இது 108 திவ்யதேசங்களில், 91 வது திவ்ய தேசம். பழம்பெருமை மிக்க பாரம்பர்ய வரலாறு இந்தத் தலத்துக்கு உண்டு. இந்தக் கோயில், திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் அடைந்த 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 91வது திவ்ய தேசமாகும். தங்காலமலை மேல் அமைந்துள்ள இது குடைவரைக் கோவிலாகும். இக்கோவில் அமைந்துள்ள மலையின் மீதே சிவன் மற்றும் முருகனுக்குக் கோவில்கள் உள்ளன. பெருமாளின் சன்னதியில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகிய நான்கு தாயார்கள் உள்ளனர். ஜாம்பவதியை இத்தலத்தில் வைத்தே பெருமாள் திருமணம் செய்தார்.
திருப்பாற்கடலில் பகவான் நாராயணன் சயனித்திருந்தார். அப்போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவரிடையே தங்களில் `யார் சிறந்தவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. மூவரின் தோழிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுடைய தேவிகளின் பெருமைகளைச் சொல்லி இவரே சிறந்தவர் என வாதிட்டனர். விவாதம் முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. இந்தச் சூழலில் தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்கும்பொருட்டு ஶ்ரீதேவி தங்காமலை வந்தார். இங்கு, செங்கமலை நாச்சியார் என்ற பெயரில் இறைவனை நோக்கிக் கடும் தவம் செய்தார். தவத்தை மெச்சி, அவர் முன் தோன்றிய பெருமாள், ‘நீயே சிறந்தவள்’ எனக் கூறி, ஸ்ரீதேவியை ஏற்றுக்கொண்டார். இந்தத் தலத்தில் திருமகள் தங்கியதால் திருத்தங்கல் எனப் பெயர் பெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தங்காமலை மீது திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. இது 108 திவ்யதேசங்களில், 91 வது திவ்ய தேசம். பழம்பெருமை மிக்க பாரம்பர்ய வரலாறு இந்தத் தலத்துக்கு உண்டு. இந்தக் கோயில், திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. இங்கு, மூலவர் நின்ற நாராயணப்பெருமாள் மேல் நிலையில் நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இவருடன் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாவேதி ஆகிய மூவரும் உடன் இருக்கின்றனர். தாயார் செங்கமலத்தாயார் தகச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். மூலவர் நின்ற நாராயணப் பெருமாள் எனும் பெயரிலும், உற்சவர் `திருத்தங்கலாப்பன்’ என்ற திருப்பெயரிலும் வழிபடப்பெறுகிறார்.
இந்தத் திருக்கோயிலின் பிரதான வாயில் தெற்குப் பக்கமாகவும் மற்றொரு வாயில் கிழக்குப் பக்கமாகவும் அமைந்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக நுழைவு வாயில் புழக்கத்தில் இல்லை. தெற்கு வாயிலில் அமைந்திருக்கும் பதினெட்டு படிகளின் வழியாகத்தான் ஏறிச் செல்லவேண்டும். முதலில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல் மண்டபம், மேற்கூரையுடன் நம்மை வரவேற்கிறது.
மூலவர் : நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன், திருதண்கால் அப்பன்)
உற்சவர் : –
அம்மன்/தாயார்:செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி,அன்னநாயகி,ஆனந்தநாயகி, அமிர்தநாயகி)
தல விருட்சம் : –
தீர்த்தம் :பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி
விமானம்: சோமசந்திர விமானம்
ஆகமம்/பூஜை :வைகானஸ ஆகமம்
பழமை :-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: திருத்தங்கல்
ஊர்: திருத்தங்கல்
கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார். முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையிலும், பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடனும் நின்ற கோலத்தில் உள்ளார். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தில் மட்டுமே. நாகதோஷம் நீக்கும் தலமுமாம்!
இத்தலம் அமைந்துள்ள மலையிலேயே சிவ பெருமான் , முருக பெருமானுக்கும் கோயில்கள் உள்ளன.
மேற்கே சற்றுத் தாழ்வான பகுதிக்குச் சென்றால் `பாபநாச புஷ்கரனி’ எனும் அழகான திருக்குளத்தை காணலாம். இது ஒரு காலத்தில் பராமரிப்பின்றி இருந்திருக்கிறது. இப்போது, குளத்தில் தூர்வாரி பராமரிக்கின்றனர். குளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குளத்தில் கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளின் சேர்க்கை இருப்பதால், இரவு நேரங்களில் தேவர்கள் குளிப்பதற்காக இங்கு வருகின்றனர் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், பக்தர்கள் இங்கு குளிப்பதற்கு மட்டும் அனுமதியில்லை. இங்குள்ள குடைவரைக்கோயில் காண்போரைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது.
பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவியை மணம்புரிந்தருளிய திருத்தலம். மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்த தலம் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் தலம். இத்திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் மைசூர் நரசிம்மர் ஆலயத்தில் உள்ளது.
இங்குள்ள தாயாருக்கு தினமும் திருமஞ்சனமும் பெருமாளுக்குத் தைலக்காப்பும் சாத்தப்படுகிறது. நீண்ட நாள்களாகத் திருமணமாகாதவர்கள் இங்கு வந்து பெருமாளை வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்குப் பட்டு சாத்தி, வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரும். இந்தக் கோயிலில் வைகாநஸ ஆகமப்படியே பூஜைகள் நடக்கின்றன. இங்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும், பெண்கள் இந்தத் திருத்தலத்துக்கு வந்து, வழிபாடு செய்கின்றனர். சொர்க்க வாசல் திறப்புக்கு இரவிலிருந்தே பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூர்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். தோஷம் நீக்கும் தீர்த்தகுளம் நின்ற பெருமாள் கோவில் தலத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி முருகன் சன்னதியை சுற்றிவர சர்வ தோஷங்களும் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில். விருதுநகரில் இருந்து ஆமத்தூர், கரிசெரி வழியாக சுமார் 24 கிலோ மீட்டர் பயணித்தாலும், அல்லது சிவகாசியில் இருந்து 4 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடையலாம்.