நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், ‘கடல் நாகைக் காரோணம்’ என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் ‘காயாரோகணேஸ்வரர்’. அன்னையின் திருநாமம் ‘நீலாயதாட்சி’ என்னும் ‘கருந்தடங்கண்ணி’. ‘காயம்’ என்றால் ‘உடம்பு’ என்று பொருள்படும். ‘ஆரோகணம்’ என்பதற்கு ‘உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல்’ என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது.

தசரதர் வழிபட்ட சனீஸ்வரர்
சனீஸ்வரர் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலத்தில் ரோகிணி ‘சகட பேதம்’ என்னும் பஞ்சம் உண்டாகும், அயோத்தியை ஆட்சி செய்த தசரதர் தனது நாட்டில் இந்த பஞ்சம் உண்டாவதை முன்கூட்டியே அறிந்தார் எனவே நாட்டு மக்களின் நலன் கருதி அவர் சனீஸ்வரனை எதிர்த்து போரிட சென்றார். அப்போது சூரிய பகவான் அவரிடம் சனியை, வெல்வது எளிது அல்ல என்றும், அவரை எதிர்ப்பதை விட பணிந்து வணங்குவது நல்லது என்றும் அறிவுரை கூறினார். அதன்படி தசரதர் இங்கு சிவனை வழிபட்டு சனீஸ்வரனின் பார்வையிலிருந்துஅருளும்படி வேண்டினார் சுயநலமின்றி நாட்டு நலனுக்காக தன்னையே எதிர்க்கத் துணிந்த அதனை கண்டு மகிழ்ந்த சனீஸ்வரர் அவரை பாராட்டியதோடு பஞ்சம் ஏற்படாமல் அருளினார் இவர் தசரதனின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார் இவருக்கு அருகில் நவக்கிரக மண்டபத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் சிவனை பார்க்கும் விதமாக மேற்கு நோக்கி இருக்கின்றன.

மனித உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்தார் புண்டரீக மகரிஷி. அவரது தவத்தை மெச்சி, அவரது உடலை தன்னுள் ஆரோகணம் செய்து முக்தி கொடுத்தார் ஈசன். இங்கு மூலவர் காயாரோகணேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நெற்றிப் பட்டத்துடன் கூடிய பெரிய சிவலிங்கமாக கிழக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர், அகத்தியர், வசிஷ்டர், கவுதமர், காசிபர், புலத்தியர், ஆங்கிரசர் முதலிய சப்த ரிஷிகளுக்கும், சிவபெருமான் மூல சிவலிங்கத்தில் இருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்த பெரும் புண்ணிய தலம் இதுவாகும். இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் ‘கடல்நாகை’ எனும் நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் ஈசனுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார்.
ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது. மனமகிழ்வுடன் அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். வறுமையில் தவித்த அந்தக் குடும்பம் அன்று பசியால் வாடியது. இருப்பினும் சிவனுக்கு செய்த பணியை நினைத்து அதிபத்தர் திருப்தியடைந்தார்.
மறுநாள் அதிபத்தரின் வலையில் தங்க மீன் கிடைத்தது. அந்த மீனையும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும் கூட விலைஉயர்ந்த தங்க மீனை இறைவனுக்கு தியாகம் செய்த தொண்டை எண்ணி மகிழ்ந்த ஈசன், அதிபத்தருக்கு காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார்.
இந்த நிகழ்வு நடந்தது ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில் ஆகும். நாகப்பட்டினம் நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயத்தில் அதிபத்தருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. அதிபத்தருக்கு ஈசன் அருள் செய்த நிகழ்வை, ஆவணி ஆயில்ய நாளில் திருக்கோவில் அருகில் உள்ள கடலில், படகு மற்றும் மீன் வலையுடன் சென்று நடத்திக் காண்பிக்கிறார்கள்.
ஆவணி ஆயில்ய நாளின் மாலை நேரத்தில், ஆலயத்தில் இருந்து நீலாயதாட்சி அம்மனுடன் காயாரோகணேஸ்வர சுவாமி புறப்படுகிறார். அவரோடு நாகை புதிய கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான அடியவர்களும் வருவார்கள். அப்போது அதிபத்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து கடலுக்குள் எடுத்துச் சென்று, அதிபத்தர் தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வினை நடத்திக் காண்பிக்கிறார்கள்.
பொதுவாக கோவிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவார்கள். பரிகார பூஜைகள் செய்தபின்னர் தான் நடையை திறப்பார்கள். ஆனால் இந்த தலத்தில் மட்டும் நடை திறந்தே இருக்கும். சிவனருள் பெற்ற அதிபத்த நாயனாருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
இறந்தவரின் உடலை ஆலயத்திற்கு முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது.
காசியைப் போல இத்தலத்திலும் முக்தி மண்டபம் உள்ளது. இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபடுவதால் இறப்பிற்கு பின் முக்தி நிச்சயம். வாழும்போது பக்தியுடன் வாழ்ந்தால், நம் வாழ்க்கைக்குப் பிறகு சிவபதம் நிச்சயம். இறந்தவர்களின் ஆன்மா முக்தி பெற, இத்தல ஈசனுக்கு ‘மோட்ச தீபம்’ ஏற்றியும் வழிபடலாம்.
இந்திரனுக்கு உதவி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி அவர்கள் பூஜித்த 7 லிங்கங்களைப் பெற்று ஏழு தலங்களில் வைத்து பூஜித்ததால் மிகச் சிறிய லிங்கமாக இருந்ததால் ‘விடங்கலிங்கம்’ என்றழைக்கப்படுகிறது. ‘சப்த விடங்கலிங்கம்’ என்ற பெயர் பெற்ற தலங்கள் இதில் இத்தலமும் ஒன்று இங்குள்ள லிங்கம் மிகுந்த அழகுடனும் கோமேதகத்தால் செய்யப்பட்டதாக காட்சியளிக்கிறது. எனவே இவரை ‘சுந்தர விடங்கர்’ என்று அழைக்கின்றனர். சிவன் சன்னதிக்கு வலப்புறம் தியாகராஜர்க்கு தனிசன்னதி இருக்கிறது பெரும்பாலான கோயில்களில் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும் இத்தலத்தில் வைகாசி விசாக விழாவின்போது மார்கழி திருவிழா திருவாதிரையன்று சுவாமியின் வலது கை மற்றும் பாதத்தை தரிசிக்க மணியாக அலங்காரம் செய்கிறார்கள் இந்த இரண்டு நாட்கள் மட்டுமே தியாகராஜர்ன் இந்த கோலத்தை தரிசிக்க முடியும்.
நீலாயதாட்சி
இத்தலத்தில் அருளும் அம்பிகை கடல் போன்ற அருள்பவள் ஆக இருக்கிறாள் இதனை உணர்த்தும் விதமாக, இவளது கண்கள் கடல் நிறத்தில் நீளமாக இருக்கிறது எனவே இவள் நீலாயதாட்சி என்றழைக்கப்படுகிறாள். கருந்தடங்க்கன்னி என்றும் இவளுக்கு பெயர் உண்டு இங்கு இவளுக்கு தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதி இருக்கிறது. அம்பிகை இத்தலத்தில் திருமணத்திற்கு முந்தைய கன்னிப் பருவத்தில் காட்சி தருகிறாள் எனவே ஆடிப்பூர விழா இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது முழுவதும் பீங்கானில் செய்யப்பட்ட ரதத்தில் அம்பாள் வீதியுலா செல்வது சிறப்பு. இவளது சன்னதி தேர் போல அமைக்கப்பட்டிருக்கிறது. இவள் தனியாக இருப்பதால் சிவன் அவளுக்கு பாதுகாப்பாக நந்தி தேவரை அனுப்பினார். அவரோ தான் எப்போதும் சிவனை தரிசிக்க விரும்புவதாக கூறினார் எனவே சிவன், அம்பாளிடம் இருந்து கொண்டு தன்னையும் தரிசிக்கும்படி கூறினார். இதன் அடிப்படையில் அம்பாள் எதிரிலுள்ள நந்திக்கு தன் கழுத்தை முழுமையாக திருப்பி சிவன் சன்னதியை பார்த்தபடி இருக்கிறது. நந்தியின் இடது கண் சிவனையும், வலக்கண் அம்பிகையும் பார்த்தபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. எனவே இந்த நந்தியை இரட்டைப் பார்வை நந்தி என்று அழைக்கிறார்கள் கண் தொடர்பான நோய்கள் நீங்க இந்த நந்தியிடம் பிரார்த்தனை செய்யலாம்.
இந்த கோயில் சிறப்பு என்னவென்றால், சுயம்பு மூர்த்தியாக சிவன் மிகவும் மென்மையாகவும் அழகாகவும் தோன்றுகிறார். இந்த கோயில்
மா மரத்தின் பழத்தின் சுவை புளிப்பு, இனிப்பு மற்றும் கசப்பானவை இருக்கிறது.
காயாரோகணேஸ்வரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். தலைமை தெய்வம் கயரோஹனா என்றும் அவரது துணைவியார் நீலாயதாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். இந்த சிவஸ்தலம் கோயில் நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ளது. சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள நாகப்பட்டினத்தில் விஷ்ணுவின் ஒரு திவ்ய தேசம் சன்னதியும் அமைந்துள்ளது. இந்த கோயில் நாகப்பட்டினம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது.