அன்பிற்குரிய ரிஷப ராசி நண்பர்களே!
தங்களுக்கு இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம சனி தோஷத்தை கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான், தற்போது சார்வரி வருடம், மார்கழி மாதம், 12ம் தேதி ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி, சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு செல்லும் சனி பகவான் அதாவது உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
இதுவரை தாங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சியில் தடைகளையும் எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும், முன்னேற்றம் இன்மையும் சந்தித்து வந்தீர்கள்.
மேலும் தொழில்ரீதியாக கடுமையான நெருக்கடியை சந்திப்பதும், பொருளாதார ரீதியாக பல தடைகளையும் சந்தித்து கடுமையான குழப்பங்களில் இருந்த தங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியினால் என்ன பலன்கள்.
ரிஷபம் சனிப் பெயர்ச்சி பொதுப்பலன்கள்
- உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்
- தொழில் தாமதம் நீங்கும்
- உங்களுக்கு தொழில் வளர்ச்சி உண்டு
- பதவி உயர்வுகள் கிடைக்கும்
- கணவன் மனைவி உறவு சிறக்கும்
- தடைபட்ட திருமணம் நடக்கும்
- திருமண வாழ்வில் தொழில், வேலைக்கு பிரிவுகளை சந்திப்பார்
- கல்வியில் படிப்படியாக மேன்மை கிட்டும்
- ஆரோக்கியத்தில் கவனம் தேவை
விரிவான பலன்கள்
இதுவரை தங்களிடம் இருந்த சிந்தனை ஆற்றலை விட தற்போது அதிநுட்பமான சிந்தனை ஆற்றலைப் பெறுவீர்கள். தங்களின் எண்ணங்கள் விரிவடையும் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். உழைப்பு, முயற்ச்சி அதிகம் ஆகும். நீண்ட நாளாக தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியத்தை இந்த காலத்தில் சாதித்துவிடுவீர்கள்.
வருமானம்
பொருளாதார நிலையில் தேக்க நிலையை சந்தித்து வந்த ரிஷப ராசி அன்பர்கள் சனியின் மகரப்பெயர்ச்சிக்குப் பின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பர். வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கு வங்கிக் கடன் அமைய சிரமப்பட்டவர்களுக்கு எளிதில் வாங்கி கடன் அமையும். பூர்வீக சொத்துக்களின் மூலமாக தன வருவாயை பெருக்கிக்கொள்ள முடியும். தரகு தொழில் செய்பவர்கள் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள் யூக வணிகம் பங்கு வர்த்தக தொழில் புரிபவர்கள் மிதமான தன லாபமும் மிதமான பொருளாதார முன்னேற்றம் அடைவார்கள்.
ஆரோக்கியம் :
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெண்கள் உடலுக்கு நலம் தரும் உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் நல்ல உடல்நிலையை பேணிக்காக்க முடியும். குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முதியோர்களின் உடல்நலனில் அக்கறை தேவை. சிலருக்கு காது, மூக்கு, தொண்டை போன்றவற்றில் ஆரோக்கிய குறைவு ஏற்படலாம்.
திருமண வாழ்க்கை குடும்பம்
திருமண வாழ்வில் தொழில், வேலைக்காக பிரிவினை சந்திப்பர். குடும்பத்தை பொறுத்தவரை கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு விலகும். நீண்ட நாட்களாக காதல் மணம் புரிய காத்திருந்தவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். முதியவர்கள் ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு உகந்த காலமாகும்.
குழந்தைகள்
புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு சற்று தாமதமாகவே புத்திரப்பேறு உருவாகும். குழந்தைகள் தொழில் வளம் பெருகும். வேலைகள் எதிர்பார்த்திருந்தால் வேலைகள் கிடைக்கும். பொதுவாக குழந்தைகள் இல்லாமல் எதிர்பார்க்கும் தம்பதிகளுக்கு மட்டுமே தாமதம் என எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் இருக்கும் தம்பதிகளுக்கு, குழந்தைகளுக்கு ஏற்றமான வாழ்க்கையை இந்த சனி பெயர்ச்சி கொடுக்கும்.
ரிஷபம் வேலை, தொழில்
அடிமைத் தொழில் புரிபவர்களுக்கு சிறந்த காலகட்டமாக உள்ளது. தரகு கமிஷன், தகவல் தொடர்பு, விளம்பரம் மற்றும் பயணம் சார்ந்த தொழில் புரிபவர்களுக்கு இது ஒரு முன்னேற்றமான காலகட்டமாகும். புதிய தொழில் தொடங்குவதில் தாமதத்தை சந்தித்து வந்தவர்கள் எளிதில் புதிய தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலை ஏற்படும்.
வீடு வாகனம்
இப்பெயர்ச்சியினால் நீங்கள் நீண்ட நாள் ஆசைபடி கடன் பட்டு வீடு கட்டுவீர்கள். கடன் பட்டு வீடு கட்டும் யோகம் உண்டாகும். அல்லது பழைய வீடு வாங்கி புதுப்பிப்புகள். பழைய வாகனங்கள் லோன் போட்டு விலைக்கு வாங்குவீர்கள்.
ரிஷபம் கல்வி
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு படிப்பில் சிறிது கவனச்சிதறல்கள் ஏற்படலாம். மார்ச் மாதத்திற்கு பிறகு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு படிப்பில் கவனம் ஏற்படும். கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு உயர்க்கல்வி சேர்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டு கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது தாமதத்தால் பிள்ளைகளுக்கு மன விரக்தி ஏற்படும் மனம் தளராது முயற்சித்தால் உயர்கல்வியில் மிக உயர்ந்த நிலையை அடையலாம்
பரிகாரம்
உங்களின் இஷ்ட தெய்வ கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்வது மேலும் அதேபகுதியில் இருக்கும் மனை நிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதுவதால் மேலும் சிறப்பான சுப பலன்களை சனி பகவான் வழங்குவார்
பொதுவாக ரிஷப ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல மேன்மையைத் தரும் காலமாக அமையும் தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம் நன்றி வணக்கம்.