தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாய் அவதரித்த ஆழ்வார்கள் இந்த திருத்தலங்களை தங்களுடைய பாசுரங்களில் போற்றிப் பாடியுள்ளார்கள். இந்த திவ்ய தேசங்களில் உள்ள பெருமான் மூன்று முக்கிய திருக் கோலங்களில் எழுந்தருளி இருக்கிறார்.
கிடந்த திருக்கோலம் அல்லது சயன திருக்கோலம் -27 திவ்ய தேசங்கள்
வீற்றிருந்த திருக்கோலம் அல்லது அமர்ந்த திருக்கோலம் – 21 திவ்ய தேசங்கள்
நின்ற திருக்கோலம் – 60 திவ்ய தேசங்கள்
இந்த திருக்கோலங்களில் இருக்கும் பெருமான் , தன்னுடைய திருக்கமல முகத்தினை நான்கு திசைகளையும் நோக்கிக்த் திருப்பி அனைத்து இடங்களிலும் இருக்கும் பகதர்களுக்கும் தன்னுடைய திருவருளை வழங்கிக் கொண்டிருக்கிறார் .
மூலவர் : கருணாகரப் பெருமாள்
தாயார் : பத்மாமணி நாச்சியார்
கோலம் : நின்ற கோலம்
விமானம் : வாமன விமானம்
தீர்த்தம் : அக்ராய தீர்த்தம்
மங்களாசனம்: திருமங்கை ஆழ்வார்
ஊர் : காஞ்சிபுரம்.
108 திவ்ய தேசங்களில் இத்தலம் 52 வது திவ்ய தேசமாகும் . தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும் .
உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே இருக்கின்ற திவ்ய தேசமாகும்
இக்கோயின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை , கார்க முனிவர் செய்த தவத்தால் இறைவன் திருக்காட்சியை காட்டி அருளியதாக கருதப்படுகிறது ,இதன் மூலம் திருகாரகம் என்ற பெயர் பெற்றியிருக்கலாம் இன்று நம்பப்படுகிறது . அக்காலத்தில் பெரிய மண்டபங்களுடன் கூடிய பெரிய கோயிலாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் திருமங்கையாழ்வார் ‘உலகமேத்தும் காரகத்தாய் ‘ என்ற மங்களாசனம் மூலம் தெரிகிறது
ஆதிசேஷன் குடை பிடிக்க பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
கோயிலின் வரலாறு சரியாகச் சொல்லப்படவில்லை, மேலும் கார்கா முனிவரின் தவத்தால் முனிவர் ஈர்க்கப்பட்டார் என்று நம்பப்படுகிறது, இதன் மூலம் அவர் திருகாரகம் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம். அந்த நேரத்தில் அது பெரிய மண்டபங்களைக் கொண்ட ஒரு பெரிய கோயிலாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் திருமங்கைல்வாரின் மங்களசனத்திலிருந்து தெளிவாகிறது.