திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.
அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் :-
திருக்கச்சி, அத்திகிரி (காஞ்சிபுரம்).
மூலவர்: பேரருளாளன், வரதராஜர், தேவாதிராஜன், தேவப் பெருமாள், அத்தியூரான்.
தாயார்: பெருந்தேவி தாயார், மஹாதேவி
உற்சவர்: வரதராஜ பெருமாள்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: புண்யக்கோடி விமானம்
தீர்த்தம்: அனந்தசரஸ், பொற்றாமரைக்குளம், ஸ்ரீ பாஸ்கர தீர்த்தம், ஸ்ரீ வராக தீர்த்தம், ஸ்ரீ பிரம்ம தீர்த்தம்
மங்களாசாசனம்: பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ பெருந்தேவியார் ஸமேத ஸ்ரீ பேரருளாள (ஸ்ரீ வரதராஜன்) ஸ்வாமிநே நமஹ.
ஊர்: காஞ்சிபுரம்
கச்சி என்பது தமிழ்ச்சொல். காஞ்சி என்பது வடசொல். இவ்வூர் அக்காலத்தில் கச்சி மாநகர் என்றும், பிற்காலத்தில் காஞ்சிபுரம் என்றும் பெயர் பெற்று விளங்குயது.
மேலும், தொண்டை நாட்டின் தலைநகராக விளங்கியது கச்சி மாநகர் என்பது குறிப்பிடத்தக்கது. வைணவர்கள் 108 திவ்யதேசங்களில், மூன்று திவ்யதேசங்களை மட்டும் கோவில், பெருமாள் கோவில், மலை என்று சிறப்பித்துக் கூறுவர்.
அதில் கோவில் என்பது பூலோக வைகுண்டமான திருவரங்கத்தையும், மலை என்பது திருவேங்கடம் என்னும் திருமலை திருப்பதியையும், பெருமாள் கோவில் என்பது காஞ்சி வரதராஜர் கோவிலையும் குறிக்கும்.
கச்சி மாநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருமால் திருத்தலம் என்பதால் “திருக்கச்சி” என்பது பெயர். மேலும், அத்திகிரி என்ற பெயரும் உண்டு. அத்திகிரி என்ற மலை மீது இறைவன் காட்சி தந்து காஞ்சி நகரையே ஆளுகின்றார்.
ஒருமுறை பிரம்மா காஞ்சியில் தன்னையே படைத்த திருமாலை வணங்கி மிகப்பெரிய அளவில் யாகம் நடத்தினார். அச்சமயம் அவருடைய பத்தினியாகிய கலைவாணியை விடுத்து யாகம் செய்யத் தொடங்கினார். இதனை அறிந்த கலைவாணி மிகவும் கோபம் கொண்டு யாகத்தைத் தடுக்க பல வகைகளில் முயற்சி செய்தாள். பிரம்மாவின் வேண்டுகோளின் படி, திருமால் யாகம் தொடர அருள் புரிந்தார்.
அச்சமயத்தில் வசிஷ்டர் உள்ளிட்ட முனிவர்கள் அங்கு வந்து கோபம் கொள்ளாது, உலகத்தின் நன்மைக்காக கலைவாணியும் இணைந்துயாகத்தை நன்முறையில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பின்பு கலைவாணியும் யாகத்தில் கலந்து கொள்ள யாகம் பூர்த்தியானது. உடனே, யாக குண்டத்திலிருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அத்திகிரி என்னும் மலை மீது காட்சி தந்து அருளினார். பிரம்மாவிற்காக வரம் தர வந்த பேரின்பக் பெருங்கடல் என்பதால் இத்தல இறைவனுக்கு “வரதராஜ பெருமாள்” என்பது திருநாமம். பெருமாளுக்கு உகந்த தேவி என்பதால் “பெருந்தேவி தாயார்” என்பது அன்னையின் திருநாமம்.
அத்திகிரி மலையின் கீழ் முகப்பில் அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமி காட்சி தந்து அருளுகிறார். அதுவும் குடைவரை மூர்த்தியாக காட்சி தருகிறார்.
கோவிலின் முகப்பு இராஜகோபுரத்தை கடந்ததும், வடக்கு புறமாக உள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள ஆனந்த புட்கரணி திருக்குளத்தில் இரண்டுநீராழி மண்டபங்கள் உள்ளன.
தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது. அதில் மிகப்பெரிய அத்திமரத்தால் ஆன அத்திவரதராஜ பெருமாள் சயனத் (கிடந்த) திருக்கோலத்தில் குடி கொண்டுள்ளார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியில் எடுத்து வந்து ஒரு மண்டலம் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
பிறகு, மீண்டும் பெருமாள் நீருக்கடியில் உள்ள மண்டபத்திற்கு திரும்பிவிடுவார். இதற்கு முன் 1979 ஆம் ஆண்டு காட்சி தந்து அருளினார். அடுத்ததாக 2019 ஆம்ஆண்டு தரிசனத்திற்காக ஆவலாக இருக்கிறோம் பக்த கோடிகளான நாம் அனைவரும்.
சிருங்கி பேரர் என்னும் முனிவருக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவரும் கௌதம முனிவரிடம் சீடர்களாக மிகவும் அலட்சியமாக இருந்தனர். ஒருநாள் வழிபாட்டிற்காக தீர்த்தம் கொண்டு வந்த போது அதில் பல்லிகள் இறந்து கிடப்பதைக் கண்டு கோபம் கொண்ட முனிவர் பல்லிகளாகும்படி சபித்து விட்டார்.
பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் சாப விமோசனம் பெற்றனர். உங்களை தரிசிக்க வருபவர்கள் எங்களைத் தரிசித்தால் சகல தோசம் நீக்கி அருளும்படி வரம் பெற்றனர்.
அவ்வாறே கோவிலில் உள்ள மூலவர் சன்னிதியின் பின்புறம் உள்ள தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி ஆகியவற்றை தரிசிப்பவர்கள் சகல தோசங்களிலும் இருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.
இத்திருக்கோவிலில் வரம் பெற்ற இருவரே சூரியன் மற்றும் சந்திரன் என்பது ஐதீகம். தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லிகளாக இருக்கும் சூரியன் மற்றும் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும் கிரகண தோசங்களும் விலகி நன்மைகள் உண்டாகும்.
நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.
சித்ரா பௌர்ணமியன்று சுவாமிக்கு பாலாற்றில் திருமஞ்சனத்துடன் பூஜைகள் நடைபெறும். பிறகு சுவாமி, அருகிலுள்ள நடவாவி கிணற்றுக்குள் எழுந்தருள்வார்.
மண்டபம் போன்ற உள் கட்டமைப்பைக் கொண்ட வித்தியாசமான அக்கிணற்றில் பெருமாள் எழுந்தருள்வார். இந்நாளில் மட்டும் கிணற்று நீர் வெளியேற்றப்படும். கிணற்றுக்குள்ளேயே சுவாமி வலம் வருவார்.
இத்திருக்கோவிலில் மூன்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். பூதத்தாழ்வார் – 2 பாசுரம், பேயாழ்வார் – 1 பாசுரம், திருமங்கையாழ்வார் – 4 பாசுரம் என மொத்தம் 7 பாசுரங்கள் பாடியருளியுள்ளனர்.
“கா” – அதாவது பிரம்மா மற்றும் “அஞ்சிதம்” – யார் வணங்கப்பட்டனர் என்று பொருள். பிரம்மா பேரரசரை வரதராஜராக வணங்கியதால், இந்த ஸ்தலம் “காஞ்சி” என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ளது, இது “சின்னா (அல்லது) லிட்டில் காஞ்சிபுரம்” என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் பெரிய (அல்லது) சிவ காஞ்சிபுரத்தில், அனைத்து சிவன் கோயில்களும் காணப்படுகின்றன.
ஸ்ரீ வரதராஜர் கோயில் – காஞ்சிபுரம் அயோத்தியின் மன்னர் சாகரனிஸ், மகன் ஆசாமஞ்சன் மற்றும் அவரது மனைவி சபாமின் விளைவாக, அவர்கள் பல்லிகளாக மாற்றப்பட்டனர் மற்றும் உபமான்யு சொன்னபடி காஞ்சி வரதராஜரை வணங்கியதன் விளைவாக, அவர்கள் இருவருக்கும் அவர்களின் அசல் பதவிகள் கிடைத்தன. இந்த இரண்டு பல்லிகளையும் இந்த ஸ்தலத்தில் ஒரு சிறிய சன்னதியில் காணலாம். இந்த பல்லிகளைத் தொட்டால், அனைத்து வகையான பிரச்சினைகளும் நோய்களும் குணமாகும். இப்போதும் அனைத்து பக்தர்களும் இந்த கோவிலுக்கு வந்து இந்த பல்லிகளை வணங்கி தங்கள் பிரச்சினைகளை குணப்படுத்திக் கொள்கிறார்கள்.
நரசிம்மர் சன்னதி கட்டப்பட்ட முதல் சன்னதி என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்தலத்தின் தீர்த்தம் “சேஷா தீர்த்தம்” மற்றும் நூத்ருக்கல் மண்டபத்தின் (100 தூண் மண்டபம்) வடக்குப் பகுதியில் காணப்படுகிறது. இந்த தீர்த்தம் முழுவதும், ஆதீஷேசன் தவம் செய்தார்.
அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம். Forty ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் வைப்பர். அவர் forty eight நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார். இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்கு பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.
பிரளய காலத்திலும் அழியாத தலம் ஆதலால்- பிரளயசித்து; கம்பை ஆற்றின் வெள்ளம் கண்டு அஞ்சிய அம்பிகை, இறைவனைத் தழுவியதால்- சிவபுரம்; பிரம்மன் தவம் செய்ததால்- தபோவனம்; பிரம்மனது வேள்விக்கு மகிழ்ந்து திருமால் காட்சி தந்த தலம் ஆதலால் விண்டுமாபுரம்; பிரம்மன், திருமால், சிவபெருமான் ஆகிய மூவரும் வசிப்பதால் திருமூர்த்திவாசம்; துண்டீர மகாராஜாவால் ஆளப்பட்டதால் துண்டீரபுரம்; சத்திய சத்தியர், சத்திய சோதகர், சத்திய கற்பர், சத்திய காமர்கள் போன்ற ஞானியர் வாழ்ந்த தலமாதலால் சத்திய விருத க்ஷேத்திரம் ஆகிய பெயர்களுடன் திகழ்கிறது காஞ்சி.
இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாளைக் கிருத யுகத்தில் பிரம்மனும், திரேதா யுகத்தில் கஜேந்திரனும் (யானை), துவாபார யுகத்தில் பிருகஸ்பதியும், கலி யுகத்தில் அனந்தசேஷனும் வழிபட்டு அருள் பெற்றனராம். தவிர, சரஸ்வதிதேவி, நாரதர், ஆதிசேஷன், இந்திரன், பிருகு முனிவர் ஆகியோரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இன்றும், ஆண்டுக்கு இரு முறை- வைகாசி விசாகம் மற்றும் ஆடி மாதம் வளர்பிறை தசமி ஆகிய நாள்களில் ஆதிசேஷன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம்.
வில்லிபாரதத்தின் ‘தீர்த்த யாத்திரை’ சருக்கத் தில் அர்ஜுனன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீவரதராஜர், அஷ்டபுஜ பெருமாள் ஆகியோரை தரிசித்ததுடன், ஏழு நதிகள் மற்றும் தீர்த்தங்களில் நீராடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய்கை ஆழ்வார் மற்றும் ஸ்ரீஸ்வாமி தேசிகன் ஆகியோர் அவதரித்த தலம். பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூரத்தாழ்வான், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீநிகமாந்த மகாதேசிகன், கன்னிகாதானம் தாதாச்சார்யார் சுவாமிகள், அப்பய்ய தீட்சிதர், புரந்தரதாசர், அப்புள்ளார், நடாதூர் அம்மாள் ஆகியோர் பெருமாளைப் போற்றிப் பரவி அருள் பெற்ற தலம்.
ஸ்ரீவரதராஜர்மீது திருக்கச்சி நம்பிகள்- தேவராஜ அஷ்டகமும், வேதாந்த தேசிகர்- வரதராஜ பஞ்சாசத்தும், மணவாள மாமுனிகள்- தேவராஜ மங்களமும் பாடி மகிழ்ந்துள்ளனர்.
அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் நிறுவிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் முதல் தலைவரான தர்மபாலர் முதலான அறிஞர்கள், கல்வியும் ஞானமும் பெற்ற தலம் இது.
.