அன்பிற்குரிய கடக ராசி அன்பர்களே ! தங்களுக்கு இதுவரை சப்தம ஸ்தானத்தில் இருந்து கண்டக சனி தோஷத்தை கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான் தற்போது திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் தை மாதம் 3 ம் நாள் செவ்வாய்க்கிழமை 06 நாழிகை 04 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ம் நாள் புதன்கிழமை 17 நாழிகை 07 வினாழிகை அளவில் அதாவது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி அவிட்டம் மூன்றாம் பாதத்திற்கு, அதாவது கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். அதன் அடிப்படையில் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். தங்களுக்கு இதுநாள்வரை கண்டகச் சனி தோஷத்தை கொடுத்து பலருக்கு வீட்டில் தங்க முடியாத நிலையையும் வெளியூர் வெளிநாட்டு யோகத்தையும் கொடுத்து மேலும் ஒருசிலருக்கு கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தி நண்பர்களுக்குள் பிரச்சனைகளையும், கூட்டுத்தொழிலில் சங்கடங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த கண்டக சனி தோஷமானது தற்போது விலகி அஷ்டமச்சனி தோஷமாக மாறி உள்ளது. இந்த அஷ்டம சனி தோஷ காலத்தில் என்ன பலன்கள் மிதுன ராசி அன்பர்கள் அனுபவிப்பார்கள் என்பதை காண்போம் வாருங்கள்