அன்பிற்குரிய கும்ப ராசி நண்பர்களே தற்போது வரை சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து உடல் ரீதியாக சில தொல்லைகள் கொடுத்தாலும் பெரும்பான்மையாக நற்பலன்களை வழங்கிக்கொண்டிருந்த சனி பகவான்,
சார்வரி வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ஞாயிற்று கிழமை அதாவது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு சென்று உங்கள் ராசிக்கு விரையஸ்தானத்தில் பெயர்ச்சியாகி, ‘விரைய சனி’ தோஷத்தை ஏற்படுத்துகிறார். இந்த சனி பெயர்சியானது உங்களுக்கு எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் காண்போம் வாருங்கள்.
கும்ப ராசி சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
- கணவன் மனைவி ஒற்றுமை கூடும்
- புத்திர பாக்கியம் கிட்டும்
- உத்தியோக ரீதியாக உல்லாசமாக வெளிநாட்டு பயணம் அமையும்
- கருமமே கண்ணாக உழைத்தால் வெற்றி நிச்சயம்
- முதலீட்டின் மூலம் லாபம் கிடைப்பது அரிது
- மாணவர்களுக்கு படிப்படியாக கல்வியில் முன்னேற்றம் கிட்டும்.
விரிவான பலன்கள்
கும்ப ராசிக்கு அயன சயான் சுகபோகத்தை சுட்டிக்காட்டும் விரய ஸ்தானத்தில் சனி சஞ்சாரம் செய்து தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தையும், ருண ரோக மற்றும் சத்துரு ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். உத்யோகத்தில் உயர்ந்த நிலையை கொடுத்து தனம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அந்தஸ்தான நிலைக்கு உயர்த்தப் போகிறார் கும்பராசி அன்பர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை கொடுத்து வெளிநாட்டு உல்லாச பயணத்தையும், அயல்நாட்டு உத்யோகத்தையும் ஏற்படுத்தி கொடுக்கப் போகிறார்.
வருமானம்/ தொழில்
கும்ப ராசி அன்பர்கள் ஏழரைசனியின் காலகட்டத்தில் கருமமே கண்ணாக உழைப்பதினால் மட்டுமே பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு நல்ல பொருளாதார முன்னேற்றம் அடையமுடியும். மருத்துவ தொழில் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில் செய்பவர்கள் நல்ல பொருளாதார மேன்மை அடையமுடியும். பணத்தை முதலீடாக வைத்து தொழில் புரிபவர்கள் பொருளாதார நிலையில் அதிக லாபம் ஈட்ட முடியும் மேம்படும் அரசு உத்தியோகத்திலிருப்ப வர்களின் பொருளாதார நிலை மேம்படும். அறிவியல் பயின்ற மாணவர்களுக்கு தேவை அதிகரித்து வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் சட்டத்துறை வல்லுனர்களுக்கு பெரு நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அயல் நாடுகளுக்கு சுற்றுலா அமைத்துக் கொடுக்கும் பயண ஏற்பாட்டாளர்கள் நல்ல தொழில் மேன்மையை அடைவார்கள் மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் நல்வாழ்வியல் பயிற்றுனர்களுக்கு தேவை அதிகரிக்கும். அவர்களுக்கு நல்ல உத்தியோக மேன்மை மற்றும் வருவாய் அதிகரிக்கும்.
ஆரோக்கியம்:
கும்ப ராசி நண்பர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை தலைதூக்கும்.
உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதன் மூலம் தூக்கப் பிரச்சனையிலிருந்து விடுபட இயலும். குழந்தைகளுக்கு பேச்சு தாமதப்படும். மூத்த குடிமக்களுக்கு இருதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். கவனம் தேவை. பெண்கள் உடல் பருமன் பிரச்சனைகளால் அவதிப்படலாம். ஆரோக்கியம் மற்றும் சரிவிகித உணவுகளை உட்கொள்வதன் மூலமும் நடைபயிற்சியில் ஈடுபடுவதன் மூலமும் உடல் பருமன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
குழந்தைகள்
புத்திரபாக்கியம் தாமதமாகிக் கொண்டுள்ள தம்பதிகளுக்கு புத்திரபாக்கியத்தை கொடுக்கும் நிலையில் சனி பகவான் திகழ்கிறார். காதல் உறவில் உள்ளவர்களுக்கு உறவில் இணக்கம் அதிகரிக்கும். திருமண முயற்சி வெற்றியடையும். கணவன் மனைவிக்கு இடையில் அன்யோன்யம் கூடும். முதியவர்களுக்கு மருத்துவ செலவுகள் கூடும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உத்யோக உயர்வு ஏற்பட்டு நிதி நிலையில் ஏற்றம் உண்டாகி குடும்ப பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்.
கல்வி
குழந்தைகளுக்கு சனிப்பெயர்ச்சி யின் ஆரம்ப காலகட்டத்தில் கல்வியில் மந்தமான போக்கு நிலவினாலும் அக்டோபர் 2021 க்கு பிறகு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அறிவியல் துறை மாணவர்கள் பிற துறை மாணவர்களை காட்டிலும் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொல்லியல் மற்றும் கடற் பொறியியலில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வெளி நாடுகளில் தேவை அதிகரிக்கும்.
பரிகாரம்
ஊரின் ஒதுக்கு புறமாக இருக்கும் கோவில்களுக்கு எண்ணை தானம் செய்வது பாத யாத்திரை செல்வது மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதன் மூலம் மேலும் சிறப்பான பலன்களை சனி பகவான் வழங்குவார்.
பொதுவாக கும்ப ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல பலன் மற்றும் அசுப பலன் கலந்து தரும் காலமாக அமையும் எனக் கூறி, தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம். நன்றி வணக்கம்.