Saneeswara Temple

அருள்மிகு வீரராகவர் திருக்கோயில்,திருவள்ளூர்,சென்னை.

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது.

புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு படைத்த பின்பு உண்ணபவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாக பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர் உண்ட களைப்பு தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். “படுக்க எவ்வுள்” என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று.

ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்கு பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள் தாயாரை மணமுடித்ததாகத் தலவரலாறு.

அதன்பின்னரே பெருமாள் பெயர் மாறிற்று, அதுவரை கிங்கிருஹேசன் எனும் பெயரே பெருமாளுக்கு முக்கிய திருப்பெயராக விளங்கிற்று.

சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் 1 வருடம் தவம் இருந்தார்.தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு ஆகாரத்துக்காக மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார்.வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார்.கிழவரும் புசித்து பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார். முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் 1 வருடம் கழித்து திரும்பவும் தபம் செய்தார். 1 வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க, அதேபோல் அதே கிழவர் வந்து மாவு கேட்க, முனிவரும் தந்தார்.பிறகு படுத்துறங்க அந்த கிழவர் “”எவ்வுள்’ என்று வினவ முனிவரும் தன் இடத்தையே காட்டி “இவ்விடம் படுத்துக் கொள்ளவும்’ என்றார். மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார். முனிவரிடம் “”வரம் கேள்’ என கூற இங்கு வரும் பக்தர்களுக்கு அவரது பிரச்னைகளை நிறைவேற்றி வைக்கும்படி கேட்க, பகவானும் அவ்வாறே அருளி இங்கு எழுந்தருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.

தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம். ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடிநீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். இத்தலத்து ஹிருதாபதணி தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 60 வது திவ்ய தேசம்.

பிரம்மோற்சவம் – தைமாதம் – 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். பிரம்மோற்சவம் – சித்திரைமாதம் – 10 நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். பவித்ர உற்சவம் – 7 நாட்கள் திருவிழா – இத்திருவிழாவிலும் பெருமளவில் பக்தர்கள் கூடுவர் இவை தவிர தை அம்மாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

வைத்திய வீரராகவர் – பிணி தீர்க்கும் வீரராகவர். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும் .குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது. தவிர கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.

பப்ளி துப்பட்டி (மேல் வஸ்திரம் – அங்கி) வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம்.இந்த அங்கி வெளியில் எங்கும் கிடைக்காது. திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும்.இதன் விலை ரூ.300 .இத்தலத்தில் இந்த நேர்த்திகடன் மிகவும் விசேஷமானது.

உருவத்தகடுகளை (வெள்ளி ,தங்கம்) செய்து போடுதல். தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல் , நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தாயாருக்கு 9 கஜ பட்டுப் புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது.

உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றனர்.

இத்திருக்கோயில் திருக்குளம் நோய்தீர்க்கும் திருக்குளமாகவும், பெருமாள் வைத்திய வீரராகவப்பெருமாளாகவும் பக்தர்களால் கூறப்படுகின்றனர்.

மூலவர்: எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள், கிங்கிருஹசன், எவ்வுட்கிடந்தான், வைத்ய வீரராகவர்)

உற்சவர்: வைத்திய வீரராகவர்

அம்மன்/தாயார்: கனக வல்லித் தாயார் (வசுமதி)

தீர்த்தம்: ஹ்ருத்தபாப நாசினி

பிரத்யட்சம்: சாலிஹோத்ர முனிவர், (மது, கைடபன்)

ஆகமம்/பூஜை: பாஞ்சராத்திரம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

பெயர்: திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில்

புராண பெயர்: திரு எவ்வுள், எவ்வுள், கிங்கிருஹரபுரம், எவ்வுள்ளூர் , வீச்சாரண்யச் ஷேத்ரம், புண்யாவார்த்த ஷேத்ரம்

ஊர்: திருவள்ளூர்

இங்குள்ள விமானம் விஜயகோடி. வனம்: வீஷாரண்யம்.

இக்கோயிலின் இறைவன் ”வைத்திய வீரராகவர்” என்றும் அழைக்கப்படுகிறார். தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிசேகம் செய்யப்படுகிறது.

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter