த்தம், நிருதி தீர்த்தம்
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
பெயர்: திருப்புளிங்குடி
புராண பெயர்: திருப்புளிங்குடி

தல வரலாறு

இங்கு பெருமாள் நாபியில் இருந்து தாம‌ரைக்‌கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது. பாத தரிசனம் செய்ய ‌‌வெளிப்பிரகாரத்தில் இருந்து ஜன்னல் வழியாகத் தரிசனம் செய்ய வேண்டும். இந்திரனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடம். வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அடைந்து ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன் பகவானால் சாப விமோசனம் பெற்ற தலம். வருணன் நிருதி தர்மராஜன் நரர் ஆகிய‌யோருக்கு காட்சி கொடுத்ததலம்.

தல பெருமை

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

  1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்
  2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
  3. செவ்வாய் : திருக்கோளுர்
  4. புதன் : திருப்புளியங்குடி
  5. குரு : ஆழ்வார்திருநகரி
  6. சுக்ரன் : ‌தென்திருப்பே
  7. சனி : பெருங்குளம்
  8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலவில்லிமங்கலம்)
  9. கேது : 2. இரட்டைத் திருப்பதி

தல சிறப்பு

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 83 வது திவ்ய தேசம். நவ திருப்பதிகளில் இது 4 வது திருப்பதி(திருப்புளியங்குடி). நவகிரகங்களில் இது புதன் தலம்.

திருவிழா: வைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை

அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

பொது தகவல்
இத்தலத்தில் பூமிபாலகர் பெருமாள் வேதசார விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டலமாக (மரக்காலைத் தலையின் அடியில் வைத்துசயனத்தில் உள்ளார்) அருள்பாலிக்கிறார்.

திருக்கோயிலின் சிறப்பம்சங்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து வடகிழக்காக தாமிரபரணி ஆற்றின் வடகரை பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பளவில் இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் பூமி பாலகப் பெருமாள் காட்சி தருகிறார். புஜங்க சயனம் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார். மலர் மகள் நாச்சியார், பூ மகள் நாச்சியார் என்ற தாயார் திரு உருவங்கள் பெரியதாக இருக்கின்றன. புளியங்குடி வல்லி என்ற உற்வச தாயாரும் எழுந்தருளி இருக்கிறார். பெருமாளின் பாதங்களை வெளிப்பிரகாரத்தில் இருந்து ஒரு ஜன்னல் வழியாக பார்க்க வேண்டும். தோஷம் நீக்கும் தலம் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கின தலம் இது. வசிஷ்ட புத்திரர்களால் சபிக்கப்பட்ட ஒருவர் சாப விமோசனம் பெற்ற திருப்பதி இது. வேதம் மணக்கும் நாவால், நம்மாழ்வார் இந்த காசின வேந்தனை பாடி பரவியிருக்கிறார்.

தலவரலாறு:

ஸ்ரீமந் நாராயணன் ஒருமுறை திருமகளோடு தனித்து உலாவருவதை கண்ட பூமி தேவி கோபம் கொண்டு பாதாள உலகத்திற்கு சென்றாள். உடனே திருமாலும் ஸ்ரீதேவியும் சென்று சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். பாதாள லோகம் சென்ற களைப்பு தீர பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் இருக்க பாதங்களின் அருகில் தேவியர் இருவரும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர். பூமிதேவிக்கு அருளியதால் பூமிபாலன சேத்திரம் என்னும் பெயர் வழங்குதலாயிற்று. பெருமாளுக்கு காசினி வேந்தர் என்னும் பெயர் உண்டாயிற்று. பின்னர் மருவிக் காய்சினவேந்தர் ஆயிற்று. சாபவிமோசனம் வருணன், நிருதி, தருமராஜன் ஆகியோர் பெருமாளை வழிபட்டு பேறு பெற்றனர். வசிஷ்டரின் மகனான சக்தி முனிவரை யக்ஞசர்மா என்பவர் சரியான மரியாதை கொடுக்காமல் போனதால் சக்தி முனிவர் அவரை அரக்கனாக மாற சாபமிட்டார்.

பிறகு இந்த சாப விமோசனம் நீங்க ஒரு வழியும் சொன்னார். இந்திரன் இந்த இடத்தில் ஒரு யாகம் செய்வதற்கு வருவான். அப்போது அதை நீ கெடுக்க முற்படுவாய். அப்போது திருமால் தன் கதையினால் உனக்கு சாப விமோசனம் தருவார் என்றார் சக்தி முனிவர். சக்தி முனிவர் சொன்னபடியே பின்னொரு சமயம் இந்திரன் இங்கு யாகம் செய்ய முற்படும் போது அரக்கனாக மாறியிருந்த யக்ஞசர்மா அதை கெடுக்க முற்பட அப்போது அங்கு தோன்றிய திருமால் தன் கதையால் அரக்கனை அடிக்க – யக்ஞசர்மா, அரக்க சாபத்தில் இருந்து விடுதலை பெற்றார்.

கல்வி வளம் பெருக இந்த கோவிலில் பெருமாளின் திருவடியில் இருந்து தாமரை கொடி தனியாக கிளம்பி சென்று சுவற்றிலுள்ள பிரம்மாவின் தாமரை மலரோடு சேர்ந்து கொள்வது போன்ற அரிய காட்சியை இப்போதும் காணலாம்.

பெருமாளுக்கு அப்பம் நைவேத்தியம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, நீராஞ்சன விளக்கேற்றி (பச்சரிசி பரப்பி, அதில் தேங்காயில் நெய்யூற்றி விளக்கேற்றுதல்) வழிபட்டால், திருமணத் தடை அகலும்; பச்சைப் பயறு தானம் செய்தால், கல்வியும் ஞானமும் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெரியவர்கள் இட்ட சாபத்தில் இருந்து விலகவும், கோபத்தினால் நல்லோரை விட்டு விலகி அவதிப்படுவது விலகவும், குடும்ப பிரச்சினை அதிக அளவுக்கு சென்றுவிடாமல் தடுக்கவும், உற்றார், உறவினர்கள் தொடர்ந்து அன்பு காட்டவும், குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்ந்து நடந்து மகிழ்ச்சியை உண்டு பண்ணவும் இந்த தலத்திற்கு வந்து பெருமாளை பிரார்த்தனை செய்தாலே போதும்.

நெல்லை, திருச்‌செந்தூரிலிருந்து பேருந்தில் சென்று தரிசிக்கலாம். வரகுணமங்கையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து – 32 கி.மீ., அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, திருச்செந்தூர்.

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter