அன்பிற்குரிய கும்ப ராசி அன்பர்களே தற்போது வரை சனி பகவான் விரையஸ்தானத்தில் அமர்ந்து நிறைய பொருள்விரையம், அலைச்சல்களையும், உடல் ரீதியாக பல தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் தை மாதம் 3 ம் நாள் செவ்வாய்க்கிழமை 06 நாழிகை 04 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ம் நாள் புதன்கிழமை 17 நாழிகை 07 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். இதன் அடிப்படையில் கும்ப ராசியினருக்கு ஜென்ம சனி தோஷத்தை ஏற்படுத்துகிறார். இந்த ஜென்ம சனியானது தங்களுக்கு எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காண்போம் வாருங்கள்
.
சனிபகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்யவிருக்கிறார். உங்கள் ராசிக்கு ஜென்ம சனி எனும் சிறப்பு அந்தஸ்துடன் சனியின் சஞ்சாரம் நிகழப்போகிறது. ஜென்ம சனியானவர் திருமண முயற்சியிலிருப்பவர்களுக்கு சிறந்த வாழ்க்கை துணையை அமைத்து தருவதில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்ற பாதையை ஜீவனகாரகன் சனி அமைத்து கொடுக்கப்போகிறார். சனீஸ்வரன் கல்விக்காக வெளிநாட்டுக்கு சென்று படிக்க முயற்சி செய்யும் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க போகிறார்.