அன்பிற்குரிய விருச்சிகம் ராசி நண்பர்களே,
உங்களுக்கு இதுவரை ஏழரை சனி தோஷமாக கடந்த ஏழரை வருடமாக பாடாய்படுத்திய சனி பகவான், தற்போது ஏழரை சனி தோஷத்தில் இருந்து, சார்வரி வருடம் மார்கழி மாதம் 12 ம் தேதி ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி, சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு சென்று ஏழரை சனி தோஷமானது விலகுகிறது. இதுவரை தாங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சியில் தடைகளையும் எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும், முன்னேற்றம் இன்மையும் சந்தித்து வந்தீர்கள் மேலும் தொழில்ரீதியாக கடுமையான நெருக்கடியை சந்திப்பதும், பொருளாதார ரீதியாக பல தடைகளையும் சந்தித்து கடுமையான குழப்பங்களில் இருந்த தங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியினால் என்ன பலன்கள் நடைபெற போகிறது என்பதை பார்ப்போம் வாருங்கள்.
விருச்சிகம் ராசி சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
- பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள்
- கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்
- கைத் தொழில் சிறக்கும்
- ஏற்றுமதித் தொழிலில் லாபம் கிட்டும்
- உத்தியோகத்தில் உயர்வு கிட்டும்
- இயற்பியல் துறை மாணவர்கள் பிரகாசிப்பார்கள்
விரிவான பலன்கள்
விருச்சிகராசிக்கு வீரம், வீரியம் மற்றும் இளைய சகோதரத்தை குறிக்கும் மூன்றாம் ஸ்தானத்தில் சனி தன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். மூன்றாம் ஸ்தானத்தில் நின்று பூர்வ புண்ணியம் மற்றும் புத்திரத்தை குறிக்கும் ஐந்தாம் ஸ்தானத்தையும், பாக்கியத்தை குறிக்கும் ஒன்பதாம் ஸ்தானத்தையும், விரயத்தை குறிக்கும் பன்னிரெண்டாம் ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார்.
விருச்சிகராசிக்கு மூன்றாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் மிகுந்த நற்பலன்களை விருச்சிக ராசிக்காரர்களுக்கு அளிக்கவிருக்கிறார். விருச்சிகராசி அன்பர்கள் எடுக்கும் அனைத்து புது முயற்சிகளிலும் வெற்றிபெறக்கூடிய அமைப்பை இந்த சனி பெயர்ச்சியானது ஏற்படுத்தி கொடுக்கப்போகிறது. தரகு, பிரயாணம் மற்றும் வெளிநாடு தொடர்புடைய தொழில்களில் ஏற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கபோகிறார்.
வருமானம்
கைத்தொழில் செய்பவர்கள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். ஏற்றுமதி தொழிலில் புதிய முதலீடுகள் செய்பவர்கள் நல்ல லாபத்தை அடையலாம். தகவல் தொடர்புத்துறையில் பணியில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலைக்கு வர சனிப்பெயர்ச்சி வழி செய்கிறது கொடுக்கும் தந்தைக்கு வகையில் கொடுக்கப்போகிறது நல்ல இந்த வகை பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி சனி பெயர்ச்சி உதவ போகிறது. இளயசகோதரத்திற்கு நல்ல ஒரு பொருளாதார முன்னேற்றத்தை கொடுக்கப்போகிறது.
ஆரோக்கியம்
சனிப்பெயர்ச்சியின் துவக்கத்தில் ஆண்களுக்கு கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். பெண்களுக்கு கர்பப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது வரலாம். மே 2021 க்கு பிறகு விருச்சிக ராசிக்காரர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வயதானவர்கள் சரியான தூக்கம் வராமல் கஷ்டப்பட நேரிடும். தியானத்தின் மூலமாக தூக்கமின்மையை சரி செய்யலாம். குழந்தைகளின் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.
திருமண வாழ்க்கை குடும்பம்
சொத்துப் பிரச்சனை காரணமாக பிரிந்து இருந்த சொந்தங்கள் ஒன்றுகூடுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே நல்லுறவு ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பலப்படும். வேலை குழந்தைகளிடம் நேரம் பளு காரணமாக ஒதுக்க முடியாமல் இருந்த பெற்றோர்கள் சனி பெயர்ச்சிக்கு பிறகு அதிக நேரம் ஒதுக்குவார்கள். பல வருடம் காதலித்து வந்தவர்களுக்கு திருமணம் நடைபெறும். மூத்த குடிமக்களுக்கு வயது மூப்பு காரணமாக உடல் உபாதைக்காக மருத்துவ செலவுகள் ஏற்படும். மூத்த குடிமக்களை குடும்ப உறுப்பினர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.
குழந்தைகள்
சனிப்பெயர்ச்சிக்கு பிறகு குழந்தைகளின் அறிவு ஆற்றல் கூடும் குழந்தைகளிடம் கிரகிக்கும் தன்மை கூடி படிப்பில் நல்ல முன்னற்றம் காண்பர். வணிகவியல் மற்றும் கணினி துறை மாணவர்களின் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். நாட்டில் இயற்பியல் ஆராய்ச்சி மாணவர்களின் தேவை அதிகரிக்கும். இயற்பியல் துறை ஆராய்ச்சிப் படிப்பு படிப்பவர்கள் தங்களின் ஆராய்ச்சி படிப்பை வெற்றிகரமாக முடிப்பார்கள்.
வேலை, தொழில்
உத்தியோகத்தில் உள்ளவர்கள் உத்தியோக உயர்வுக்கு முயற்சி எடுத்து நல்ல நிலைக்கு உயர தகுந்த காலகட்டமாக இருக்கிறது. தரகு மற்றும் கமிஷன் போன்ற துறைகளில் தொழில் செய்பவர்களுக்கு தொழிலை மேம்படுத்திக்கொள்ள உகந்த காலகட்டமாக இருக்கிறது. எழுத்துத்துறையை சார்ந்தவர்கள் புதிய படைப்புகளை எழுதி வெளியிடுவதற்கு சனி பெயர்ச்சி உறுதுணையாக நிற்கிறது. பரம்பரை தொழில் அல்லது தந்தையின் தொழிலையே கொண்டவர்களுக்கு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு கோள்சார சனி உறுதுணையாக இருக்கிறது.
பரிகாரம்
உங்களின் இஷ்ட தெய்வ கோவில்களுக்கு எண்ணை தானம் செய்வது, மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதன் மூலம் சிறப்பான சுப பலன்களை சனி பகவான் வழங்குவார்
பொதுவாக விருச்சிக ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல மேன்மையைத் தரும் காலமாக அமையும் தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம். நன்றி வணக்கம்.