தீரமுள்ளவன் – அரசனிடமிருக்க வேண்டிய நற்குணங்கள் உடையவன் (பாரிஜாதகம்) தேஜஸினாலும், ராஜகுணங்களாலும் உயர்ந்தவன். நல்ல பந்துக்கள் சம்பந்தமுடைய யவன். பொறு எறுமை யுடையவன், அதிக கவுரவமுடையவன், உயர்ந்த வித்தையும் அறிவும் பெற்றவன் (பிரம்மரிஷி) அறிவாளி, முயற்சியுடையோர் திறமையுடையவர், அமைதியானவர், சந்தோஷமானவர், நல்லவர், நம்பிக்கைக்குகந்த மனைவியுயைடவர், திட்டமிட்டு செயல்படுவோம் செல்வந்தர், உபகாரி. (HIPA)
நல்லபந்துக்கள் சம்பந்தமுடையவள், நல்ல தோழர்களுள் உயர்ந்தவன், பொறுமையுடையவன், அதிக கவுரவமுடையவன் இஷ்டப்படி பூசிப்பவன், நல்ல நடவடிக்கையால் கவுரவிக்கப்படுவான். (ஜாதக கணிதம்)
மீன சனி <- சூரியன் -ஒழுக்கக்குறைபாடு, தகாதவழியில் சிறப்பு.
மீன சனி <- சந்திரன் – தாயைப் பிரியக் கூடும். தாயுடன் பாசமிராது. இனிமையாகவும், அமைதியாகவும் பழகுவார் குடும்பம், செல்வமும் சிறப்புமாக அமையும்.
மீன சனி <- செவ்வாய் – கீல்வாதத்தால் பாதிக்கப்படுவார் –
ஜனங்களால் வெறுக்கப்படுவார். அயல்நாடுகளில் வசிப்பார் கஞ்சத்தனம், ஏழையாவார் (சாராவளி).
மீனம் செவ்வாய், சனி – இடுப்பு தொடையில் பாதிப்பு.
நீர்ராசியில் செவ்வாய் சனி ராகு – புற்றுநோய்.
சனி ராகு, கேது – சர்க்கரை நோய்.
நீர்ராசியில் சனி ராகு – கல்லடைப்பு.