அன்பிற்குரிய மீன ராசி நண்பர்களே தற்போது வரை சனி பகவான் தசம ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ரீதியாக நிறைய இழப்புகளை கொடுத்த சனிபகவான் சார்வரி வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ஞாயிற்று கிழமை அதாவது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு சென்று தங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி பலன்களை வழங்க இருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி ஆனது எங்களுக்கு எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காண்போம் வாருங்கள்.
மீனம் சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
- கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் கூடும்.
- குழந்தை பாக்கியம் கிட்டும்.
- பூர்வீக சொத்து சேரும்.
- உத்தியோகத்தில் வேலை சுமை குறையும்.
- வருமானம் உயரும்.
- மாணவர்களுக்கு விரும்பிய துறையில் சேர்க்கை கிடைக்கும்.
விரிவான பலன்கள்
மீன ராசிக்கு, அனைத்து லாபங்கள் மற்றும் மனதின் ஆசைகள் நிறைவேறும் ஸ்தானத்தை குறிப்பிடும் 11ம் வீட்டில் தனது சஞ்சாரத்தை துவங்குகிறார். மீன ராசிகாரர்களுக்கு மிகவும் சாதகமான ஸ்தானத்தில் நின்று யோகப் பலன்களை சனி பகவான் வழங்க உள்ளார். மீன ராசிக்கு 11ம் வீட்டில் நின்று ஜாதகரை சுட்டிக்காட்டும் ராசியையும், குழந்தை மற்றும் பூர்வ புண்ணியத்தை சுட்டிக்காட்டும் ஐந்தாம் வீட்டையும், ஜீவனம் மற்றும் ஆயுளை சுட்டிக்காட்டும் 8ம் வீட்டையும் பார்வையிடுகிறார். மீன ராசிக்கு, தொழில் மேன்மையும், திருமண யோகத்தையும், குழந்தை பாக்கியத்தையும், நினைக்கும் காரியங்களில் வெற்றியையும் சனி பகவான் தரப்போகிறார்.
வருமானம்/ தொழில்
இந்த சனி பெயர்ச்சியானது மீன ராசி நண்பர்களுக்கு பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கு பேருதவி புரியும். நிதி மற்றும் நீதித்துறையிலிருப்பவர்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடல் சார்ந்த உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கூடிய உத்தியோக உயர்வு கிடைக்கும். யூக வணிக தொழில்களான பங்கு வர்த்தகம் மற்றும் பொருள் வர்த்தகத்தில் நல்ல பண லாபத்தைப் பார்க்க முடியும். நிலம் மற்றும் சொத்து சார்ந்த முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும்.
அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உத்தியோகத்தில் இருந்த வேலைச் சுமை குறைந்து உத்தியோக உயர்வு ஏற்படும். மீன் பண்ணை தொழிலில் ஈடுபடுபவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். எண்ணை, கடலை வியாபாரம் செய்பவர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர் ரியல் எஸ்டேட் தொழிலில் மந்த நிலை காணப்படும். தகவல் தொடர்பு, தரகு மற்றும் விளம்பரத்துறையில் பணிபுரிபவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில்நிமித்தமாக அலைச்சல் அதிகரிக்கும்.
ஆரோக்கியம்
உயர் ரத்த அழுத்தம் அவதிப்பட்டு வந்த மீன ராசி நண்பர்கள், உடல் எடையை குறைத்து இயல்பான ரத்த அழுத்த நிலைக்கு வருவார்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கால் மூட்டு பிரச்சனைகளால் அவதிப்பட்ட ஆண்களுக்கு குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உணவில் கவனம் தேவை. மூத்த குடிமக்களுக்கு ஞாபக மறதி ஏற்படலாம்.
திருமண வாழ்க்கை குடும்பம்
கணவன் மனைவிக்கிடையில் அன்யோன்யம் கூடும். குழந்தைகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். காதலர்களுக்கிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நல்லிணக்கம் கூடும். திருமணம் தாமதப்பட்டவர்களுக்கு திருமணத் தடை நீங்கி திருமண முயற்சிகள் கைக்கூடும். நீண்ட நாள் குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி பூர்வீக சொத்து சேர்க்கை ஏற்படும். குழந்தைகளின் படிப்பு முனேற்றத்திற்கு தாயாரின் உதவி கிடைக்கும்.
கல்வி
உயர்நிலைக் கல்வி வரை படிக்கும் மாணவர்கள் படிப்பில் நாட்டம் அதிகரித்து பள்ளி இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவர். கல்லூரி செல்லப்போகும் மாணவர்களுக்கு தாங்கள் விரும்பிய பாடத்தில் அனுமதி கிடைக்கும். மருத்துவ படிப்பில் சேர நினைக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவர். வேதியியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மாணவர்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவார்.
பரிகாரம்
தாங்கள் தொழில், அல்லது வேலை செய்யும் இடத்தில் இருக்கும் கோவில்களுக்கு எண்ணை தானம் செய்வது, மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதுவதால் மேலும் சிறப்பான பலன்களை சனி பகவான் வழங்குவார்.
பொதுவாக மீன ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல பலன்கள் மட்டும் தரும் காலமாக அமையும் எனக் கூறி உங்களுக்கு சனி பகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம். நன்றி வணக்கம்.