அன்பிற்குரிய ரிஷப ராசி அன்பர்களே தற்போது வரை தங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் தை மாதம் 3 ம் நாள் செவ்வாய்க்கிழமை 06 நாழிகை 04 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ம் நாள் புதன்கிழமை 17 நாழிகை 07 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். அதன் அடிப்படையில் உங்கள் ராசிக்கு கர்மஸ்தானம் எனும் ஜீவன ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதுவரை தாங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சியில் தடைகளையும் எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும், முன்னேற்றம் இன்மையும் சந்தித்து வந்தீர்கள் மேலும் தொழில்ரீதியாக கடுமையான நெருக்கடியை சந்தித்து தொழில் செய்யலாமா? அல்லது வேண்டாமா? என்ற அளவிற்கு கடுமையான குழப்பங்களில் இருந்த தங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியினால் என்ன பலன்கள் நடைபெற போகிறது என்பதை பார்ப்போம் வாருங்கள்.
பொதுவாக ரிஷப ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல மேன்மையைத் தரும் காலமாக அமையும் தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிராத்தனை செய்து நிறைவு செய்கின்றோம்.. .