வழுவூர், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் பெரிய ராஜகோபுரத்துடன் உள்ளதுதான் இந்த சிவாலயம் இங்குள்ள இறைவன் சிவ சஹஸ்ரநாமத்தில் மூன்றாவது நாம வழியாகிய கீர்த்திவாசராய நமக என்ற பெயருடையவர். இந்த தலத்தில்தான் ஐயப்பன் பிறந்தாக வரலாறு.

சிவனின் ஆணைப்படி இங்குதான் சனி பகவான் தன்னுடைய வேகத்தை குறைத்துக் கொண்டதாக ஐதீகம். பழங்காலத்தில் 48,000 ரிஷிகள் இங்கிருந்து பூஜை செய்ததாகவும் அவர்கள் பூஜை செய்து அவர்களுடைய சக்திகளை அதிகப்படுத்திக் கொண்டு தாங்கள் அனைவரும் யாருக்கும் கட்டுப்பட மாட்டோம் என்று கர்வம் கொண்டு இருந்தனர். தேவர்கள் இந்த விஷயத்தை சிவனிடமும் விஷ்ணுவிடம் முறையிடுகின்றனர் அவர்கள் இந்த இந்தப் பிரச்சினையை சரி செய்து கொடுக்கிறோம் என்று சிவனும் விஷ்ணுவும் பூலோகம் வருகிறார்கள். அப்போது சிவன் நிர்வாண கோலத்திலும், விஷ்ணு மோகினி கோலத்திலும், அந்த ரிஷிகள் இருக்கக்கூடிய இடத்திற்கு வருகிறார்கள் பெண்கள் அனைவரும் சிவனைப் பார்த்து கவர்ந்து இழுக்கப்பட்டு சிவனுடன் சென்றுவிடுகிறார்கள், அங்கு இருந்த ரிஷிபுத்திரர்களும் சில ரிஷிகளும் விஷ்ணுவான மோகினியை பார்த்து கவர்ந்து இழுக்கப்பட்டு மோகினியுடன் சென்றுவிடுகிறார்கள் இதை அறிந்த ரிஷிகள் இவர்கள் இருவரையும் அழைத்து விசாரிக்கிறார்கள். அப்போது ஒரு ஹோமம் செய்து இதை சரி செய்து விடலாம் என்று ரிஷி ஒருவர் சொல்ல ஹோமம் நடத்தப்படுகிறது அந்த ஹோமத்தத்து பலன்களும் சிவனுக்கே சென்றுவிடுகிறது விஷ்ணுவுக்கு எந்தவித பாதிப்பும்இல்லை அனைத்தையும் சிவனை ஏற்றுக்கொள்கிறார். சிவன் அதிலிருந்து வரும் அனைத்து பலன்களையும் தன்னுடைய ஆபரணமாகவும் கால்சிலம்பாகவும் புலி உடையாகவும் கழுத்தில் அணிந்து இருக்கக்கூடிய நாகமாகும் மாற்றிக் கொள்கிறார். இறுதியில் மதம் பிடித்தயானை ஒன்றை அனுப்பி சிவன் அந்த யானை வயிற்றிற்ககுள் சென்றுவிடுகிறார். உலகமே இருண்டுவிட அதன்பின் சிவன் அந்த யானை வயிற்றை கிழித்துக்கொண்டு கஜசம்கார மூர்த்தியாக வெளியே வர,
480000 சித்தர்களும் இறைவனிடம் மன்னிப்பு கேட்கின்றனர். சிவபெருமான் 1008 லிங்கங்களை வழிபட்டு சாபவிமோசனம் அளிக்கிறார். ஆயிரத்து எட்டு லிங்கங்களை தேடி காலகஸ்திரி வரை சென்றுவிடுகிறார்கள், அங்கே ஒரு மகான் ஒரு கல்லில் 1008 லிங்கம் செதுக்கி வைத்து பூஜை செய்ய சொல்கிறார். அதுவே சகஸ்கர லிங்கமாகவும் இப்போது அந்த ஆலயத்தின் வலப்புறமாகவும் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் மூலவரை தரிசித்தால் கோபம் ஆத்திரம் அனைத்தையும் பகவான் கிழித்துக் கொண்டு வந்து நமக்கு புகழை கொடுக்கிறார் என்பது ஐதீகம். ஏவல் பில்லி சூனியம் அனைத்தையும் அடக்க கூடியவராக இருப்பதால் கேரளாவில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பிச்சாடன் அவதாரத்தில் இருந்த சிவனும்,மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, ஆகையால் சந்திரன்பந்தலில் பார்த்துக் கொள்கின்றனர் அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கவர்ந்து இழுக்கப்பட்டு இருவரும் இணைந்து உறவு கொண்டு பிறக்கிற குழந்தை தர்ம சாஸ்திரத்தை காப்பாற்றும் என்று ஐதீகம். ஆகையால் அங்கு தர்மசாஸ்தாவாக சபரிமலை ஐயப்பன் அங்கே உருவெடுக்கிறார். வழுவூர் மட்டுமே சனிபகவானின் வேகத்தை குறைக்கும் ஒரே ஸ்தலமாக விளங்குகிறது. எப்போதெல்லாம் சந்திரனின் நட்சத்திரம் ரோகிணியில் சனீஸ்வரபகவான் பிரவேசிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் பிரபஞ்சத்தில் மக்களுக்கு பசி, பஞ்சம், பட்டினி, போன்றவற்றால் அவதியுறுவோர் என்பது ஐதீகம். இதே சம்பவம் வழுவூரில் நடைபெற்றது அப்போது சோழ மகாராஜா ஒருவர் ஆட்சி செய்து வந்தார், தன் மக்கள் பசி பட்டினியில் அவதியுறுவது கண்டு சோழ மகாராஜா சனி பகவானிடம் வாக்குவாதம் செய்கிறார். இந்த சோழ மகாராஜா கீர்த்திவாசனின்(சிவபெருமான்) மிகச் சிறந்த பக்தனாக விளங்குகிறார். ஆகையால் அவர் சிவபெருமானிடம் தன்னுடைய மக்கள் படும் அவதியையும் அதற்கு காரணம் சனிபகவான் என்பதையும் முறையிடுகிறார். சிவபெருமான் அவருடைய கோரிக்கையை ஏற்று தனது பூதகணங்களை சனி பகவானிடம் அனுப்புகிறார்.அக்காலத்தில் சோழ மகாராஜா சனிபகவானுடைய ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூர்ச்சையாகி வழுவூர் குளக்கரையில் மயங்கி விடுகிறார். சிவதூதரிடமும் சனிபகவான் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போரிடுகிறார். அப்பொழுது சிவ தூதர்கள் சனிபகவானின் காலை வெட்டி விடுகின்றனர், இதனால் சனிபகவான் அந்தக் கோயிலில் உள்ள ஈசானியமூலையில் விழுந்து விடுகிறார் அதுவரை வேகமாக இருந்த சனி ஈஸ்வர பகவான், அவருடைய அதனுடைய வேகத்தை மந்த படுத்திக் கொள்கிறார். ஆகையால், ஏழரைசனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி, குடும்பசனி, மரணச்சனி, கண்டச்சனி, பொங்குசனி, இவற்றின் வேகத்தை குறைக்கக் கூடிய ஒரே இடமாக வழுவூர் விளங்குகிறது. இத்தலத்தில் சனீஸ்வர பகவான் போரிட்டுவிட்டு வில் அம்புடன் வீற்றிருக்கிறார். எந்த கிரக நிலையுடன் சேர்ந்து சனிதிசை இருந்தாலும் சனீஸ்வரருடைய பார்வையை வலுவிழக்க செய்து அதனுடைய வேகத்தை குறைக்கக் கூடிய இடமாகவும், உலகத்திலேயே ஒரே இடமாக வழுவூர் விளங்குகிறது. இந்த வழுவூர் சேத்திரத்தில் சனீஸ்வர பகவான் வடக்கு திசையில் தெற்கு பார்த்து அமர்ந்து இருக்கிறார். அதாவது கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு குருவைப் போல அமர்ந்திருக்கிறார். இக்கோயிலின் மூலவருக்கு எதிராக இருக்கும் நவகிரகத்தில் குருவும் சனியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதாவது காலபுருஷ தத்துவப்படி ஒன்பதாம் இடத்தில் இருப்பவரும் பத்தாமிடத்தில் இருப்பவரும் தர்மகர்மாதிபதி யோகத்துடன்ஒரே இடத்தில் சாந்தமாக அமர்ந்திருக்கின்றனர்..
