Saneeswara Temple

அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில்(கேது ஸ்தலம்) ,கீழப்பெரும்பள்ளம்,வாணகிரி

ஏறத்தாழ 1900 வருடங்களாக இருந்து வரும் ஒரு கோவில் ஆகும். நவகிரகங்களில் இது கேதுவுக்கு உரியது. சோழ மன்னர்கள் கட்டிய அழகான கோவில். இந்த தலத்தின் வரலாறு என்னவெனில், அசுரர்களும் தேவர்களும் சேர்ந்து பாற்கடலை வாசுகி என்ற நாகத்தைக் கொண்டு, மேரு மலையை சுற்றி மத்தாக உபயோகித்து அமிர்தம் பெற முயற்சி செய்தனர். ஒரு புறம் தேவர்களும் மறுபுறம் அசுரர்களும் இழுத்தனர். மலையைச் சுற்றியதால் வாசுகியின் உடல் புண்ணாகியது. வலி தாங்காது, நாகப்பாம்புவின் தன்மையால், விஷத்தைக் கக்கியது. …

அருள்மிகு. நாகநாதஸ்வாமி கோவில் திருநாகேஸ்வரம், கும்பகோணம்.

பாதாள உலகத்தில் இருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால், இக்கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இத்தலமும் திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கியபோதிலும், நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிராகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கிறார். பொதுவாக, ராகு மனிதத் தலை, பாம்பு உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித …

தர்பரணீஸ்வரர் கோயில், திருநள்ளார் (சனீஸ்வரன் கோயில் – சனி)

தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்,இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆவார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. சனீஸ்வரன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால் இக் கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள். இக் …

அக்னிஸ்வரர் கோயில், (சுக்கிரன் கோயில் – சுக்கிரன்), கஞ்சனூர்.

மனித வாழ்வில் மனநிறைவோடு வாழ மிகவும் அத்தியாவசியமான கிரகம் சுக்கிரன். இந்தக் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நீசமடைந்து பலம் குன்றி இருந்தாலோ அல்லது சுக்கிரன் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஆதிபத்ய தோஷம் பெற்று இருந்தாலோ, அவற்றுக்கெல்லாம் பரிகாரத் தலமாக அமைந்துள்ளது திருகஞ்சனூர் என்ற இத்தலம். சுக்கிரனுக்கு வெண் பட்டாடை சாற்றி, வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு சுக்கிர தோஷத்தில் இருந்து விடுபடலாம். மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனி பகவான், சந்திரன், …

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில், (குரு கோயில் – வியாழன்),திருவாரூர் மாவட்டம்

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும்.இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை. இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக் கொண்டாடப்படுகிறது. நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் …

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், (புதன் கோயில் – புதன்),சீர்காழி

சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாக புதன் பிறந்தார். இவர் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து நவகோள்களில் ஒன்றான கிரகபதவியை அடைந்தார். நான்கு குதிரைகள் கொண்ட தேரினை உடையவர். சந்திரனுக்கு அவிட்டத்தில் உதித்தவர். சுக்கிரனுக்கு மேல் இரண்டு லட்சம் யோசனை தூரத்தில் இருக்கிறவர். சந்திரன் புதனுடன் திருவெண்காடு அடைந்து சுவேதாரண்யப் பெருமானை வழிபட்டு குருத்துரோகம் செய்த பாவத்தையும், இக்சயதுரோகத்தையும் நீங்கப் பெற்றான்.இத்தலத்தில் புதனுக்கு தனிக்கோவில் இருக்கிறது. சுவேதாரண்யப் பெருமானை வழிபட்டு புதன் பகவானை தரிசித்தால் கல்வி அறிவு, பேச்சுத்திறமை, இசை, …

வைதீஸ்வரன் கோயில் (செவ்வாய் கோயில்- செவ்வாய்), நாகப்பட்டினம்.

அங்காரகன் நவக்கிரகங்களில் மூன்றாவதாக குறிப்பிடப்படுபவர்.அங்காரகன் என்பவர் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதி ஆவார். அங்காரகன் என்றால் சிவப்பு நிறத்தவன் என்று பொருள். இந்து தொன்மவியலின்படி, இவர் ஒரு போரின் கடவுளும் பிரம்மச்சாரியும் ஆவார். இவர் பூமாதேவியின் மகனாக கருதப்படுகின்றார். சோதிடத்தின் படி செவ்வாய் பகவான், மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய இராசிகளுக்கு சொந்தக்காரர் ஆவார். முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த …

கைலாசநாதர் கோயில், திங்களூர் (சந்திரன் கோயில்-சந்திரன்), தஞ்சை.

அறிவியல் ரீதியாக பார்க்கும்போது சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் மனிதர்களின் சிந்தனை, செயல்களில் மாறுபாடுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது சித்தர்களும்,வானியல் சாஸ்திர வல்லுநர்கள் கூறியுள்ளனர். சந்திரனை தனது முடியில் சூடி சந்திரசேகரன் என்கிற பெயரில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்படி சிவபெருமானும் நவகிரகங்களில் சந்திர பகவானும் ஒருசேர அருள்புரியும் திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் கோயிலின் சிறப்புகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக …

நவகிரக யாத்திரை

நீண்ட காலமாக, தேவி சிலை மீது அபிஷேக சொட்டுகள் பரவி வருவதால் சிறிய துளைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அபிஷேகத்தின் போது ஒரு நாள் தெய்வத்தின் பாதத்தில் ஒரு துளை இருந்தது, அது தேவி அணிந்த கணுக்கால் சங்கிலியின் அச்சு போலவே தெரிகிறது. எனவே, அதன் பிறகு, அந்த கணுக்கால் சங்கிலியை லலிதாம்பிகாய் தெய்வத்தின் காலடியில் அணிந்ததில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.