அன்பிற்குரிய சிம்ம ராசி அன்பர்களே ! உங்களுக்கு இதுவரை பஞ்சம ஸ்தானத்தில் இருந்து மனக் குழப்பத்தையும், சோம்பல் தனத்தையும், கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான், தற்போது சார்வரி வருடம், மார்கழி மாதம் 12ம் தேதி ஞாயிற்று கிழமை, அதாவது, 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு செல்லும் சனி பகவான் அதாவது உங்கள் ராசிக்கு சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
இதுவரை மனக்குழப்பத்தையும் சோம்பல்தனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்த சனி பகவான், உங்களை எந்த முயற்சி எடுக்கவும் சோம்பலையும் அந்த முயற்சியில் தடைகளையும் எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும், சந்தித்து வந்தீர்கள். இனி உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சியினால் என்ன பலன்கள் நடைபெற போகிறது என்பதை பார்ப்போம் வாருங்கள்.
சிம்மம் சனிப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்
- மே மாதத்திற்குப் பிறகு குடும்ப ஒற்றுமை கூடும்.
- போட்டிகளில் வெற்றி கிட்டும்.
- உத்தியோக உயர்வு கிட்டும்.
- பொருளாதார நிலை மேம்படும்.
- தொழிலில் புதிய தொடர்புகள் ஏற்படும்.
- ஆரோக்கியத்தில் கவனம் தேவை கல்வியில் பாராட்டு கிட்டும்.
- போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.
விரிவான பலன்கள்
உங்களுக்கு தற்போது வரை பஞ்சம ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்து பஞ்சம சனி தோஷத்தை கொடுத்து பூர்வீக ரீதியாகவும் புத்திரர் ரீதியாகவும் கடுமையான சிரமங்களை கொடுத்து மேலும் மன நிலையில் கடுமையான குழப்பங்களை கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான் தற்போது சத்ரு ஸ்தானத்தில் சென்று மறைவு பெறுகிறார். ஆகவே, இந்த சனி பெயர்ச்சியானது உங்களுக்கு என்ன பலன்களை வழங்கும் என்பதை காண்போம் வாருங்கள்.
எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், தன வருவாயையும், வெளிநாட்டு தன ப்ராப்தியையும் எல்லா போட்டிகளில் வெற்றி கனியை தரக்கூடிய நிலையில், சனி பகவான் 6ம் இட சஞ்சாரமானது வரக்கூடிய இரண்டரை வருடங்களுக்கு சிம்ம ராசி அன்பர்களுக்கு யோக பலன்களை அளிக்க போகிறார்.
பொதுவாக இந்த சனிப்பெயர்ச்சி ஆனது உங்களுக்கு யோகம் என்றாலும் 2021 ஏப்ரல் மாதம் வரை உங்கள் சிந்தனை ஆற்றல் குறைவினால் பல துன்பங்களையும் தடைகளையும் சந்தித்து தான் விடுபடுவீர்கள். தங்களிடம் இருந்த குழப்பமான சிந்தனை ஆற்றல் விலகி அதிநுட்பமான சிந்தனை ஆற்றலைப் பெறுவீர்கள். தங்களின் எண்ணங்கள் விரிவடையும் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். உழைப்பு, முயற்ச்சி அதிகம் ஆகும். நீண்ட நாளாக தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியத்தை இந்த காலத்தில் சாதித்து விடுவீர்கள்.
வருமானம்
வருமானத்திற்காக அதிக முயற்சிகள் செய்தாலும் வரவேண்டிய பணம் 2021 ஏப்ரல் மாதத்தில் தான் சரளமாக வரும் அதுவரை சற்று தடைப்பட்ட வருமானமே. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வின் மூலமாக பொருளாதார மேம்பாடு ஏற்படும். வீடு மற்றும் நிலம் போன்ற சொத்துக்களை வாங்கி விற்கும் தொழில் புரிபவர்கள் எளிதில் சொத்துக்களை விற்று பணமாக மாற்றி அதிக லாபம் ஈட்டமுடியும். பணம் தொழில் செய்பவர்களுக்கு பண முடக்கம் ஏற்படலாம். பண பரிவர்த்தனை செய்பவர்களிடம் கவனம் தேவை. மனைவி மூலமான தனவரவு அதிகரிக்கும்.
ஆரோக்கியம்:
குழந்தைகளுக்கு சளி மற்றும் கிருமி தொற்றினால் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. சுகாதார வாழ்வியல் முறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்திக்கொள்ளலாம். வயதில் மூத்த சிம்ம ராசி அன்பர்கள் நிம்மதியான தூக்கம் வராமல் தவிப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதின் மூலம் நிம்மதியான தூக்கத்தை வரவழைத்துக் கொள்ளலாம். இளவயதினருக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொந்தரவுகள் ஏற்படலாம். மூச்சு பயிற்சியின் மூலம் இந்த தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.
திருமண வாழ்க்கை குடும்பம்
சனிப்பெயர்ச்சியின் தொடக்கத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடையே பணம் சம்மந்தப்பட்ட விசயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மே 2021 க்கு பிறகு குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மற்றும் மனைவி இடையே அன்பு மற்றும் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமணங்கள் நடைபெற தடைகள் நிலவும் இருப்பினும் முயற்சியின் பேரில் திருமணம் வைபவங்கள் நடந்தேறும். கணவன்-மனைவிக்குள் சுப பிரிவினைகள் ஏற்படும். நண்பர்கள் தங்களிடம் இருந்து விலகி புதிய நண்பர்கள் இணைவார்கள் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்காது.
குழந்தைகள்
பூர்வீகத்தில் இருந்த சொத்து பிரச்சனை தீரும். பிள்ளைகளுக்கு இருந்த நேர்த்திக் கடன்களை செலுத்துவீர்கள். குழந்தைகள் பெற்றோர் சொல்படி கேட்டு படிப்பில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.
வேலை, தொழில்
சனியின் சஞ்சாரமனது கடும் உழைப்பைக் குறிக்கும் 6ஆம் பாவத்தில் நிகழ்வதால் வேலை செய்யும் இடங்களில் சிம்ம ராசி அன்பர்களின் உழைப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் உள்நாட்டில் செய்பவர்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் தனது தொழிலை மேம்படுத்திக்கொள்ள முடியும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தரகு தொழில் செய்பவர்கள் தனது தொழிலை விரிவுபடுத்திக்கொள்ள சாதகமான காலகட்டத்தை இந்த சனி பெயர்ச்சி ஏற்படுத்தி கொடுக்கிறது. தொழிலைப் பொறுத்தவரையிலும் பல கிளைகளைக் கொண்டு தொழில்கள் செய்ய முற்படுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி வணிகம் சிறக்கும். தொழிலில் மாற்றம் பதவி உயர்வு கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு.
வீடு வாகனம்
வீடு நிலம் வாகனம் அமைய தடையாகவே இருக்கும். 2022 மார்ச் மாதத்திற்கு மேல் தான் வீடு நிலம் தொடர்பான யோகங்கள் தங்களுக்கு அமையும். தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் குணமாகும். இடமாற்றத்தை சந்திப்பீர்கள்
கல்வி
குழந்தைகள் பொது அறிவு, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற போட்டித்தேர்விற்காக படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பை தரக்கூடிய நிலையில் சனி பகவான் மகர ராசியில் தயாராக இருக்கிறார். உயர்கல்வி படிக்கும் இளைஞர்கள் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற சனிப் பெயர்ச்சி வழி வகை செய்யப்போகிறது. ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும்.
பரிகாரம்
உங்களின் குலதெய்வ கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்வது, மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதால் மேலும் சிறப்பான சுப பலன்களை சனி பகவான் வழங்குவார். பொதுவாக சிம்ம ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல மேன்மையைத் தரும் காலமாக அமையும். உங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம். நன்றி வணக்கம்.