மாதுரு சுகமில்லாதவன், தரித்திரன், எப்போதும் கஷ்டப் படுகிறவன், இனிமையாளவன், நற்செய்கையுடையவன் (பிரம்மரிஷி)
பற்கள் அதிகமாக இராது தரித்திரன், மூடன், தாயை விட்டுப் பிரிந்திருப்பவன், புத்திரரில்லாதவன் (பிருஹத்ஜாதகம்)
வாலுறு நண்டிற்காரி மருவிலதாய மகன் பொன்னில்லான் சனவாள், ஞாதுருவினன் மக்கினபல்லன் மூர்க்கன் (சாதக அலங்காரம்) தாயார் காகத்திற்கு நல்லதல்ல. குழந்தை பாக்கியம் நிற்கும் கேடு உண்டாகும். வாழ்க்கை சந்தோஷமாக வராது நினைக்கும் காரியங்களில் வெற்றி பெறுவார். ஆனால், வாழ்க்கை தரத்தில் உயரமுடியாது (அதிர்ஷ்டம் ஜோதிட சாஸ்திரம்) ஏழை, பலவீனமானவன், மெத்தனமானவர், தந்திரம் உள்ளவர் வஞ்சகமானவர், பொறாமை குணம், பிடிவாதம் உள்ளவர். தாயார் நலம் பேணாதவர் (HPA) தரித்திரன், நல்லோரிடம் அபிமான முடையவன், எப்போதும் கஷ்டப்படுகிறவன், தாய் பிரிவு உடையவன், இனிமையானவன், நற்செய்கை உடையவன் உபத்திரவமுடையவன் (ஜாதக கணிதம்)
கடகத்தில் சனி பகை – வாதநோய்
கடக சனி + <- சூரியன் – வாதரோகம்
கடக சனி <- சூரியன் – சிறு வயதில் தகப்பனாரை தாயை பிரிவார் சுகபோகங்கள் குறையும். எம்.ஜி.ஆர், ஹிட்லர்.
கடக சனி + சந்திரன் – இளமையில் தாயை இழப்பர்.
கடக சனி <- செவ்வாய் – அரசால் அல்லது தெய்வ சகாயத்தினால் பணக்காரராவார். தேக ஆரோக்கியத்தை நன்கு பேணி திடகாத்திரமாக இருப்பார், வேலையாட்கள், ஆபரணங்கள் உடையவர். கெட்ட உறவினர்களையும் பெண்களையும் விரும்புவார். (சாராவளி) ஜான் கென்னடி, எம்.ஜி.ஆர். அடால்ப் ஹிட்லர். சார்லி சாப்ளின், சஞ்சய்காந்தி.
4 மதிபர் சனி, கடகராசி <- செவ்வாய் – சர்.சிவி ராமன் இருதய தொந்தரவு லால்பகதூர் சாஸ்திரி – மாரடைப்பினால் மரணம்.
நீர்ராசியில் செவ்வாய் – சனி – ராகு – புற்றுநோய்.
கடகசனி – செவ்வாய் – ராகு இளமையில் தாய் மறைவு.
சனி + ராகு TB கணித மேதை –
ராமானுஜம்.
சனி + ராகு, கேது – கல்லடைப்புநோய்.