அன்பிற்குரிய மேஷ ராசி அன்பர்களே! தற்போது வரை தங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த சனி பகவான், சார்வரி வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி, சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு செல்லும் சனி பகவான் அதாவது உங்கள் ராசிக்கு பத்தாமிடம் செல்லும் சனி பகவான் அதாவது ஜீவன ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதுவரை தாங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சியில் தடைகளையும் எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும், முன்னேற்றமின்மையும் சந்தித்து வந்தீர்கள். மேலும், தொழில் ரீதியாக கடுமையான நெருக்கடியை சந்தித்து, தொழில் செய்யலாமா? அல்லது வேண்டாமா? என்ற அளவிற்கு கடுமையான குழப்பங்களில் இருந்த தங்களுக்கு, இந்த சனிப் பெயர்ச்சியினால் என்ன பலன்கள் நடைபெற போகிறது என்பதை பார்ப்போம் வாருங்கள்.
மேஷம் சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
- உங்களுக்கு தொழில் வளர்ச்சி உண்டு
- பதவி உயர்வுகள் கிடைக்கும். திருமணம் தடைபட்டு பின் நடக்கும்
- திருமண வாழ்வில் தொழில், வேலைக்காக பிரிவுகளை சந்திப்பார் கணவர், (அ) மனைவிக்கு எதிர்பார்த்த வேலை அல்லது தொழில் கிடைக்கும்.
- நிதிநிலை சிறக்க வைப்பார் தொழிலில் வளர்ச்சி அளிப்பார்.
விரிவான பலன்கள்
தொழிலில் நல்ல மேன்மை அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். உழைக்க கொஞ்சம் கூட தயங்க மாட்டீர்கள் ஆகவே இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது திண்ணம்.
வருமானம்
வருமானத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு பல வழிகளில் வருமானம் வர காத்துக் கொண்டிருக்கிறது எனக் கூறலாம். மேலும் உங்களுக்கு தடைபட்ட பணம் மேலும் நிலுவையில் உள்ள தொகைகள் அனைத்தும் வசூலாகும் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்கள் செய்து வருமானம் ஈட்டுவீர்கள். வெளிநாடு தொடர்பான வருமானம் உண்டு. மாற்று மொழி பேசக்கூடிய நபர்களிடமிருந்து வருமானம் பெறுவீர்கள் பொதுவாக இந்த சனி பெயர்சியானது உங்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொடுக்கும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீர்மப் பொருட்களால் உபாதைகள் உண்டாகும் சைனஸ் அலர்ஜி போன்ற பாதிப்புகள் வரக்கூடும். உடலில் ஒருவகையான சோர்வு அசதி உண்டாகும். தோல் தொடர்பான பிரச்சினைகள் உருவாகும் கவனம். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது சிறப்பு.
திருமண வாழ்க்கை குடும்பம்
குடும்பத்தைப் பொறுத்தவரை சற்று குழப்பங்கள் உண்டு குடும்பத்தை விட்டு வெளியில் சென்று பொருளீட்ட வேண்டிய நிலை ஏற்படும். திருமணத்திற்கு தடை தாமதங்கள் உண்டு இருப்பினும் விடாமல் முயற்சி செய்தால் திருமண சுபகாரியங்கள் கைகூடும் மேலும் குடும்பத்தைவிட்டு, பொருளாதாரத்திற்காக பிரிந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் குறைவு நண்பர்களால் பிரச்சினைகள் உண்டு கவனமாக இருக்கவேண்டும். கூட்டுத்தொழில் இந்த சனி பெயர்ச்சியால் பாதிப்பு உண்டு. ஆகவே, கூட்டு தொழிலில் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தைகள்
புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு சற்று தாமதமாகவே புத்திரப்பேறு உருவாகும். நீர்க்கட்டிகள் போன்றவற்றால் புத்திரப்பேறு தாமதமாகும். குழந்தைகளுக்கு வெளிநாட்டு யோகம் உருவாகும். குழந்தைகளுக்கு தொழில் வளம் பெருகும். குழந்தைகள் வேலைகள் எதிர்பார்த்திருந்தால் வேலைகள் கிடைக்கும். பொதுவாக குழந்தைகள் இல்லாமல் எதிர்பார்க்கும் தம்பதிகளுக்கு மட்டுமே தாமதம் என எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் இருக்கும் தம்பதிகளுக்கு குழந்தைகளுக்கு ஏற்றமான வாழ்க்கை இந்த சனிப் பெயர்ச்சி கொடுக்கும் என கூற வேண்டும்.
வீடு & வாகனம்
இப்பெயர்ச்சியினால் தாங்கள் ரொம்ப நாளாக பயன்படுத்தாமல் இருந்த நிலத்தில் வீடு கட்டும் யோகம் உண்டாகும். அல்லது பழைய வீடு வாங்கி புதுப்பிப்பீர்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஒப்பந்த வீட்டிற்கு செல்வார்கள் இடமாற்றம் உண்டு. பழைய வாகனங்கள் ரொக்க விலைக்கு வாங்குவீர்கள் தங்களின் வீட்டைப் புதுப்பிப்பீர்கள் போன்ற பலன்களும் நடைபெறும்.
மேஷம் கல்வி
பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முயற்சித்தாலும் கவனச்சிதறல்கள் முற்றிலும் தவிர்க்கப்படாமல் போகலாம் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெற அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்வியில் வெற்றியை அனுபவிக்க முடியும் வெளிநாட்டு கல்விக்கு முயற்சி செய்பவர்கள் எதிர்பார்த்த வாய்ப்பை எளிதில் பெற முடியும். ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடிப்பார்கள்.
பரிகாரம்
நீங்கள் தொழில் செய்யும் இடம் அல்லது வேலை செய்யும் இடத்திற்கு அருகில் இருக்கும் கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்வது, மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதுவதால் மேலும் சிறப்பான பலன்களை சனி பகவான் வழங்குவார்
பொதுவாக மேஷ ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல மேன்மையைத் தரும் காலமாக அமையும் எனக் கூறி தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்க வேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம் நன்றி வணக்கம்.