அன்பிற்குரிய மீன ராசி அன்பர்களே தற்போது வரை சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து உடல் ரீதியாக சில தொல்லைகள் கொடுத்தாலும் பெரும்பான்மையாக நற்பலன்களை வழங்கிக்கொண்டிருந்த சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் தை மாதம் 3 ம் நாள் செவ்வாய்க்கிழமை 06 நாழிகை 04 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ம் நாள் புதன்கிழமை 17 நாழிகை 07 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். என்ற அடிப்படையில் தங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி விரைய சனி தோஷத்தை ஏற்படுத்துகிறார். இந்த சனி பெயர்சியானது தங்களுக்கு எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காண்போம் வாருங்கள்
.
மீன ராசிக்கு அயன சயன சுகபோகத்தை சுட்டிக்காட்டும் விரய ஸ்தானத்தில் சனி சஞ்சாரம் செய்து தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தையும், ருண ரோக மற்றும் சத்துரு ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். உத்யோகத்தில் உயர்ந்த நிலையை கொடுத்து தனம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அந்தஸ்தான நிலைக்கு உயர்த்தப் போகிறார். மீனராசி அன்பர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை கொடுத்து வெளிநாட்டு உல்லாச பயணத்தையும், அயல்நாட்டு உத்யோகத்தையும் ஏற்படுத்தி கொடுக்கப் போகிறார்.