Saneeswara Temple

ஸ்ரீ பவளவண்ணர் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்.

திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது.காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப்பொழுதில் அந்த அரக்கர் கூட்டத்தை அழித்து பெருமாள் ரத்தம் தோய நின்றார். இவ்வாறு ரத்தம் தோய பிரவாளேச வண்ணராக நின்றதால் பிரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார்.இத்தலத்தின் இறைவன் …

ஸ்ரீ வைகுந்தப் பெருமாள் கோயில்,திருப்பரமேச்சுவர விண்ணகரம் திருக்கோவில், காஞ்சிபுரம்.

வைகுந்தப் பெருமாள் கோயில், பல்லவ மன்னன் நந்திவர்மனால், 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலின் மூலஸ்தானம் மூன்று தனிப்பட்ட அடுக்குகளைக் கொண்டது. மூலஸ்தானத்தில், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளோடு, உட்கார்ந்த, நின்ற மற்றும் படுத்த கோலங்களில், விஷ்ணுவின் மிகப் பெரும் திருவுருவச் சிலைகளைக் காணலாம். வருடந்தோறும் விஷ்ணுவின் அருளை வேண்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். இக்கோயிலின் முக்கியமான கவர்ந்திழுக்கும் அம்சமான, “ஆயிரங்கால் மண்டபத்தை” காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், இங்கு வருகின்றனர். இத்தூண்கள் ஒவ்வொன்றிலும் …

ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோயில் – திருக்கள்வனூர், காஞ்சிபுரம்

திருக்கள்வனூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் 55 வது திவ்ய தேசம்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன் ஒரு மூலையில் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மட்டுமே ஆகும். இத்தலத்தில் கிழக்கு நோக்கி நான்கு தோள்களுடன் இறைவன் ஆதிவராகப் பெருமாள், இறைவி அஞ்சிலை வல்லி நாச்சியார் ஆவார். இத்தலத் தீர்த்தம் நித்ய புஷ்கரணி. விமானம் வாமன விமானம் எனும் அமைப்பினைச் சேர்ந்தது. 108 …

ஸ்ரீ திருக்கார்வன்னனார் கோயில், காஞ்சிபுரம்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசம் கோயில்களில் திரு கார்வன்னம் ஒன்றாகும். இந்த கோயில் திரு ஓரகம் (உல்கலந்த பெருமாள்) கோவிலில் உள்ளது. இந்த திவ்ய தேசத்தின் பின்புறத்தில் உள்ள புராணக்கதை என்னவென்றால், ஸ்ரீ நாராயணனாக கார், கருப்பு மேகங்கள். மேகங்கள் உலகிற்கு மழையை வழங்குகின்றன. விஷ்ணுவின் 108 திவ்ய தேசம் கோயில்களில் ஸ்ரீமான் நாராயணன் தான் கருப்பு மேகங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. மூலவர் ஸ்ரீ கல்வார் என்று அழைக்கப்படுகிறார். கோயிலின் தாயார் கோமலவள்ளி தாயார் தாமரையால் …

திருவூரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம்.

காஞ்சி மாநகர் என்றாலே சட்டென்று எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வருவது கைலாச நாதர் திருக்கோயிலும், வரதராஜப் பெருமாள் கோயிலும்தான். ஆனால், கைலாசநாதர் கோயிலுக்கு இணையான சிறப்புகளுடன் ஓங்கி, உயர்ந்து நிற்கிறது வைணவத் திருத்தலமான ‘உலகளந்த பெருமாள் கோயில்’. ’நகரேஷூ காஞ்சி’ என்று போற்றப்பட்ட நகரங்களில் சிறந்த காஞ்சியில் 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாக அமைந்துள்ளது ஆழ்வார்களால் பாடல் பெற்ற உலகளந்த பெருமாள் கோயில். அதுவும் 108 திவ்ய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம், திரு நீரகம் …

ஸ்ரீ கருணாகரப் பெருமாள் – திருகாரகம், காஞ்சிபுரம்.

தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாய் அவதரித்த ஆழ்வார்கள் இந்த திருத்தலங்களை தங்களுடைய பாசுரங்களில் போற்றிப் பாடியுள்ளார்கள். இந்த திவ்ய தேசங்களில் உள்ள பெருமான் மூன்று முக்கிய திருக் கோலங்களில் எழுந்தருளி இருக்கிறார்.கிடந்த திருக்கோலம் அல்லது சயன திருக்கோலம் -27 திவ்ய தேசங்கள்வீற்றிருந்த திருக்கோலம் அல்லது அமர்ந்த திருக்கோலம் – 21 திவ்ய தேசங்கள்நின்ற திருக்கோலம் – 60 திவ்ய தேசங்கள்இந்த திருக்கோலங்களில் இருக்கும் பெருமான் , தன்னுடைய திருக்கமல முகத்தினை நான்கு …

அருள்மிகுவிளக்கொளி பெருமாள் கோயில் அல்லது தூப்புல்,திருத்தண்கா, காஞ்சிபுரம்.

திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில் அல்லது தூப்புல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் அட்டபுயக்கரம் கோவிலிலிருந்து மேற்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது.ஆச்சாரியர் ” வேதாந்த தேசிகன்” அவதாரம் செய்த திருத்தலம். தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை. குளிர்ச்சி பொருந்திய சோலையைத் தெரிவு செய்து பிரம்மன் வேள்விச்சாலை அமைத்த இடமாதலால் திருத்தண்கா என்றாயிற்று. சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக தூப்புல் பெருமாள் கோயில் …

ஸ்ரீ திருவேளுக்கை, ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்,காஞ்சிபுரம்.

திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 47 வது திவ்ய தேசம்.பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். திருமாலின் அவதாரங்களில் ஓருவரான நரசிம்மர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது. காமாட்சிகா …

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் – அஷ்டபுயாகரம் (அஷ்டபுஜம்), காஞ்சிபுரம்

அட்டபுயக்கரம்அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் …

ஸ்ரீயதோத்தகாரி பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில், காஞ்சிபுரம்.

திருவெக்கா,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலம்.பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா விரதத் தலமான காஞ்சிக்கு வந்து, உத்தரவேதி என்னும் யாகசாலையில் யாகம் வளர்த்தார். ஆனால் தனது மனைவியான சரஸ்வதியை விட்டு யாகத்தைத் தொடங்கினர். இதனால் வெகுண்ட சரஸ்வதி உலகை இருளாக்க, நாராயணன் விளக்கொளிப் பெருமாளாகத் திருதன்காவில் தோன்றினர். யாகத்தைத் தொடர்ந்த பிரம்மாவை தடுக்க, சரஸ்வதி சரபம் எனும் பறவை மிருக …