அதிக தனமுடையன். நற்குணமுடையவன், நல்ல உடையவன் ஒரு பட்டினம், ஒரு கிராமம் அல்லது சேலைது பிரதானமானவர், அரசனுடைய உத்தியோகஸ்தர் இருப்பாடி நல்ல மரணமடைவான் (பிருஹத் ஜாதகம்) நல்ல மகன் நல்ல மக்கள், நல்ல குடும்பம் அமையும். வசதியும், வாய்ப்பு பெற்ற தம் இறுதி காலம் வரை ஆரோக்கியத்துடன் நிம்மதியா வாழ்வார். (அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்) புத்திர, களத்திர விதை விவரங்களுடையவன், தன் தர்மத்தை அறிந்தவன், வேதப்பொருக உணர்ந்தவன். இனிமையானவன், விவேகம், கிட்சை, தேவதை ஏவல் இவைகளை அறிந்தவன், அதிக சௌக்கியமுடையவன் (பிரம்மரிஷி) முக்கியத்துவம் கொண்டாடுகிறான், சாமர்த்திய மாணவன், கபடமானவன், புகழ் உள்ளவன், அமைதியான், நன்றியுள்ளவன், பாசாங்குகாரன், விசால மனமுடையவன் மனைவியின் தொந்தரவுகள், கடமை தவறாத பிள்ளைகள், பொதுவாக மகிழ்ச்சியுடையவர். (HPA)
விழி மீன தனுவிற் காரி மேவின் மன்னவருக்கன்பன் மொழி அகமுடையான். மைந்தர் திரவியமுள்ளவனாவான் வழிவசமான பெண்டிருள்ளவன் மலர்க்கணோயான் கழிய பெண்டிர் மேல் பட்சம் காட்டிடும் சிந்தையினானே வழிவசமான – தனக்கு ஐக்கியமான மனைவி
கழிய பெண்டிர் – விதவை அல்லது வேசி. (சாதக அலங்காரம்) இந்த ஜாதகன் இராஜசேவை செய்து விசேஷ தனத்தை சம்பாதித்து
புத்திரர் மூலம் சுகத்தையும் அனுபவிப்பான். (சாதக அலங்காரம் தனுசு மீன சனி <-சூரியன் – ஒழுக்கக்குறைபா தகாத வழியில் சிறப்புகளுமேற்படும்.
தனுசு, மீன சனி <- சந்திரன் தாயுடன் சேர்ந்து வாழமுடியாது. தாய் நலம் குறைபாடு தாயைப்பிரியக்கூடும்
தாயுடன் பாசம் இராது. குடும்பம் செல்வமெல்லாம் சிறப்பாக அமையும். இனிமையாகவும், அமைதியாகவும் பழகுவார்.
தனுசு, மீன சனி <- செவ்வாய் (அ) சனி – இடுப்பு, தொடையில் பாதிப்பு.
தனுசு சனி <- செவ்வாய் – கீல்வாதத்தால் பாதிப்பு, பொதுமக்களால் வெறுக்கப்படுவார், அயல்நாடுகளில் வசிப்பவர் கஞ்சத்தனம், ஏழையாவார் (சாராவளி)