அன்பிற்குரிய தனுசு ராசி நண்பர்களே,
தற்போது வரை தனுசு ராசிக்கு ‘ஜென்மசனியாக’ இருந்த சனி பகவான், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல தொல்லைகள் வழங்கிக்கொண்டிருந்த சனி பகவான், சார்வரி வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல்,
சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு சென்று, தங்கள் ராசிக்கு 2ல் சனி பெயர்ச்சி ஆகி தற்போது குடும்ப சனிதோஷமாக பெயர்ச்சி ஆகிறார். இந்த சனியானது தங்களுக்கு எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காண்போம் வாருங்கள்.
தனுசு ராசி சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்.
- திருமணத் தடைகள் நீங்கும்.
- குழந்தை வரம் கிட்டும்
- உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வு கிட்டும்
- திரைத் துறையினருக்கு அங்கீகாரம் கிட்டும்
- வேதியியல் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவார்கள்.
விரிவான பலன்கள்
தனுசு ராசிக்கு தனம் மற்றும் குடும்பத்தை சுட்டிக்காட்டும் இரண்டாம் ஸ்தானத்தில் சனியின் சஞ்சாரம் தொடங்குகிறது. இராசிக்கு இரண்டாம் ஸ்தானத்தில் சனி நின்று சொத்துக்களை குறிக்கும் சுகஸ்தானத்தையும், ஆயுளை குறிக்கும் அஷ்டம ஸ்தானத்தையும், உத்யோகம் மற்றும் லாபங்களை குறிக்கும் 1ஆம் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். தனுசு ராசி அன்பர்களுக்கு ஏழரை சனி காலகட்டத்தில் பாத சனி எனும் நிலையில் சனியின் சஞ்சாரம் அமையப் போகிறது. ஒருவர் ஏழரை சனியின் கால கட்டங்களில் நீதி தவறாமல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்களேயானால் சனி பகவான் மிகுந்த நற்பலன்களையே ஜாதகரை அனுபவிக்க செய்கிறார். தனுசு ராசி நண்பர்களுக்கு பாத சனியானவர் உத்தியோகத்தில் நல்ல ஒரு திருப்புமுனையையும் தன நிலையில் உயர்வையும் ஜாதகரை அனுபவிக்க செய்யபோகிறார். சொந்த வீடு அமையாதவர்களுக்கு சொத்து சேர்க்கையையும் திருமணம் தாமத மாணவர்களுக்கு திருமணத்தையும் நடத்தி வைக்கும் நிலையில் சனியின் சஞ்சாரம் அமையப்போகிறது.
வருமானம்/ தொழில்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கிடைக்காமல் இருந்த சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் வரும். தரகு மற்றும் கமிஷன் தொழிலில் நல்ல லாபம் உண்டு. பேராசிரியராக பதவி வகிக்கின்றவர்களுக்கு நல்ல பொருளாதார முன்னேற்றம் உண்டு. மனைவி மூலமான பண லாபம் உண்டு. மனைவி மூலமாக குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உத்தியோக உயர்வு ஏற்படும். விளம்பரத்துறை மற்றும் திருமண தகவல் மையம் போன்ற தொழில் செய்பவர்களுக்கு தொழில் மேன்மையுடன் தொழிலில் நல்ல லாபம் ஈட்டமுடியும். அரசுத்துறையில் அதிகாரி அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலை மற்றும் திரைத்துறையினருக்கு சமூகத்தில் நல்ல அங்கிகாரம் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.
ஆரோக்கியம்:
தனுசு ராசி நண்பர்களுக்கு கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் அல்லது கழுத்து நரம்பு பாதிப்பால் வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு மனவிரக்தி மற்றும் மன இறுக்கத்தினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தியானம் செய்து மன இறுக்கத்திலிருந்து விடுபடலாம். குழந்தைகளுக்கு சளி தொந்தரவுகள் அடிக்கடி வந்து மறையும். குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவு பழக்க வழக்கத்தின் மூலமாக கிருமி தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்
திருமண வாழ்க்கை குடும்பம்
திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடைபெறும். காதல் உறவில் இருப்பவர்களுக்கும் திருமணம் கூடிவரும் அமைப்பாக இந்த சனி பெயர்ச்சி இருக்கப் போகின்றது. கணவன் மனைவிக்கு இடையில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து இணக்கமான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பிறப்பு தாமதபட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். குழந்தைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும்.
குழந்தைகள், கல்வி
தனுசு ராசி குழந்தைகள் படிப்பில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தகவல் தொடர்பு மற்றும் விசுவல் கம்யூனிகேஷன் படிப்பு படிப்பவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று முன்னிலை வகிப்பவர் வேதியியலில் ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று உயர்ந்த பதவியில் சேர்வார்கள். சிவில் சர்விஸ் தேர்விற்காக இதுவரை தோல்வியை கண்டிருந்தாலும், ஜூன் 2021 க்கு பின் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.
பரிகாரம்
ஊரின் ஒதுக்கு புறமாக இருக்கும் கோவில்களுக்கு எண்ணை தானம் செய்வது, மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர் அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதன் மூலம், மேலும் சிறப்பான பலன்களை சனி பகவான் வழங்குவார்
பொதுவாக தனுசு ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல பலன் மற்றும் அசுப பலன் கலந்து தரும் காலமாக அமையும் எனக் கூறி, உங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம். நன்றி வணக்கம்.
BLOG 11 : மகரம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்
அன்பிற்குரிய மகர ராசி நண்பர்களே தற்போது வரை சனி பகவான் விரையஸ்தானத்தில் அமர்ந்து நிறைய பொருள்விரையம், அலைச்சல்களையும், உடல் ரீதியாக பல தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான், சார்வரி வருடம், மார்கழி மாதம் 12ம் தேதி, ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து தனது ராசி வீடான மகர ராசிக்கு வந்து சென்று தங்களுக்கு ஜென்ம சனி தோஷத்தை ஏற்படுத்துகிறார். இந்த ஜென்ம சனியானது உங்களுக்கு எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காண்போம் வாருங்கள்.
மகரம் ராசி சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
- திருமண முயற்சி கைகூடும்
- கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும்
- குழந்தைகளின் மந்த நிலை நீங்கும்
- கடன் பிரச்சினைகள் தீரும்
- தொழிலில் முன்னேற்றம் கிட்டும்
- சில துறையைச் சார்ந்த மாணவர்கள் சாதனைகளைப் புரிவார்கள்
விரிவான பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்யவிருக்கிறார். உங்கள் ராசிக்கு ‘ஜென்மசனி’ எனும் சிறப்பு அந்தஸ்துடன் சனியின் சஞ்சாரம் நிகழப்போகிறது. மகர ராசிக்கு, ‘தனுஸ்தானம்’ என்று சொல்லக்கூடிய ஜென்ம ராசியிலேயே சனியின் சஞ்சாரம் தொடங்குகிறது. ஏழரைசனியில் ‘ஜென்மசனி’ எனும் சிறப்பு அந்தஸ்துடன் சனியின் சஞ்சாரம் நிகழப்போகிறது. ஜென்மசனியானவர் திருமண முயற்சியிலிருப்பவர்களுக்கு சிறந்த வாழ்க்கை துணையை அமைத்து தருவதில் முக்கிய பங்கு வகிக்க போகிறார். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்ற பாதையை ஜீவனகாரகன் சனி அமைத்து கொடுக்கப்போகிறார். சனீஸ்வரன் கல்விக்காக வெளிநாட்டுக்கு சென்று படிக்க முயற்சி செய்யும் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க போகிறார்.
வருமானம்/ தொழில்
கடன் பிரச்சனையில் சிக்கி தவித்த மகர ராசி அன்பர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி சாதகமான நிலையில் சஞ்சரிப்பது கடன் பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கு உகந்த தருனமாக இந்த சனிப்பெயர்ச்சி விளங்குகிறது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் சேர்த்து தன நிலையில் உயர்வும் ஏற்படும். தரகு, கமிஷன் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழிலில் ஈடுபடுபவர்கள் நல்ல தன லாபத்தை அடையமுடியும். ரியல் எஸ்டேட் தொழிலில் சுமாரான லாபங்களையே எதிர்பார்க்க முடியும். மனைவியின் தன நிலையில் நல்ல உயர்வு ஏற்பட்டு குடும்ப பெருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சனிபெயர்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஜூன் 2021 க்கு பிறகு வேலை பளு குறையும். புதிய சுயதொழில் தொடங்க முயற்சி எடுத்துவரும் நபர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். தொழிலில் நல்ல முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும் வாகனத்தை வைத்து பிரயாணத்தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தகவல் தொடர்பு, கமிஷன் மற்றும் விளம்பரத்துறையில் பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும் உத்தியோக உயர்வும் ஏற்படும்.
ஆரோக்கியம்:
மாணவர்களுக்கு ஒற்றை தலைவலி பாதிப்புகள் வரலாம். வயதானவர்களுக்கு கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டு மறையும். ஆண்களுக்கு கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம். குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெண்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டங்களில் இறுக்கமான மனநிலை காணப்படும். தியானம் மற்றும் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு வர இறுக்கமான மனநிலை மாறி சந்தோஷ மன நிலைக்கு மாறுவார்கள்.
திருமண வாழ்க்கை குடும்பம்
கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமை நிலவும். செப்டம்பர் 2021 காலகட்டங்களில் கணவன் மனைவிக்கு இடையில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு விலகும். காதல் உறவில் இருப்பவர்களில் திருமண முயற்சி வெற்றி பெறும். குழந்தைகள் படிப்பில் மந்த நிலை விலகி கிரகிக்கும் தன்மை அதிகரித்து படிப்பில் நல்ல முன்னேற்றம் கூடும். மூத்த குடிமக்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
கல்வி
இதுவரை மிதமாக படித்துவந்த குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி நன்றாக படிப்பார்கள். கடல் வழி, செவிலியர், மனித வள மேம்பாடு மற்றும் உளவியல் சார்ந்த படிப்பு படிப்பவர்கள் வெற்றிகரமாக படிப்பை முடித்து படிப்பில் சாதனை புரிவார்கள். மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி படிப்பை படிப்பவர்கள் புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து உலக அளவில் சாதனை புரிவார்கள்.
பரிகாரம்
ஊரின் ஒதுக்கு புறமாக இருக்கும் கோவில்களுக்கு எண்ணை தானம் செய்வது, முடி காணிக்கை கொடுப்பது மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதன் மூலம் சிறப்பான பலன்களை சனி பகவான் வழங்குவார்.
பொதுவாக மகர ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல பலன் மற்றும் அசுப பலன் கலந்து தரும் காலமாக அமையும் எனக் கூறி தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம். நன்றி வணக்கம்.