அன்பிற்குரிய கடக ராசி நண்பர்களே! தற்போது வரை சனி பகவான் ரோக ஸ்தானத்தில் அமர்ந்து உடல் ரீதியாக பல தொல்லைகள் கொடுத்தாலும் பெரும்பான்மையாக நற்பலன்களை வழங்கிக்கொண்டிருந்த சனி பகவான், சார்வரி வருடம், மார்கழி மாதம், 12 ம் தேதி ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல், சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு சென்று, தங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி, கண்டகச் சனி தோஷத்தை ஏற்படுத்துகிறார். இந்த சனிப் பெயர்ச்சியானது உங்களுக்கு எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காண்போம் வாருங்கள்.
கடகம் சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
- நிலம், வண்டி, வாகனங்களால் ஆதாயம்
- கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடுகள்
- தொழிலில் உயர்வு நிலை காணலாம்
- பொருளாதார நிலை உயரும்
- பங்கு சந்தை வணிகம் தவிர்க்க வேண்டும்
- கல்வி சிறப்பாக இருக்கும்.
விரிவான பலன்கள்
கடக ராசிக்கு களத்திரம் மற்றும் திருமணம் என்று சொல்லக்கூடிய 7ஆம் ஸ்தானத்தில் சனி சஞ்சாரம் செய்யப்போகிறார்.
சனியின் பார்வையானது பாக்கிய ஸ்தானமாகிய 9ஆம் ஸ்தானத்திலும் ராசியிலும், சுகஸ்தானமாகிய 4ஆம் ஸ்தானத்திலும் விழுகிறது. என்னதான் கண்டசனியாக இருந்தாலும், பாக்கிய ஸ்தானமும் சுகஸ்தானமும் சனியால் பார்க்கப்படுவதால் கடக ராசி அன்பர்கள் கண்டச்சனியை நினைத்து கவலை கொள்ளவேண்டாம். வீடு, வண்டி, நிலம் போன்றவற்றால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு வேலை மற்றும் படிப்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி அதை செயல்படுத்த மிகவும் உதவிகரமான கோள்சார சனி திகழப் போகிறார்.
இதுவரை நீங்கள் தீட்டிய திட்டங்கள் வேகம் தற்போது தடைபடும். நிறைய முயற்சிகள் செய்தால்தான் ஒரு செயலை நிறைவேற்ற முடியும். நீங்கள் செய்யக் கூடிய எந்த ஒரு செயலும் தங்களை விட மற்றவர்கள் பலனடைய அதிக வாய்ப்புகள் உண்டு. ஆகவே, இந்த கண்டகச் சனி காலத்தில் தங்களால் பலர் பயன்பெற பெறப் போவது நிச்சயம். நீங்கள் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் கஜினி முகமது போல் தொடர்ந்து படை எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.
மேலும் தொழில் வளர்ச்சி உண்டு. பதவி உயர்வு உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
வருமானம்/ தொழில்
வெளியூர், வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைப்பவர்கள் சென்று தங்கி வேலை செய்வது சிறப்பு. சுய தொழில் செய்வபர்கள் தங்களது தொழிலை மேம்படுத்திக் கொண்டு நல்ல பொருளாதார முன்னேற்றம் காண்பார்கள். மனைவியின் மூலமாக பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முடியும். பங்கு வர்தகத்தில் சிறிது பின்னடைவும் விரயமும் ஏற்படலாம். தரகுத்தொழில் நல்ல பொருளாதாரத்தை தரும். நிலம் மற்றும் சொத்துக்களின் மூலமாக பொருளாதார முன்னேற்றம் ஏற்பட உகந்த காலகட்டமாகும். உத்தியோக உயர்வை எதிர்பார்த்து காத்து இருந்தவங்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு கூடும். சுய தொழில் செய்வபர்களுக்கு தங்களது தொழிலை மேம்படுத்திக்கொள்ள நல்லதொரு காலகட்டமாகும். யூக வணிகம் ஏற்றத்தை தராது. தரகு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். யூக வணிகம் செய்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது.
ஆரோக்கியம்:
கடக ராசி அன்பர்களுக்கு மனதானது பல்வேறு உணர்ச்சி மாற்றங்கள் ஏற்படும் அமைப்பாக உள்ளது. தினமும் தியானம் செய்வதின் மூலமாக மனதை கட்டுப்பாட்டில் வைதிருக்க முடியும். மே 2019 க்கு பிறகு சீரான மன நிலைக்கு மாறும். ஆண்களுக்கு இருதயம் சமந்தபட்ட பிரச்சனைகள் உருவாகலாம். ரத்த அழுத்தத்தை கட்டுபாப்ட்டில் வைத்து இருப்பது உத்தமம். மேலும் உடல் நலம் சற்று பாதிப்பை ஏற்படுத்தி குணமடைவர் குழந்தைகளுக்கு ஞாபக மறதி குறைபாடு உண்டாகும்.
திருமண வாழ்க்கை குடும்பம்
இந்த காலத்தில் கணவன் மனைவி உறவு சற்று பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது . சனியின் பிரவேசமான ஆரம்ப காலகட்டத்தில் கணவன் கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது மகர ராசி மனைவிக்கு இடையே திருமணம் நடைபெறும் இயல்பிலேயே எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கடக ராசி அன்பர்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தனது மதிநுட்பத்தினால் அடிக்கடி கணவன் மனைவிக்குள் நிகழும் கருத்து வேறுபாட்டை களையலாம் ஜனவரி 2021 க்கு பிறகு கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழல் உருவாகும். மேலும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளியிடம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் திருமணம் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த காலத்தில் கடுமையாக முயற்சித்தால் திருமணம் நடைபெறும்.
குழந்தைகள்
புத்திர பாக்கியம் அதாவது குழந்தைகள் வேண்டி எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த காலமானது சற்று ஏமாற்றத்தை தரும். அடுத்த வருடம் அதாவது மார்ச் 2022 க்கு மேல் புத்திர பாக்கியம் கிடைக்கும். மேலும் இந்த காலத்தில் பூர்வீகத்தில் பாகப்பிரிவினைகள் செய்யவேண்டிய நிலை ஏற்படும். பூர்வீகத்தில் உள்ள சொத்துப் பிரச்சினைகள் தீரும். தொழில் நிலை மிகச் சிறப்பாகவே உள்ளது. குழந்தைகளிடம் விளையாட்டு எண்ணம் விலகி படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். வயதில் மூத்தவர்கள் எல்லாரிடமும் சுமுகமாக பழகுவார்கள். பொதுவாக குழந்தைகளின் படிப்பில் உறுதுணையாக இருப்பார்கள். குழந்தைகளின் கிரகிக்கும் தன்மை கூடும். குழந்தைகளுக்கு இசை, வாய்பாட்டு போன்ற கலைகளில் ஈடுபாடு கூடும். மேற்கல்வி பயில்பவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவர். ஆராய்ச்சி கல்வி பயில்பவர்கள் அரசு உதவித்தொகை பெற்று முன்னேற்றம் பெறுவர். கடக ராசி பெண்கள் படிப்பில் முதன்மை பெறுவர். இளைஞர்களுக்கு கலைத்துறை படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
வீடு வாகனம்
தாய்வழி உறவில் கர்ம காரியங்கள் நடைபெறும். புதிய வீடு கட்ட விரும்புபவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். கட்டிய வீட்டை வாங்குவது நல்லது பழைய வீட்டை பராமரிப்பு செய்வது நல்லது. வீட்டை இடித்துக் கட்டுவது நல்லது புதிய வீடு கட்டுவது மட்டுமே சற்று பாதிப்பை ஏற்படுத்தும் மற்றபடி அனைத்தும் சிறப்பு.
கடகம் கல்வி
பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முயற்சித்தாலும் கவனச்சிதறல்கள் முற்றிலும் தவிர்க்கப்படாமல் போகலாம். கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெற அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்வியில் வெற்றியை அனுபவிக்க முடியும் வெளிநாட்டு கல்விக்கு முயற்சி செய்பவர்கள் எதிர்பார்த்த வாய்ப்பை எளிதில் பெற முடியும். ஆராய்ச்சி அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடிப்பார்கள்.
பரிகாரம்
ஊரின் ஒதுக்கு புறமாக இருக்கும் கோவில்களுக்கு எண்ணை தானம் செய்வது மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதுவதால் மேலும் சிறப்பான பலன்களை சனி பகவான் வழங்குவார்.
பொதுவாக கடக ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல பலன் மற்றும் அசுப பலன் கலந்து தரும் காலமாக அமையும் எனக் கூறி தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம். நன்றி வணக்கம்.