Saneeswara Temple

To know about Saneeswara Bhagavan in your preferred language, click here >>>>>

Saneeswara Temples

அருள்மிகுவிளக்கொளி பெருமாள் கோயில் அல்லது தூப்புல்,திருத்தண்கா, காஞ்சிபுரம்.

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில் அல்லது தூப்புல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் அட்டபுயக்கரம் கோவிலிலிருந்து மேற்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது.ஆச்சாரியர் ” வேதாந்த தேசிகன்” அவதாரம் செய்த திருத்தலம்.

தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை. குளிர்ச்சி பொருந்திய சோலையைத் தெரிவு செய்து பிரம்மன் வேள்விச்சாலை அமைத்த இடமாதலால் திருத்தண்கா என்றாயிற்று.

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக தூப்புல் பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான திருமால் விளக்கொளி பெருமாள், தீப பிரகாசர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் மரகதவல்லி என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தமாகும். புராண காலத்தில் இக்கோயில் திருத்தண்கா என்று அழைக்கப்பட்டது. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த இக்கோயில் 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றாகும்.

தல புராணங்களின் படி சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்துள்ளார். அப்போது இப்பகுதி தர்பைபுல் நிறைந்த வனப்பகுதியாக இருந்ததால் இப்பகுதி தூப்புல் மற்றும் திருத்தண்கா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. பிரம்ம தேவன் தனக்கு பூலோகத்தில் கோயில் ஏதும் இல்லை என்ற காரணத்திற்காக, சிவபெருமானின் வரம் பெற பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினர். இதற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி இந்த யாகத்தில் இருள் சூழ சாபமிட்டாள். இதனால் மனம் கலங்கிய பிரம்மன் விஷ்ணுவை வணங்க, விஷ்ணுவும் பிரம்மனின் யாகம் தொடர்ந்து நடக்க ஜோதி வடிவாக தோன்றி யாகம் தொடர்ந்து நடக்க செய்தார். டஇதனால் தான் இந்த பெருமாள் விளக்கொளி பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தீபப்பிரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப் பிரகாசர், என்னும் பெயர்களைக் கொண்டு விளங்குகிறார். இறைவி பெயர் மரகதவல்லி. இத்தலத் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம். விமானம் ஸ்ரீகர விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.
மேலும் இலக்குமி, ஆண்டாள், வேதாந்த தேசிகர் மற்றும் ஆழ்வார் சிலைகளும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஹயக்கிரீவருக்கு தனிக் கோயில் உண்டு. திருமங்கையாழ்வாரால் மட்டும் 2 பாக்களால் பாடல்பெற்ற தலமாகும்.
வைணவ சமய ஆச்சார்யர்களில் ஒருவரான வேதாந்த தேசிகர் அவதரித்த தலம் இந்த தூப்புல் தலமாகும். வேதாந்த தேசிகரின் தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெருமாளை வணங்க, அவரது வேண்டுதலை ஏற்று திருமலையில் ஸ்ரீனிவாசனாக இருக்கும் பெருமாள் தனது வலது கையில் இருக்கும் மணியையே இவருக்கு குழந்தையான வேதாந்த தேசிகராக அவதரிக்க செய்தார் என கூறப்படுகிறது.
இக்கோயிலின் மூலவர் சந்நிதியின் மேல் இருக்கும் விமானம் ஸ்ரீகர விமானம் என அழைக்கப்படுகிறது. தீப பிரகாசர், லட்சுமி தேவி, ஆண்டாள், ஹயக்ரீவர், கருடன் ஆகியோர்களுக்கு தனி சந்நிதி இக்கோயிலில் இருக்கின்றன. வைகாசி மாதத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் கருடன் இத்தலத்தில் எழுந்தருளி வேதாந்த தேசிகருக்கு காட்சி தரும் வைபவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அறிவும், ஆரோக்கியமும் நிறைந்த குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள். கல்வியில் குழந்தைகள் சிறந்த நிலையை அடைய விரும்புபவர்கள் இத்தலத்தில் வந்து வணங்கினால் இந்த இரண்டு பேறுகளும் கிட்டும் என்பது பக்தர்களின் கருத்து. பிராத்தனை நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

கோயில் அமைவிடம் அருள்மிகு விளக்கொளி பெருமாள் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தூப்புல் என்கிற ஊரில் அமைந்துள்ளது.

ஆரோக்கியம், அறிவாற்றல் மிக்க குழந்தை பிறக்க இக்கோயிலில் வழிபட வேண்டும்

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter