About Images

மேஷ ராசி சனி பெயர்ச்சி பலன்கள்

அன்பிற்குரிய மேஷ ராசி அன்பர்களே தற்போது வரை தங்கள் ராசிக்கு தசம ஸ்தானத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் தை மாதம் 3 ம் நாள் செவ்வாய்க்கிழமை 06 நாழிகை 04 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ம் நாள் புதன்கிழமை 17 நாழிகை 07 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். அதாவது தங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி பலன்களை வழங்க இருக்கிறார். இதுவரை தங்கள் தொழிலில் பெரிய வளர்ச்சி இல்லாமல் சற்று மந்தமான நிலையும், தொழிலில் லாபம் இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத நிலையும், உடல் சோர்வு, தாய்க்கு உடல் நிலையில் பாதிப்பு, திருமண வாழ்வில் திருப்தியற்ற நிலை போன்ற நிலைகளை சந்தித்து வந்தீர்கள் மேலும் தொழில் ரீதியாக அடுத்த கட்ட முயற்சி செய்யலாமா? அல்லது வேண்டாமா? என்ற அளவிற்கு கடுமையான குழப்பங்களில் இருந்த தங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியினால் என்ன பலன்கள் நடைபெற போகிறது என்பதை பார்ப்போம் வாருங்கள்.

மேஷம் சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
  • உங்களுக்கு தொழிலில் வளரச்சி, மாற்றம் உண்டு.
  • பதவி உயர்வுகள் கிடைக்கும்
  • தடைபட்ட திருமணம் நடக்கும்
  • திருமண வாழ்வில் ஒற்றுமை மேலோங்கும்.
  • கணவர், (அ) மனைவிக்கு எதிர் பார்த்த வேலை அல்லது தொழில் அமையும்
  • இன்சூரன்ஸ் போன்றவற்றில் நிதிநிலைகளை முடக்க வைப்பார்
  • புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்பை அளிப்பார்

விரிவான பலன்கள்
தொழிலில் மாற்றமும் நல்ல லாப மேன்மையும் அடைவீர்கள், புதிய தொழில் தொடங்குவீர்கள் உழைக்க கொஞ்சம் கூட தயங்க மாட்டீர்கள் ஆகவே இந்த சனிப்பெயர்ச்சி தங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது திண்ணம்.

வருமானம்
வருமானத்தைப் பொறுத்தவரை தங்களுக்கு பல வழிகளில் வருமானம் வர காத்துக் கொண்டிருக்கிறது எனக் கூறலாம் மேலும் தங்களுக்கு தடைபட்ட பணம் மேலும் நிலுவையில் உள்ள தொகைகள் அனைத்தும் வசூலாகும் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்கள் செய்து வருமானம் ஈட்டுவீர்கள் வெளிநாடு தொடர்பான வருமானம் உண்டு மாற்று மொழி பேசக்கூடிய நபர்களிடமிருந்து வருமானம் பெறுவீர்கள் இருப்பினும் அனைத்து பொருளாதாரத்தையும் ஏதேனும் ஒரு வகையில் மொதலீடுகள் செய்து முடக்குவீர்கள். பொதுவாக இந்த சனி பெயர்சியானது தங்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தி மொதலீடுகள் செய்து முடக்த்தை கொடுக்கும்.

ஆரோக்யம்
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வயிறு தொடர்பான உபாதைகள் உண்டாகும், உடலில் ஒருவகையான சோர்வு அசதி உண்டாகும். மலஜலம் தொடர்பான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே, சீரான உணவு முறை வாழ்க்கை முறையை கடைபிடிப்பது சிறப்பு.

திருமண வாழ்க்கை குடும்பம்
கணவன் மனைவிக்கிடையில் அன்யோன்யம் கூடும். குழந்தைகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். காதலர்களுக்கிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நல்லிணக்கம் கூடும். திருமணம் தாமதப்பட்டவர்களுக்கு திருமணத்தடை நீங்கி திருமண முயற்சிகள் கைக்கூடும்.

குழந்தைகள்
நீண்ட நாள் புத்திர பாக்கியம் கிடைக்கபெறாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி பூர்வீக சொத்து சேர்க்கை ஏற்படும். குழந்தைகளின் படிப்பு முனேற்றத்திற்கு தாயாரின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் படிப்பு வேலைக்காக சுப பிரிவை சந்திக்க கூடும்.

வீடு வாகனம்
இப்பெயர்ச்சியினால் தாங்கள் ரொம்ப நாளாக பயன்படுத்தாமல் இருந்த நிலத்தில் வீடு கட்டும் யோகம் உண்டாகும். அல்லது பழைய வீடு வாங்கி புதுப்பிப்பீர்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஒப்பந்த வீட்டிற்கு செல்வீர்கள். இடமாற்றம் உண்டு. பழைய வாகனங்கள் ரொக்க விலைக்கு வாங்குவீர்கள் தங்களின் வீட்டைப் புதுப்பிப்பீர்கள் போன்ற பலன்களும் நடைபெறும்.

மேஷம் கல்வி
உயர்நிலைக் கல்வி வரை படிக்கும் மாணவர்கள் படிப்பில் நாட்டம் அதிகரித்து பள்ளி இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவர். கல்லூரி செல்லப்போகும் மாணவர்களுக்கு தாங்கள் நினைத்த பாடத்தில் அனுமதி கிடைக்கும். மருத்துவ படிப்பில் சேர நினைக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவர். வேதியியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மாணவர்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவர்.

பரிகாரம்
நீங்கள் தொழில் செய்யும் இடம் அல்லது வேலை செய்யும் இடத்திற்கு அருகில் இருக்கும் கோவில்களுக்கு எண்ணை தானம் செய்வது, மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதுவதால் மேலும் சிறப்பான பலன்களை சனி பகவான் வழங்குவார்

பொதுவாக மேஷ ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல மேன்மையைத் தரும் காலமாக அமையும் எனக் கூறி தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிராத்தனை செய்து நிறைவு செய்கின்றோம். .


நன்றி வணக்கம்


இந்த பாரத தேசத்தில் உள்ள 30 சனீஸ்வர தலங்களையும் சுத்தி வர புகழ் பெற்ற www.renghaholidays.com அணுகுங்கள்.