Saneeswara Temple

வரலாறு

வரலாறு

நவநாயகர்களில் என்னை நிறையப் பேருக்குப் பிடிக் காமல் போகிறது. நான் என்ன அத்தனை பயங்கரமானவனா? உண்மையில் நான் அப்படிப்பட்டவன் அல்லன்.

எனக்கு ஆயுளுக்குக் காரகம் அளிக்கப்பட்டு இருப்ப தாலோ என்னவோ, எனக்கு மிகவும் பயப்படுகின்றனர். நான் பாதகமாகச் சஞ்சரிப்பது தெரிந்து கொண்டாலே போதும். எனக்குச் சாந்தி, சங்கல்பம், வழிபாடு ஆகியனபலவும் பணிவுடன் செய்கின்றனர்.

நவக் கிரகங்களைச்  சுற்றுகின்றனர்,  சனிக்கிழமை  விரதம்  இருக்கின்றனர். என்து பூர்வ கதையைச் சிறிது இதன் ஆய்வு செய்து உண்மையைக் காண முயல்வோம்.

நான் சூரியனுடைய இளைய மனைவியான சாயா தேவியின் மைந்தனாவேன். என் அண்ணன் “எமன்’ .

 

நவக்கிரக பரிபாலனத்தில் படைத் தளபதியான அங்காரகனுக்குப் படைக்கலங்களைத் தயார் செய்து கிடங்கில் வைத்துக் காத்துத் தேவைப்படும் போது கொடுத்து உதவக்கூடிய படைக்கலக் கிடங்குக் காப்பாளன் நான் தான், ஆயுள் பல நிர்ணயம் செய்ய உதவுபவனும் தானே.

 

முப்பது ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை. முப்பது ஆண்டுகள் தாழ்ந்தவரும் இல்லை’ என்பது உலகில் வழங்கும் முறையாகிறது. இது என்னை நினைத்துசொல்லப்பட்ட பழமொழியாகும்.

 

நான் ராசிச் சக்கரத்தை ஒரு முறை சுற்றி வர 30 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளுகிறேன். இதில் ஏழரைச் சனியின் காலம் ஏழரை ஆண்டுகளாகும். ஜெனன ராசியிலும் அதற்கு முன்பின் ராசிகளிலும் நான் சஞ்சரிக்கும் காலம் தான் இந்த எழரைச் சனியின் ஆதிக்க காலமாகும். இது வாழ்வையே தலைகீழாக்கி விடுவது தான்.

 

நான் ஜெனன  ராசிக்கு நாலாம் இல்லத்தில் சஞ்சரிக் கூடிய 2 1/2  ஆண்டுகள் அர்த்தாஷ்டமச் சனியின் காலமாகும்.

ஜென்ம ராசிக்கு ஏழில் நான் சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டுக் காலமும், கண்டச் சனியின் காலமாகும்.

ஜென்ம ராசிக்கு எட்டில் நான் சஞ்சரிக்கும் 2 1/2 ஆண்டு காலமும் அஷ்டமச் சனியின் காலமாகும்.

ஆகமொத்தம், இந்த பாதகமான காலம் 15 ஆண்டுகள் ஆகின்றன. மற்ற 5 ஆண்டுகள் ஏதோ ஒரு வகையில் நன்மைகளையே நான் தந்து வருவேன். குறிப்பாக ராசிக்கு 3, 6, 11 ஆம் இடங்களிலிருக்கும் போது நான் செய்யும் நன்மைகள் மிகவும் சிறப்பானவையாகும்.

என் தந்தையாயினும், சூரியனுக்கும் எனக்கும் நல்ல இணக்கம் அறவே கிடையாது.  இதற்குக் காரணம், என் அன்னையான சாயாதேவியை எனது  பெரியம்மா மகன் எமன் எட்டி உதைத்தது தீர விசாரியாமல் மன்னித்து  விட்டார் என்பதே ஆகும்.

என்னைப் பற்றிய முக்கிய குறிப்புகளில் இரண்டை சொல்லுகிறேன், கேளுங்கள். ராவணாசுரன் எனக்குத் தாயாதி முறையாக அது எப்படி என்று நினைப்பீர்கள். சப்த ரிஷிகள் எழுவரில் எனது பாட்டனார் காசியப் மகரிஷிக்கு தந்தையான மரீசி முதலாம் மகரிஷியாவார். அவருடன் பிறந்த மற்ற ஆறு பிரம்மரிஷிகளில், புலஸ்தியர் என்பவரும் ஒருவர் அவர்.

 

புலஸ்தியரின் மகன் விஸ்ரவன் என்று சொல்லக்கூடிய  விஸ்ரவஸ்.

 

விஸ்ராவசுக்கு இரு மனைவிமார்கள் உண்டு. முதல் மனைவியின் வயிற்றில் குபேரன் பிறந்தார். இரண்டாவது மனைவியின் வயிற்றில் பிறந்தவர்கள், இராவணன் கும்பகர்ணன், சூர்ப்பனகை, விபீஷணன் ஆகியோர் ஆவார்கள் இப்படி இராவணன் என் உறவினனாகின்றான்

 

இராவணன் திரேதாயுகத்தில், தேவர்களை எல்லாம் அடிமையாக்கி, அவர்கள் நீசத்தனமான வேலைகளைச் சொல்லி இம்சைப்படுத்தினான். அவருக்கு அடிமையானவர்களில் நவக்கிரகங்களும் அடங்குவோாம்.

 

இராவணன் சிம்மாசனமேறி அன்றாடம் அரச பரிபாலனம் செய்யப்போகு முன்பு, நவக்கிரகங்கள் எங்களை ஒன்பது படிக்கட்டுகள் போலக் கவிழ்த்துப் போட்டு எங்கள் மீது காலடி எடுத்து வைத்து ஏறிச்சென்று தான் சிம்மாசனத்தின் மீது அமர்வான். இப்படியாக நாள் தோறும் நடைபெற்று வரும் போது ஒரு நாள் நாரதர் வந்திருந்தார்.

 

இராவணனின் செயலைக் கண்ட நாரதர், அதனை ஆட்சேபித்தார். நவக்கிரகங்களை நிமிர்த்திப் போட்டு அவர்கள் மீது காலடி எடுத்து வைத்து ஏறிச் செல்வதே சிறப்பானது என்று கூறினார். அதைக் கேட்ட இராவணனும், அன்று முதல் அப்படியே செய்யலானான்.

அப்படி இராவணன் மறுநாள் காலடி எடுத்துவைத்து ஏறிச் சென்ற போது, சனீஸ்வரனாகிய என் மீது அவன் காலடி பட்டதும் எனது கண் பார்வை அவன் மீது வீழுந்தது. இராவணனுடைய கம்பீரம் அடங்கிவிட்டது. அப்போது முதல் என்னுடைய பார்வை தினமும் அவன் மீது பட்டதும், அவனிடமிருந்து எல்லா அவனை விட்டு விலகி விட்டது. ஆனால், இராவணன் இதை அறிந்தானில்லை, அதனால் தான் அழிவடைந்தான். என் வலிமை அப்படிப்பட்டது

 

இன்னொரு சம்பவம் பற்றிச் சொல்லுகிறேன். இது விநாயகப் பெருமானின் தலை அறுபட்டுப் போன சம்பவம் ஆகும்.

 

ஒரு சமயம், கைலாயத்தில் விநாயகருடைய பிறந்த நாள் விழா நடைபெற்றது. தேவாதி தேவர்கள் எல்லோரும் கைலாயம் சென்று அவ்விழாவைக் கண்டு களித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

 

எனக்கும் கைலாயம் சென்று அவ் விநாயகரைக் கண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதற்கு எனது அன்னை அனுமதி தரவில்லை.

 

இருந்தபோதிலும், அன்னைக்குத் தெரியாமல் நான் கைலாயம் சென்றேன். சென்று விநாயகரை நான் கண்ணால பார்த்ததுமே அவருடைய தலை அறுபட்டு எங்கோ பறந்து போய்விட்டது.

 

அதனைக் கண்ணுற்ற சக்தி தேவியார் எனக்கு பல மான சாபம் கொடுத்து விட்டார்கள். அந்த சாபத்தின் காரணமாக எனது கால்கள் முடமானது மட்டும் அல்லாமல் உடல் வனப்பும் விகாரமாக ஆகியது. அதனால் தான் விநாயகருக்கு யானைத்தலையைப் பொருத்தி வைத்தனர்.

 

நான் அருபமாகத் திரும்பி வந்ததை கண்டு எனது அன்னை பெரிதும் வருந்தினாள். அதன் பின் அன்னையின் வரப்பிரசாதத்தினால், நான் சக்தி பெற்று ‘சனீஸ்வரன்’ என்ற சிறப்பையும் பெற்று நவக்கிரக பரிபாலனத்திலும் இடம் பெற்றேன்.

விஞ்ஞான உலகில் நவகோள்களில் சனீஸ்வரன் கோளான என்னைப் பற்றி எடுத்துச் சொல்லும்போது, அனைவரும் ஒரு விதப் பிரமிப்பை அடையவே செய்கின்றனர்.

எல்லாக் கிரகங்களும், நீளமாக உருண்டை வடிவ மாகத்தான் வானமண்டலத்தில் பவனி வருகிறார். எனது சனீஸ்வர மண்டலமும் கூட அப்படித்தான். ஆனால் அதில் ஒரு சிறு மாற்றம் என்னுடைய கிரக மண்டலத்தை சுற்றி ஒட்டியாணம் போல் ஒரு வளைப்பகுதியும் இருக்கிறது. அது பார்ப்பதற்கு விசித்திரமான தோற்றத்தையும் தருகிறது.

சனி கிரகத்திலிருந்து ஒரு விதமான விஷப் புகை வெளிவந்த வண்ணம் இருக்கிறது. ஜெட் பிளேன் புகையைக் கக்கி கொண்டே பறந்து செல்வது போல என் சனிகிரகம், கருநிறமான ஒருவித விஷப் புகையைக்  விண்மண்டலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது.

நவக்கிரகங்களில், என் சனிக்கிரகம் தான் குரியனை வெகு தூரத்தில் இருக்கக் கூடிய கிரகமாக இருக்கிறது.

விட்டு இருக்கிறது சூரிய மண்டலத்தில், புதன், சுக்கிரன், பூமி, சந்திரன் செவ்வாய், குரு ஆகிய ரகங்கள் எல்லாம் தாண்டி இறுதியாகச் சனிக்கிரகம் இடம் பெற்று இருக்கிறது.

சூரியனிடமிருந்து 88-60 கோடி மைல்கள் தூரத்தில் நான் இடம் பெற்று இருக்கிறேன், என் குறுக்களவு 75100 மைல்களாகும், என் நிறம் நீலம், நான் சூரியனை 10800 நாள்களில் ஒரு முறை சுற்றி வருகிறேன்.எனது  சுற்று பாதையின் நீளம் 536.91 கோடி மைல். நான் மணிக்கு 21485.75 மைல் வேகம் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். உருவத்தால், நான் குரு கிரகத்தை விடச் சற்றுசிறியதாக இருக்கிறேன். எனக்கு 9 உபக்கிரகங்கள். என்னை ஆங்கிலத்தின்”சாட்டான்” என்று சொல்லுகின்றனர்.

அமெரிக்க விஞ்ஞானிகள் பயனியர் இரண்டு என்ற ஒரு விண்கலத்தை எனது கிரகத்திற்கு அனுப்பி இருக்கின்றார்கள் அதன் வேகம் மணிக்கு 27 ஆயிரம் மைல்களாகும். இது என்னை வந்து இன்னும் அடையவில்லை. அது பிறகு, என்னைப் பற்றி பல தகவல்களை பூமிக்கு அனுப்பும். அது இன்னும் விண்வெளியில் சுற்றிக் கொண்டி இருக்கிறது.

மொத்தத்தில் நான் மற்ற எல்லாக் கிரகங்களையும் விடவெகு தூரத்தில் இடம் பெற்று இருந்து கொண்டு சூரி யானை வலம் வருகின்றேன். பூமிக்கும் எனக்கும் இடையே உள்ள தூரம் 79 கோடி மைல்களுக்கும் அதிகமாகும்.

பூமியில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும் உலகில் வாழவதற்கு காரணமாக இருப்பது அவருடைய உடலிலுளள் உயிர் ஆகும். அப்படிப்பட்ட அவற்றின் உயிருக்கு, ஜீவநாடியில் அமைவது க் காரகம், ஆயுள் காரகத்துக்கு அதிபதியாக அமைந்திருப்பது நான் தான். அதாவது ஆயுள் காரகன் சனீஸ்வரனான நானேதான். உயிரைப் போகாமல் காத்துக்கொள்ள ஒவ்வோர் உயிரும் முயல்கின்றன.

அந்த உயிரை எத்தனை காலம் உடலுள் நீடித்திருக்க வைப்பது என்று முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவன் சனியாக நான் தான். சனிஸ்வரனாகிய நான் எந்த ஜாதகரையும் விதியை அனுபவிக்காமல் விட்டு வைப்பது இல்லை. அது என்னுடைய பொறுப்பு கடமை ஆகும். சுருங்கச்சொன்னால், நீதி வழங்கும் ஒரு நீதிபதியைப் போன்றவன் நான் எனலாம்.

திரிபோட்டு, எள்ளு எண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றிவைத்து என்னை வழிபட்டு வந்தால், நான் அதனால் பிரீதியடைந்து அந்த ஜாதகருக்கு நலம் கிடைக்கச் செய்து உதவுவேன்.

 

என்னைப் பற்றி மேலும் சில விவரங்கள்

 

கருமை நிறத்திற்கு அதிபதி நான். எனது அதிதேவதை எமன் என்கின்றனர் சிலர் மற்றுஞ் சிலர் “சிவன்” என்கின்றனர். எனது உருவ அமைப்பு வில்வ வடிவமாகும். நான் ஆயுளுக்கே பிரதான காரகம் வகிக்கின்றேன், எனது தேவி மின் பெயர் நீலா. சூத்திர இனம் நான் என்பர். எனது வாகனம் காகம். வன்னிச் சமித்திற்கு நான் வசமாவான். நவதானியமத்தில் எள் எனக்கு விருப்பமான தானியமாகும். திக்குகளில் மேற்குத் திக்கு நோக்கி நான் அமர்ந்துள்ளேன் உலோகங்களில் இரும்பு எனது ஆதிக்கமுள்ளதாகும். கருங்குவளை மலர் கொண்டு என்னை வணங்குபவரை நான் ரசிப்பேன். நவரத்தினங்களில், நீல நிறக்கல், எனது இயக்கத்திற்கு ஊக்கமளிக்கக் கூடிய தாகும். எனது குணம் குரூரம். வாத நோய், நரம்புத் தளர்ச்சி சூலை, க்ஷயம், எலும்புருக்கி போன்றவற்றுக்கு அதிகாரம் வகிப்பவள் நான்.

நான் உருவத்தினால் – குறுகியவன், அந்நிய பாஷைக்க உரியவன். கசப்பும் புளிப்பும் எனக்கு விருப்பம் ஆனவை. கறுப்பு பட்டுவஸ்திரம் எனக்குப் பிடிக்கும், மந்த வாரம், ஸ்திர வாரம் என சொல்லக்கூடிய சனிக்கிழமை எனக்குரியது. 

கிரகங்களின் பலத்தை எறு வரிசையில் சொல்லப் போனால் புதனை விட அங்காரகனுக்கு அதிகபலமிருக்கிறது அந்த அங்காரகனை விட எனக்குப்பலம் அதிகம் இருக்கிறது.

எனது ஆட்சி வீடுகள் மகமும் கும்பமும் ஆகும் கும்ப ராசியில் நான் மூலத்திரிகோண பலம் பெறுகிறேன். துலா ராசியில் 20 பாகையில் பரம உச்சமும் மேஷராசியில் 20 பாகையில் பரம நீச்சமும் பெறுகிறார்.

நான் நின்ற ஸ்தானத்தில் இருந்து 3, 7, 10 ஆம் இல்லங்களை நோக்குபவன், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்று நச்சத்திரங்களும்  எனது சாரம் பெற்ற நட்சத்திரங்களாகும்.

கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய மூன்று ராசிகளும் எனக்குப் பகை வீடுகளாகும்.

என்னைச் சூரியன் 17 பாகையில் நெருங்கி வந்து, என்ன அடைந்து, அதன் பிறகு 17 பாகை அளவிற்குமேல் செல்லும் வரையில் நான் அஸ்தங்கம் பெறுகிறேன்.

எனது கோத்திரம் காசியபமகரிஷி கோத்திரம் எனக்குப் புதன், சுக்கிரன் ராகு, கேது ஆகியவைகள் நண்பர்கள்.  குரு சமக் கிரகமாகிறார்.  சந்திரன், அங்காரகன் பகை கிரகங்கள். தமோ குணம் பெற்றவன் நான். பஞ்சபூத அமைப்பில், நான் ஆகாயத்திற்கு அதிபதி ஆகிறார், என் ராசிகளில் மகரம் இரவு பல முடையது, கும்பம் பகல் வளம் உடையது. சனி கிரகமாகிய நான் ஒரு நாளைக்குக் கடக்கும் தூரம் 2 கலையாகிறது.

நான் ஒரு நட்சத்திர பாதத்தை கடக்க 3 மாதம் 11 நாள் 23 நாழிகை, 20 வினாடி ஆகிறது. நான் ஒரு ராசியை அதா வது 30 பாகையைக் கடக்க ஏறக்குறைய 2, ஆண்டுகள் ஆகின்றன.

நான் தரும் ஆயுள் பலம்

 

ஜெனன லக்கினத்தில் அல்லது ஆயுள் ஸ்தானம் எட்டாம் இல்லத்தில் நான் இருந்தாலும் அல்லது இந்த ஸ்தானங்களை நான் பார்த்தாலும், அந்த ஜாதகருக்கு நீடித்த ஆயுள் பலம் உண்டாகும். 70 வயதிற்கு மேல் ஆயுள் உண்டு என்பதை நான் உறுதிப்படுத்துவேன்.  என்னைக் குரு பார்த்தாலும் அப்படிப்பட்ட ஜாதகருக்கு ஆயுள் பலம் கூடவே செய்யும்.

 

மாரக திசை:

சனி திசையில் எனது திசை, நாலாவது திசை யாக நடைபெற்றால், அது மாரகதிசை என்று சொல்லப் படுகிறது. அப்படிப்பட்ட திசை நடைபெறும்போது சிறு சிறு. கண்டம் விபத்து போன்றவை ஏற்படக்கூடும். எனவே அனைவரும் எச்சரிக்கையாக நடக்க வேண்டும்.

 

7 1/2 நாட்டுச் சனி அமைப்பில் நான்:-

ஏழரை நாட்டுச் சனியின், அமைப்பு எப்படி என்ற ஒரு கேள்வி எழும், அதற்குரிய விளக்கத்தைக் கீழே தருகிறேன் ஒவ்வொருவருடைய ஜெனன காலத்தில் சந்திரன் நின்ற ராசி இல்லம் எதுவோ, அதுவே அந்தந்த ஜாதகரின் ஜெனன ராசி என்று அறிவீர்கள். அது சந்திரலக்கினம் என்றும் சொல்லப்படுகிறது.

சனீஸ்வரனாகிய நான், கோச்சார முறையில், அப்படிப் பட்ட ஜென்மராசிக்கு 12, 1, 2 ஆம் இராசி இல்லம் என்னும் மூன்று ராசிகளையும் கடந்து செல்லும் காலம் தான் எழரைச் சனியின் காலமாகும்

ஜெனன ராசிக்கு, 12 இல் நான் சஞ்சரிக்கும் காலம் விரையச் சனி காலம் ஆகின்றது.

ஜெனன ராசிக்கு 1 இல், அதாவது ஜெனன ராசியி லேயே நான் சஞ்சரிக்கும் காலம் ஜென்மச் சனியின் காலமாகும்.

ஜெனன ராசிக்கு 2இல் நான் சஞ்சரிக்கும் காலம் பாதச் சனியின் காலமாகும்

இப்படிப்பட்ட மூன்று காலங்களிலும் அந்த ஜாதகர் படாத பாடு படுவார்.

யார் யாருக்கு ஏழரை சனி கொடுமை செய்யும் ?

 

சிம்மம், விருச்சிகம், கும்பம், மீனம், மேஷம், கடகம் ஆகிய ஆறு ராசிக்காரர்களுக்கு மட்டும் ஏழரை நாட்டுச் சனிக் காலத்தில் நான் பல விதமான கஷ்ட நஷ்டங்கள் தருவேன்.

 அப்படியானால்;        

  ரிஷபம், மிதுனம் கன்னி, துலாம், தனுசு, மகரம், ஆகிய ராசிக் காரர்களுக்கு ஏழரை நாட்டுச் சனி கெடுதல்களே செய்யாதா? என்றால் ஆம் அதிகமாகச் செய்யாது தான் என்றே கருதவேண்டும்.

மூவகையான ஏழரை நாட்டுச் சனி

ஏழரை நாட்டுக் சனியின் முதல் சுற்று மங்கு சனி என்று சொல்லப்படுகிறது இரண்டாவது சுற்று பொங்குசனி என்று சொல்லப்படுகிறது. மூன்றாவது சுற்று மரணச்சனி எனப்படுகிறது.

7 1/2 நாட்டுச் சனி முதல் சுற்றில் ஜாதகருக்கு அளவு கடந்த கஷ்டப்பலனும், அவருடைய தாய்தந்தையருக்கு சுபப் பலனும் தரும் .

 

7 1/2 நாட்டுச் சனியின் இரண்டாவது சுற்று நடைபெறும் போது ஜாதகருக்கு சுபப்பலனும், ஜாதகருடைய மாதா பிதாவிற்கு கஷ்டப் பலனையும் தரும்.

 

7 1/2 நாட்டுச் சனியின் மூன்றாவது சுற்றின் போது அந்த ஜாதகருக்கு பிணி, மூப்பு, துன்பம், போன்ற கஷ்ட  பலன்கள் நடைபெறும்.

 

அர்த்தாஷ்டமச் சனி

ஜெனன ராசிக்கு நான்காம் ராசியில் சனி வரும் போது இந்த ஜாதகருக்கு கஷ்டமான பலன்கள் நடைபெறும், அக்காலம் அர்த்தாஷ்டம சனியின் காலம் என்று சொல்லப் படுகிறது;

 

கண்டச் சனி

ஜெனன ராசிக்கு ஏழாம் ராசியில் சனி சஞ்சரிக்கும் காலம் கண்டச் சனியின் காலம் என்று சொல்லப்படுகிறது இக்காலத்திலும் ஜாதகருக்கு சொல்லொணாத நஷ்டங்கள் பல ஏற்படலாம்.

 

அஷ்டம சனி

ஜெனன ராசிக்கு எட்டாம் ராசியில் சனி சஞ்சரிக்கக் கூடிய காலம் அஷ்டமச் சனியின் காலம் எனப்படுகிறது இக்காலத்தில் அந்த ஜாதகருக்கு பலவிதச் சோதனைகளும் இடர்ப்பாடுகளும் உண்டாகும் என்பார்கள்

 

திதி சூன்ய தோஷம்

சனி கிரகமாகிய நான் பிரதமை, திருதியை திதிகளில் மகர ராசிக்கு உண்டான சுபப் பலன்களையும் சதுர்த்தி திதியில் கும்ப ராசிக்கு உண்டான சுபப்பலன்களையும் அடுத்து துவாதசி திதியில் மகரராசிக்கு உண்டான சுபப் பலன்களையும்  திதி சூன்ய தோஷம் காரணமாக இழக்கின்றேன்.

இந்தக் காலங்களில் என்னுடைய வலிமை பாதிக்கப்படு வதால், நான் தருகின்ற பலன்களும் குன்றிப் போகின்றன.

எனது வக்கிர கதி

 

 ஐந்தாவது நான் சஞ்சரிக்கும் ஸ்தானத்திற்கு

 ஐந்தாவது இல்லத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது, நான் வக்கிரம் அடைகிறேன்.  அதே சூரியன் நான் சஞ்சரிக்கும் இருக்கு ஒன்பதாவது இல்லத்தில்  பிரவேசிக்கும்போது  வக்கிரகதி நீங்கி விடுகிறது. இப்படியாக நான் ஒவ்வோர் ஆண்டிலும், ஐந்து மாதங்கள் வரையில் வக்கிர கதியில் சஞ்சரிப்பேன்.

 

பாசகர்-போதகர்-காரகர் வேதகர்

 

பாசகர்: குருவுக்கு, ஆறில் நான் இருந்தாலும் சூரிய னுக்கு ஆறில் நான் இருந்தாலும், எனக்கு மூன்றில் சுக்கிரன் இருந்தாலும், அது பாசகர் என்ற அமைப்பைத் தருகிறது.

 

ஆகவே எனது தசாபுத்தி அந்தரங்களும், சுக்கிரனுடைய தசா புத்தி அந்தரங்களும் நடைபெறும் போது வெகு விரைவில் நன்மையான பலன்களை இந்த ஜாதகர் பெறுவார்கள்.

 

போதகர்: நான் நின்ற ஸ்தானத்திற்கு பதினொன் றில் சந்திரன் இருந்தால் அச்சந்திரன் தமது தசா புத்தி அந்தரங்களில் நிறைய நன்மைப் பலன்களைத் தரக்கூடிய போதகர் ஆகிறார்.

 

காரகர் :

 

சந்திரனுக்கு 11 இல் நான் இருந்தாலும் அல்லது அங்காரகனுக்கு 11 இல் நான் இருந்தாலும் எனது தசா புக்தி அந்தரங்களில் நான் நிதானமாக அனைத்து நண்மை பலன்களையும் தரக்கூடிய காரகர் ஆகிறேன்.

 

வேதகர்: சுக்கிரனுக்கு 4இல் நின்ற நானும், எனக்கு  7 இல் நின்ற அங்காரகனும், எனது தசா புத்தி அந்தரங்களிலும் அங்காரகனுடைய தசா புத்தி அந்தரங்களிலும்,  அந்த ஜாதகருக்கு எவ்வித நற்பலன்களையும் நடைபெற விடாமல் தடுத்து நிறுத்தக்கூடிய வேதர்கள் ஆகிறோம்.

ராகு – கேதுகள் தவிர நான் உள்பட மற்றக் கிரகங்கள் எனது அஷ்டவர்க்கப் பரல் சக்கரத்தில் அளிக்கக் கூடிய பரல்களின் விவரம் எண்ணிக்கை மொத்தம் 39. அதன் விவரம்:

 

சூரியன் – 7 பரல்கள்

சந்திரன்  – 3 பரல்கள்

அங்காரகன் – 6 பரல்கள்

புதன் – 6 பரல்கள்

குரு – 4 பரல்கள்

சுக்கிரன் – 3 பரல்கள்

சனி – 4 பரல்கள்

லக்கினம் – 6 பரல்கள்

 

மொத்தப் பரல்கள் = 39

 

இப்படியே அந்தக் கிரகங்களின் அஷ்டவர்க்கப் பரல் சக்கரத்தில் நான் எழும் பரல்கள் மொத்தம் 42. அவற்றைக் கீழே காணலாம்

 

சூரியன் சக்கரத்தில் 8

சந்திரன் சக்கரத்தில் 4

அங்காரகன் சக்கரத்தில் 7

புதன் சக்கரத்தில் 8

குரு சக்கரத்தில் 4

சுக்கிரன் சக்கரத்தில் 7

சனியின் சக்கரத்தில் 4

 

 ஆக மொத்தப் பரல்கள் = 42

 

 

எனது ஒரு பலன்கள்:

 

 

ஓரைகளில் மிகவும் கொடியது சனி ஓரை என்று

சொல்லுவார்கள். என்றாலும், எனது ஓரை நடைபெறும் சமயத்தில் நிலபுலம் போன்ற சொத்துக்களை விற்க அல் வாங்க நலமாகும். தோப்பு, துரவு, தோட்டம் போன்றவற்றைக் குத்தகைவிடவும் இவ்வோரை மிக நல்லது.

சொத்துகளைப் பராமரிப்பு செய்யவும் சனி ஓரை நல்லது. சனி ஓரை நடைபெறும் காலங்களைக் கீழே காணலாம்.

ஞாயிற்றுக்கிழமை பகல் 10-11, 5-6, இரவு 12-1

திங்கட்கிழமை பகல் 7-8, 2-3, இரவு 9-10,4-5

செவ்வாய்க்கிழமை பகல் 11-12, இரவு 6-7,1-2

புதன்கிழமை பகல் 8-9, 3-4, இரவு 10-11,5-6

வியாழக்கிழமை பகல் 12-1, இரவு 7-8, 2-3

வெள்ளிக்கிழமை பகல் 9-10, 4-5, இரவு 11-12

சனிக்கிழமை பகல் 6-7, 1-2, இரவு 8-9, 3-4

 

 

எனது தெசா புத்திகளின் கால அளவு

எனது தெசா புத்தியின் கால அளவு பத்தொன் (19) ஆண்டுகளாகும். இதில் நான் உள்பட மற்றக்கிரகங்களும் எந்த விகிதத்தில் எங்களுடைய புத்திகளின் கால அளவுகளை பெற்றுள்ளோம் என்பதைப் பற்றி காணலாம்.

 

சனி  தெசை

 

வருடம்

மாதம்

நாள்

 

 

 

 

 

சனி

புத்தி

3

0

3

புதன்

புத்தி

2

8

9

கேது

புத்தி

1

1

9

சுக்கிரன்

புத்தி

3

2

0

சூரியன்

புத்தி

0

11

12

சந்திரன்

புத்தி

1

7

0

அங்காரகன்

புத்தி

1

1

9

ராகு

புத்தி

2

10

6

குரு

புத்தி

2

6

12

 

 

 

 

 

     மொத்தம் ஆண்டுகள்

 

19

0

0

 

மாதா பிதாவிற்கு ஆகாது

 நான் நின்ற ஸ்தானத்திற்கு  முன்னும் பின்னும் சந்திரனைப் பெற்றுள்ள ஜாதகருக்கு அவருடைய அன்னைக்கு ஆகாது. அதைப்போலவே நான் நின்ற ஸ்தானத்திற்கு முன்னும் பின்னும் சூரியனைப் பெற்றுள்ள ஜாதகருக்கு அவருடைய தந்தைக்கு ஆகாது.

 

 

கௌரவ பாதிப்புத் தருவதில் நான் எப்படி ?

 

ஓர் ஆண் அல்லது பெண் ஜாதகம் எதுவாக இருந்தலும்  அந்த ஜாதகத்தில் சனீஸ்வரனாகிய என்னுடன் சுக்கிரன் இணைந்து இருப்பது, அல்லது எனக்கு சம சப்தமமாக இருப்பதோ நல்லதல்ல‌‌‍‍. அப்படி இருந்தால் அந்தஜாதகருக்கு பாலுணர்வு விஷயத்தில் அளவு கடந்த ஈடுபாடு ஏற்பட்டுக் கௌரவ பாதிப்பு ஏற்படக்கூடும்.

 

என்னுடன் புதன் கூடியிருந்தாலும், அல்லது என் னுடைய ஆதிபத்தியம் பெற்ற நட்சத்திரங்கள் பூசம் அனுஷம், உத்திரட்டாதி ஆகியவற்றில் புதன் இடம் பெற்று இருந்தாலும், அல்லது புதன் என்னுடைய பார்வை பெற்றிருந்தாலும் இந்த ஜாதகருக்கு எப்படியும் நண்பர்களால் கௌரவ பாதிப்பும், பொருள் இழப்பும் நாணயப் பழுது ஏற்படும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் கூடிய மட்டும் தமது நண்பர்களை வீட்டிற்கு வெளியில் நிறுத்திப் பழக வேண்டும். நண்பர்களுக்காக ஈடு கொடுப்பது, பிணையாக நிற்பதும் கூடவே கூடாது

 

நானும் சுக்கிரனும் கூடியிருந்தால் …..

 

ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனீஸ்வரனாகிய நானும்  சுக்கிரனும் கூடியிருந்தால் ஒருவர் சமசப்தமமாகப் பார்த்துக் கொண்டாலும் அந்த ஜாதகர் உலக போகத்தில் மிகுதியாக மூழ்கிவிடுபவராகவே இருப்பார். நெறிமுறைகளைப் பற்றி எந்தக் கவலையும் படாதவராகவும் நடந்து கொள்வார்.

 

லாப ஸ்தானத்தில் நான் இருந்தால்

 

ஜெனன லக்னத்துக்கு 11 ஆம் இல்லத்தில் நான் இருந்தால், அந்த ஜாதகருக்கு நண்பர்களால் நஷ்டத்தை யும், வீழ்ச்சியையும் அவசியம் ஏற்படுத்துவேன்.

அந்த ஜாதகரின் ஒவ்வொரு செயலும் எதிராளிகளுக்கு சாதக மாகவே அமையும்.  அவருடைய நண்பர்களில் பலரும் சூழ்ச்சிக்காரர்களாகவும் நயவஞ்சகர்களாகவுமே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்குக் கூட்டு முயற்சிகள் எதுவும் சரிப்பட்டு வரா. இந்தவகையில் இவர்கள் விழிப்பாக இருப்பது நல்லது.

 

என் ஜலராசி ஆதிபத்தியம்

ராசி இல்லங்கள் பன்னிரண்டில் கடக ராசியும், மகர ராசியும், மீனராசியும் ஜலராசி இல்லங்களும். இப்படிப் பட்ட ஜலராசிகள் அமைந்த ஒரு ஜெனன லக்கினத்திற்கு 12 இல் நான் இருந்தாலும் அல்லது 12ஆம் இல்லத்தை நான் பார்த்தாலும், அந்த ஜாதகருக்கு கடல் கடந்து வேற்று நாடுகளுக்குச் சென்று வரக்கூடிய அதிர்ஷ்டங்கள் மிகுதி யாக ஏற்படும்

 

சந்திரனுக்கு 2 இல் நான் இருந்தால் …..

 

ஜெனன ஜாதகத்தில், சந்திரன் நின்ற ஸ்தானத்திற்கு 2 ல் நான் இருந்தால், அது சுனபா யாகம் -‘ எனப் படுகிறது . அத்துடன் ‘சசயோகம்’ என்றும் சொல்லப் படுகிறது. சுனபா யோகம் II என்பது அந்த ஜாதகருக்குப் பிதுர் வழிச் சொத்துக்களைப் பெறமுடியாமல் செய்துவிடும். என்றாலும், அந்த ஜாதகர் சுயமாக நிறையவே சம்பாதித்து ஓர் அரசனைப்போலத் தகுதியோடு வசதியாக வாழக் கூடியவர்.

 

சசி யோகம்’ உள்ள குடும்பத்தில் நிறைய வருமானம் வரும். வரும் வருமானம் அனைத்தும் அது வந்த சுவடு தெரியாமல் விரைவில் செலவாகிவிடும். ராசிக்குத் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நான் இருப்பது இந்த மூன்று வகையிலும் ஏதாவது ஒருகுறையை உறுதியாக ஏற்படுத்தும் என்பார்கள் ஜோதிட அறிஞர்கள். இது நடைமுறையிலும் உண்மையாக நிகழக் காணலாம்.

 

எண் கணிதத்தில் நான்

 

  எண் கணித ஜோதிடத்தில் எட்டு என்ற அலைவரிசை  எண்ணாக இருக்கிறது. எட்டு என்ற என் எண் நிதானமாகப் பலன் தரக் கூடியது என்பது குறிப்பிடத் தக்கது. வாழ்க்கையில் உயர்வதற்குள் இவர்கள் மிகவும் சிரமங்களைச் சந்தித்திருப்பார்கள்.

 

கைரேகை சாத்திரத்தில் நான்

 

கைரேகை சாத்திரத்தில் நடுவிரலுக்கு அடியிலுள்ள மேடு எனக்குரிய சனிமேடாகும். இந்த மேட்டில் கறுப்புப் புள்ளி, சூலம், தீவுக்குறி, குறுக்கு வெட்டுக்கோடு ஏதும் இல்லாமல் இருந்தால், அது யோகம் தரக்கூடிய சனி மேடாகும். சனிமேட்டை நோக்கி உள்ளங்கையில் இருந்து ஒரு நீண்ட ரேகை சென்றால், அது அதிர்ஷ்டரேகை என்றும் அறிய வேண்டும். பொதுவாகச் சனிமேடு வலுத்தவர்கள் கடினமான உழைப்பாளிகள் விளங்குவதையும் காணலாம்.

 

என்னைக் குறித்த சில நம்பிக்கைகள்

 

எனக்குரிய சனிக்கிழமையன்று ஒருவர் உயிர்விடுவது தீய சகுனமாக கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று சவ அடக்கம் செய்வதையும் தவிர்ப்பார்கள். “சனிப் பிணம் துணை தேடும்’ என்பார்கள் நாட்டு மக்கள். சனிக்கிழமை சவம் அடக்கம் செய்ய நேர்ந்தால் சவத்தை எடுத்துச் செல்லும் போது அத்துடன் ஒரு கோழிக்குஞ்சு அல்லது தேங்காயைக் கட்டித் தொங்கவிட்டுச் செல்வார்கள். இது தீமை தொடராமலிருப்பதற்கான பரிகாரமாக வழங்க வருகிறது.

 

வெள்ளிக்கிழமை சவ அடக்கம் செய்கின்றவர்களுக்கு சனிக்கிழமையன்று பால் தெளிப்பதைக் கூட நாளைக்கு உடன் பால் உண்டு’ என்றுதான் சொல்வார்கள், “நாளை சனிக்கிழமை பால்’ என்று சொல்ல மாட்டார்கள். சாவை யொட்டி எனக்குரிய சனிக்கிழமையைப் பற்றிய நம்பிக்கை யில் இதுவும் ஒன்று.

 

சனிசார நட்சத்திரமான உத்திரட்டாதியில் ஒருவர் உயிர்விட்டால், அந்த வீட்டை ஆறு மாத காலம் வரையில் மூடிவைக்க வேண்டும் என்று சிலரால் சொல்லப்படுகிறது இது – தனிஸ்டா பஞ்சமி’ என்றும் பெயர் பெறுகிறது.

 

இதுவும் ஒரு வகையான சனிப் பிணம் துணை தேடும் என்பது குறித்த பயத்தினால் ஏற்பட்ட வழக்கந்தான்.

 

நான் உயிரைப் பிரிக்கும் விதிக்குக் காரகத்துவம் பெற்றவன் என்பதால், இப்படிப் பல நம்பிக்கைகள் வழக்கில் வந்து வழங்குகின்றன.

லக்னத்தில் சனி – அதிக உழைப்பாளி. உடல் நலத்தில் ஏதாவது குறைபாடுகள் அவ்வப்போது தோன்றிக் கொண்டே இருக்கும். கனமான சரீர அமைப்பு உள்ளவர். நிர்வாகப் பொறுப்புகள் வகிப்பவர். அதில் ஆற்றலும் மிக்கவர் எதிரிகளை பயம் கொள்ளச் செய்யும் ஆற்றல் உள்ளவர். மூல நோய் இருக்கும். சுமாரான நிறமும் மௌனமாக காரியமாற்றும் திறனும் கொண்டவர். எடுத்த காரியத்தை வைராக்கியத்துடன் முடிப்பவர். பிறர் உதவி, உற்சாகத்தை எதிர்பார்ப்பவர். சமூக சேவை ஆர்வலர். ரகசியத்தை காப்பாற்றுவார். ஞாபக மறதி உள்ளவர்.

2 ல் சனி – வாழ்க்கையில் சுகமும் துக்கமும் மாறி மாறி ஏற்படும். கூர்மையான பார்வை, முகத்தில் தழும்பு கருமை நிறம் கொண்டவர். குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் இருக்காது. வயதான தோற்றம் உடையவர்.

கல்வியில் இடைஞ்சல்கள் அதிகம் உள்ளவர். கல்வி அரைகுறையாக நின்று விடும். கடினமான வார்த்தைப் பிரயோகம் கொண்டவர். பொய்களை கூசாமல் மெய் போல பேசுபவர். பிறகு படிப்படியாக வாழ்க்கைக்கு தேவையானவற்றை தேடிக் கொள்வோம். பொது வாழ்க்கையில் கெட்ட பெயர் ஏற்படும். உண்மையே பேசமாட்டார். தவறுகள் செய்ய அஞ்சமாட்டார். தீராத நோய்கள் உண்டு. இரண்டு மனைவிகள் வாய்ப்பர்.

3 ல் சனி – ஆணவம் மிகுந்தவர். அவசரப் போக்கினால் எதிலும் கூசாமல் ஈடுபடுவார். செல்வம், தைரியம் மிகுந்தவர். கடின மனமும், எதற்கும் கலங்காமல் மன உறுதியுடன் செயலாற்றுபவர். உறவினர்களுக்கு இவரின் குலப்பெருமை உண்டு நல்ல குணவதியான மனைவி அமைவார். ஆயுள்பலம் நீண்ட காலம் நீடிக்கும். தந்தைக்கும் தனது புத்திரர்களுக்கும் யோகம் குறைவு. கெட்டவர்களின் நட்பு உண்டு, நடிகனாகும் தகுதி உண்டு.

4 ல் சனி – தாயாருக்கு யோகம் இல்லை. மாற்றாந்தாயிடம் வளரும் வாய்ப்பே அதிகம். பெருத்த உடல்வாகு அமையும். காரியம் ஆனதும் நண்பர்களை கைகழுவி விடக்கூடியவர். அரசியலில் தோல்வி ஏற்படும். வீடு, பூமி முதலிய சொத்துக்களில் விவகாரம் ஏற்படும். உறவினர் ஒத்துழைப்பு சரிவர இருக்காது. பழைய வீட்டில் குடியிருப்பு அமையும். தீயவர்களின் நட்பால் கெட்ட செயல்களில் ஈடுபடுவார். மதங்கள் இவருக்கு பிடிக்காத ஒன்று எனலாம். செயல்பாடுகள் முறையின்றி இருக்கும். எள், இரும்பு, எந்திரம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு சிறப்பாக இருக்கும். கல்வி, எழுதுபொருள் துறையும் லாபம் தரும்.

5 ல் சனி – ஆயுள் பலம் உண்டு. மனிதர்களின் தரம் அறியாமல் நடந்து கொள்வார். மற்றவர்களின் விவகாரங்களில் தேவையற்று தலையிடுவார். யாரையும் மதிக்க மாட்டார். மந்தம், கவலை, குழப்பம், சந்தேகம் மிகுந்தவர். பணக் கஷ்டம் ஏற்படும். போட்டி பந்தய வெற்றி வாய்ப்பு குறைவு. குடும்பச் சொத்துக்களில் தீராத பிரச்சனைகள் ஏற்படும். பெற்றோர் ஆதரவு சரிவர இல்லை . தீய நட்பு உள்ளவர். வாரிசு குறைபாடு உண்டு. பிறரின் செயல்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களுக்கு துன்பம் கொடுப்பவர். சேமிப்பு குறைவு. செலவு அதிகம்.

6 ல் சனி அதிக செலவும் இரக்க குணமும் உடையவர். பங்காளிகளுடன் பிரச்சனை ஏற்படும். முகம் சம்பந்தப்பட்ட நோய்கள், பெயர் தெரியாத நோயால் தீராத கவலை தரும். சிகிச்சை செய்தாலும் நோய் தீராது.

அதிக பசி உள்ளவர். அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர். வாயுத்தொல்லை, வாதம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய், வயிறு தொடர்பான நோய்கள் அடிக்கடி தொல்லை தரும். சந்ததிகளால் எந்தப்பயனும் இல்லை . தாய்மாமனுக்கு யோகம் குறையும். சுலபமாக எதிரிகள் உருவாகி விடுவர். ஆனால் இவரை எதிர்ப்பவர்கள் துன்பப்பட நேரும். வழக்கு, சிக்கல், சண்டை , சச்சரவுகள் அடிக்கடி ஏற்படும். குடும்பச் சொத்து வழக்குகளில் தோல்வியே ஏற்படும். வேலையாட்களை வஞ்சனை செய்வார்கள். பிறரிடம் மதிப்புக் குறைவு ஏற்படும். பெண்களிடமிருந்து விலகியே இருப்பார்கள்.

7ல் சனி – கடமை தவறாதவர். கடினமாக உழைப்பவர். ஆனால் உழைப்புக்கு ஏற்ற வருவாய் இல்லாதவர் பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம், மந்தமான போக்கு, உடையவர். எப்போதும் கவலை உடையவர்குடும்ப வாழ்வில் எவருடனும் அனுசரித்து போகாமல் தனியே இருப்பதில் விருப்பம் உள்ளவர். பிறரின் பகை சுலபமாக ஏற்படும். பிரச்சினைகளில் தோல்வியே ஏற்படும். திருமணம் தாமதமாக நடக்கும். தனக்கு அடங்கிய மனைவியே வாய்ப்பார். பலதார யோகம் அல்லது விதவை தொடர்பு ஏற்படும். தனது குலத்துக்கு விரோதமான திருமண பந்தம் ஏற்படும். திருமணம் விருப்பம் இல்லாமல் நடக்கும். மனைவியின் வயது, கல்வி அல்லது செல்வ வளம் தன்னைவிட அதிகமாக இருக்கும். மனைவிக்கு ஏதேனும் மனக்குறை இருக்கும். மனைவி மற்றும் பெண்கள் ஏமாற்றமே அதிகம் இருக்கும். மனைவியை தவிர்த்து பிற பெண்களை நாடுபவர். இல்லற சுகமும் தாமதப்பட்டே கிடைக்கும். நண்பர்களை தாமதமாகவே அடைவார். கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும்.

8 ல் சனி – உறவினர்களிடமிருந்து விலகியே இருப்பார். சகோதர வகையிலும் இணக்கம் இல்லை பார்வைக் குறைபாடுகள் ஏற்படும். ஆற்றல், துணிவு மிக்கவர், வாக்குப் பலிதம் நிறைந்தவர். பொறுமை நிதானம் மெதுவான போக்கு உள்ளவர். கெட்ட சகவாசம் நிறைந்து இருக்கும். தனது பேச்சினால் பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்வார். வாதாடுவதிலே வல்லவர். பிறர் கருத்துக்களை எளிதில் ஏற்றுக் கொள்ளமாட்டார் வசதிகள் குறைவாகவே இருக்கும் ஆற்றலும் துணிவும் மிக்கவர். கெட்ட வழிகளில் பொருள் விரயம் ஆகும்.

வேளைக்கு உணவு உண்பதில் கூட சிக்கல் ஏற்படும். தீர்க்காயுள் பலம் உண்டு, ஆனாலும் பலவிதமான நோய்களை உடையவர். போதைக்கு அடிமையாவார். புத்திர விருத்தி சரியாக இருக்காது. வாயுப்பிடிப்பு, கை கால் முடக்கம், கால்களில் பித்த வெடிப்பு, மர்ம உறுப்புகளில் நோய் ஏற்படும். செலவும் அதிகம் செய்வார்.

9 ல் சனி – தெய்வ பக்தி மிக்கவர். ஆசை, பாசம் போன்ற குணங்கள் குறைவு, இனத்தாரை வெறுத்து ஒதுக்குவார். சகோதரருடனும் இணக்கம் இல்லை. கலைகளை விரும்பிக் கற்பவர். பொன், பொருள்களை ஏமாந்து பிறருக்கு கொடுத்து இழந்து நிற்பார். கவலை, துக்கம் போன்றவை நிறைந்து இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். கடினமான பயிற்சிகளை விரும்பிச் செய்வார். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டு, கால்கள் வலு குறைந்து காணப்படும். இயல், இசை, நாடகம் மூன்றும் ஆர்வம் மிக்கவர். ஜாதகரின் கோவில் குளங்கள், தர்ம ஸ்தாபனங்கள் நிர்ணயம் செய்வதில் ஆர்வம் உண்டு. தந்தையின் ஆயுள் பலம் தீர்க்கமாகும்.

10 ல் சனி- கடின உழைப்பு, சிக்கனம் உடையவர். நீதி நெறி தவறாதவன் தன்மானமும், தனமும் மிக்கவர். அன்னையின் நலம் சரிவர இருக்காது. முயற்சி வெற்றி உடையவர். தந்தையின் யோகம் குறைவுபடும். ரயில்வே, சுரங்கம், தொல்பொருள் ஆராய்ச்சி, இரும்பு உலோகம், தோல் பொருட்கள். எண்ணெய் வித்துக்கள், பூமிக்கு அடியில் உள்ள கனிமங்கள் போன்ற தொழில்கள் யோகமாக அமையும். விவசாயம், குத்தகை போன்றவையும் லாபம் தரும். அன்றாடம் வருவாய் கிடைக்கக் கூடிய தொழில் அமையும். வேலையாட்கள் சிறப்பாக அமைவர். ரண சிகிச்சை, மருத்துவம், அச்சகம், பழைய பொருட்கள் விற்பனை போன்றவையும் அமைய வாய்ப்பு உண்டு. பிறரை நம்பாமல் தானே செயல்படுவார். எதிலுமே திருப்தி இல்லாத நிலை ஏற்படும்.

11 ல் சனி – செல்வ வசதி மிகுந்து காணப்படும். பூமி, வாகன யோகம் உண்டு , காதுகளில் மட்டும் நோய் அல்லது பாதிப்புகள் ஏற்படலாம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, தீர்க்காயுள் உண்டு. பங்காளிகள் பெருமளவு இருக்க வாய்ப்பு இல்லை . மூத்த சகோதர யோகமும் குறைவு. வயதான காலத்தில் வாரிசுகள் ஏற்படும். நட்பு நிலை சரிவர இருக்காது, நண்பர்கள் விரோதம் இவரது செயல்கள் மூலம் ஏற்படும் சலிக்காத உழைப்பும் தைரியமும் மிக்கவர். அரசு பதவிகள், அரசு வெகுமதிகள் கிடைக்கும். பொதுநலத் தொண்டில் லாபம் உண்டு. விவசாயம், எந்திரங்கள், வாகனங்கள், அச்சு, குத்தகை தொழில் ஆதாயம் உண்டு, பக்தி மிகுந்தவர்.

12 ல் சனி – செயல்திறன் குறைந்தவர். தயக்கம் உள்ளவர். தன்னம்பிக்கை குறைவு. முன்னேற்றத்துக்கு பணம் ஒரு தடையாக அமையும். மறதி அதிகம். கோபங்களால் அதிக நட்டங்களையும், இழப்புகளையும் சந்திப்பார். எதையும் இழந்துவிட்டு பிறகு வேதனை அடைவார். சுபகாரியச் செலவு குறைவு. மற்றவர்களால் இவருக்கு அடிக்கடி இடைஞ்சல்கள் ஏற்படும். சோம்பல் குணம், மெதுவான நடை இவரது குண இயல்புகள் ஆகும். எதிரிகள் தொல்லை இருந்தால் நட்டம் அவர்களுக்குத்தான் ஏற்படும். பெண்களுக்குத் தொல்லை தருபவர். வெளிநாட்டு அலைச்சல் மிக்கவர். உடல் ஊனம் ஏற்படும். அரசின் பகையும் அதனால் பயமும் உண்டு.

சனியின் காரகம்

ஆயுள் காரகன் என்று அழைக்கப்படும் சனியின் காரக விபரங்களைக் காண்போம். வேலையாட்கள் கீழ்மக்கள், கெட்டவர்கள், இரவில் பிறந்த ஜாதகருக்கு பிதுர் (தந்தை) காரகர், தாழ்ந்த குலம், வேட்டையாடும் மக்கள், படகோட்டி, வணிகர், முதியவர், ஏழை, மலைவாசி, விதவைகள், நீலம், எண்ணெய், இரும்பு, துவர்ப்பு, கருப்பு நிறம், கந்தல்துணி, 8ம்எண், சனிக்கிழமை, மேற்கு திசை, கூலி, அடிமைத்தொழில், மாது, மாமிசம், பயிர்கள், கட்டிடம், எந்திரம், கணினி, கடன்கள், கழுதை, எருமை, ஒட்டகம், உலைக்கூடம், நரம்புகள், சிறை முடவன் (ஊனமுற்றோர்), ஆயுள் தரித்திரம், நீசமான பெண், துன்புறுத்தல், வதைத்தல், அவமானம், பழி பாவம், துக்கம், மேக நோய், வஞ்சனை, பைத்தியம், வாதம், பித்தம், மலடு, விபத்தால் மரணம் ஏற்படுதல் ஆகிய நிலைகளில் சன் காரகர் ஆவார்.

சனி தோஷம்

ஒருவரின் பாவ புண்ணியக் கணக்குகளை அனுபவித்துத் தீர்க்கும் வரை, உடலை விட்டு வெளியேறா வண்ணம் உயிரைப் பாதுகாக்கும் ஆயுட்காரகரான சனி பகவான் ஜனன ஜாதகத்தில் 1,2,5,7,8,12 ல் அமரும் போது சனி தோஷத்தை ஏற்படுத்தி மணவாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்

சனி தோஷத்தின் பலன்கள்

 1. ஜன்ம லக்னத்தில் சனி அமரும் போது வயதுக்கு மீறிய தோற்றத்தையும் புத்திக்குறைவையும் சோம்பல் தன்மையையும் ஏற்படுத்துவான். மேலும் 3,7,10 ம் பாவகங்களைப் பார்ப்பதால் திருமணத்துக்குண்டான மனோதிடம் குறையும். களத்திரத்துடன் கருத்து பேதத்தையும், கஷ்ட ஜீவனத்தையும் மற்றும் அவருக்கு ஆரோக்கியக் குறைவையும் ஏற்படுத்தும்
 2. இரண்டாம் பாவத்தில் சனி அமரும் பொழுது குடும்ப ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் திருமண தடை, கால தாமதமான திருமணம், திருமணத்திற்குப்பின் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு, வாக்கில் கடுமை போன்றவற்றையும், 4- ம் பாவத்தை பார்ப்பதால் பிரயாணத்தில் தடை அலைச்சல், ஆரோக்கியக் குறைவையும், 8-ம் பாவத்தை பார்த்தால், களத்திர விரோதம் களத்திரத்தின் கடுஞ்சொற்களால் மன வருத்தம் அடைதல் போன்றவையும், 11-ம் பாவத்தை பார்ப்பதால் களத்திரத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்திற்கு பங்கம் ஏற்படுத்துவது போன்ற பலன்களை நிகழ்த்துவார்
 3. ஐந்தாம் பாவத்தில் சனி அமர புத்திரபாக்கியம் தாமதப்படும். குழந்தைகளால் மன நிம்மதி பாதிக்கும், புத்திக்கூர்மையை பாதிக்கும். மேலும் ஏழாம் பாவத்தை பார்ப்பதால் திருமண தாமதமும் களத்திர விரோதமும், 11 ஆம் பாவத்தை பார்ப்பதால் களத்திரத்தின் மூலம் கிடைக்கும் தனவரவுக்கு பங்கமும், புத்திர சோகத்தையும் ஏற்படுத்தும். மேலும் இரண்டாம் பாவகத்தைப் பார்ப்பதால் வாக்கில் கடுமை, திருமணத்தடை, பிரச்சனைக்குரிய மணவாழ்க்கை போன்றவற்றை ஏற்படுத்தினார்.
 4. ஏழாம் இடத்தில் சனி அமரும் போது, நிச்சயம் காலதாமதமான திருமணத்தையும், வயது வித்தியாசம் அதிகமாகவோ அல்லது தோற்றத்தில் வயதானவர்களைப் போன்றோ இருக்கக்கூடிய களத்திரம் அமையும். மேலும் ஒன்பதாம் பாவத்தை பார்ப்பதால் பாக்கியத்திற்கு பங்கத்தையும், லக்ன பாவத்தை பார்ப்பதால் ஜாதகரின் தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றையும் பாதிக்கும், மேலும் நான்காம் பாவத்தை பார்ப்பதால் ஜாதகரின் சுக ஆரோக்கியம் கெடும். பிரயாணங்களில் இடையூறுகள் ஏற்படும்.
 5. எட்டாமிடத்தில் சனி அமரும் போது, திருமண தடை, கால தாமதமான திருமணம், பிரச்சனைக்குரிய மணவாழ்க்கை போன்றவை ஏற்படும். மேலும் பத்தாம் பாவத்தை பார்ப்பதால் களத்திரத்தின் சுக ஆரோக்கியத்திற்குப் பாதிப்பையும், 2 ம் பாவத்தை பார்த்தால் குழப்பமான குடும்ப சூழ்நிலை, பொருளாதார சிரமங்கள், வாயினால் கெடுதல் போன்றவையும் 5-ம் பாவத்தை பார்ப்பதால் புத்திர சோகத்தையும், புத்திரர்களால் மன நிம்மதி கெடுதல் போன்ற பலன்களையும் ஏற்படுத்துவார்.
 6. பன்னிரண்டாம் இடத்தில் சனி அமரும் போது, இல்லற இன்பம் பெற தடைகளுண்டாகும். துறவு மனப்பான்மை மேலோங்கும். மேலும் 2-ம் பாவத்தை பார்ப்பதால் மகிழ்ச்சியில்லாத மணவாழ்க்கை , களத்திரத்தின் மூலம் எதிர்பாராத வீண் விரயங்கள்,6-ம் பாவத்தை பார்த்தால் களத்திரம் மற்றும் புத்திரர்களால் பொருள் இழப்புகள் போன்றவை ஏற்படும். 9-பாவத்தை பார்ப்பதால் களத்திரத்திற்கு அடங்கி இருப்பதையும், பாக்கியத்திற்கு பங்கத்தையும் ஏற்படுத்துவார்.

நவகிரகங்களில் மிகமுக்கியமானவர் சனீஸ்வர பகவான். ஈஸ்வர பட்டம் பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் சிறப்பை உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியைப்  பார்ப்போம். வடநாட்டில் மணி என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு கலிங்க நாட்டை ஆட்சிசெய்து வந்தார் தினகரன் என்ற மன்னர்.  நல்லாட்சி செய்து வந்தபோதும் அவருக்கு ஒரே ஒரு குறை இருந்தது. திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் புத்திரப்பாக்கியம் இல்லாததுதான்  அது. ஒருநாள் அரசர் தினகரனுக்கு கடவுளின் சித்தத்தால் அசரீரி  ஒன்று கேட்டது. அதில் ‘உன் வீட்டுக்கு ஒரு  சிறுவன் வருவான். நீ அவனை தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அதனால் உன் குறை தீரும்’ என்று கூறியது. அரசரான தினகரனும் அவருடைய மனைவி வெந்துருவையும் மகிழ்ந்து, அசரீரி சொன்னபடி சந்திரவதனன் என்ற ஆண்மகனைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு அரசர் தினகரனின் மனைவி வெந்துருவை கர்ப்பமாகி அழகான ஆண்மகன் பிறந்தான். அவன் பெயர் சுதாகன். சுதாகனும் அவருடைய அண்ணனான சந்திரவதனனும் வளர்ந்து வந்த நிலையில் சுதாகனைக் காட்டிலும் வளர்ப்பு மகனான சந்திரவதனன் திறமையாலும், ஆற்றலாலும் சிறந்து விளங்கினான். அதை அறிந்த தந்தை தினகரன் வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தார்.

சில தினங்களில் தந்தை தினகரனுக்கு விதிப்படி 7 ½ சனி பிடித்து உடல்நிலை மோசமானது. இந்நிலையைக் கண்ட வளர்ப்பு மகன் சந்திரவதனன் ஜோதிடரிடம் சென்று பரிகாரம் கேட்டான். அதற்கு ஜோதிடர், ‘சனிபகவானை தரிசித்து வா, உன் தந்தையின் நோய் குணமாகும்’ என்று கூறினார். உடனே சந்திரவதனன் தென்னாட்டில் அழகிய பகுதியான மதுரையம்பதிக்கு அருகில் சுரபி நதிக் கரைக்குச் சென்று சனி பகவானின் உருவத்தைக் கற்பனை செய்து, இரும்பால் சனீஸ்வரனின் உருவத்தைச் செய்தான். உருவாக்கிய சனி பகவானைப் பார்த்து ‘கடவுளே என் தந்தையின் அனைத்து துயரங்களையும் போக்கி அத்துன்பங்கள் யாவற்றையும் எனக்கு கொடுங்கள்… அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று வணங்கினான். அவன் குரலில் நெகிழ்ந்த சனி பகவான் அவன் முன் காட்சியளித்தார். ‘நான் உன் தந்தைக்கு கொடுத்த துயரங்கள் யாவும் அவர் முற்பிறவியில் செய்த பாவங்களுக்காக மட்டுமே.  இப்போது  உன் வேண்டுதலை ஏற்று, தந்தையின் துன்பங்கள் யாவற்றையும் போக்கி அந்தத் துன்பங்களை உனக்குத் தருகிறேன். உன் நல்ல மனதை எண்ணி நீ வெறும் 7 ½ நாழிகை மட்டுமே துன்பத்தை ஏற்றால் போதும். இதுகூட நீ முற்பிறவியில் செய்த பாவத்துக்காகக் கொடுக்கப்பட்டது தான்’ என சனிபகவான் கூறினார். அதன்படியே சந்திரவதனன் சனி பகவானின் அருளைப்பெற்று  வாழ்வாங்கு வாழ்ந்தான்.

சந்திரவதனன் சுரபி நதிக்கரையில் தோற்றுவித்த சனி பகவான் திருவுருவமே குச்சனூர் ஆலய மூலவராக மாறியது. அது இன்றும் வணங்கப்பட்டு வருகிறது. செண்பகநல்லூர் என்று இருந்த ஊரே, சந்திரவதனன் சுயம்பு வடிவ சனீஸ்வரப் பகவானுக்கு குச்சுப்புல்லினால் கோவில் கட்டியதால் குச்சனூர் என்றானது. 2000 வருடங்களுக்கு முன் தோன்றிய கோயில் என்றாலும் இது சுயம்புவாக தோன்றிய காரணத்தினால் இன்று வரை கும்பாபிஷேகம் நடக்கவில்லை.

இந்த ஆலயம் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது. பெரியாறும், சுருளியாறும் இணைந்து உருவானது தான் சுரபி ஆறு. இக்கோயிலில் அரூப வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்துகொண்டே வருவதால் இதைக் கட்டுப்படுத்த மஞ்சள்காப்பு கட்டப்பட்டுள்ளது. குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட நினைப்பவர்கள் தினமும் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 8 மணி வரையிலும் இந்த ஆலயம் சென்று வழிபடலாம். சனிக்கிழமைகளில் சிறப்புப்பூஜைகள் நடைபெறும். 2 ½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும். இக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை கருங்குவளையாலும், வன்னி இலையாலும் அர்ச்சிக்கலாம். அவரின் வாகனமாக உள்ள காகத்தை வணங்கி உணவிட்டு வழிபட வேண்டும். எள் தீபமிட்டு, கறுப்பு வஸ்திரம் சாத்தி, எள்ளு சாதம் பிரசாதம் வைத்து சனி பகவானின் ஆசிர்வாதத்தை பெறலாம்.

நம்மில் பலரும் சனி பகவானைப் பார்த்து மிகவும் பயமடைந்துள்ளோம் என்றால் மிகை இல்லை. ஆனால் சனி பகவான் கோபக்காரர் தான், அதே சமயம் அவர் மற்ற கிரகங்களை விட பாசக் காரரும் கூட. கிரகங்களிலேயே சனிபகவான் மிக முக்கியமானவராக ஆகவும் நீதியரசராகவும் விளங்குகிறார்.

நீதி அரசர் என அழைக்கப்படும் சனி பகவான், தவறு செய்பவர்கள் மீது கோபம் கொள்வார். அதே சமயம், நேர்மையான, சரியான விஷயங் களை மட்டும் பிறருக்கு தீங்கு ஏற்படாத காரியங்களை செய்பவர்கள் சனி பகவானைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை.

எம தர்மனின் சித்திரகுப்தன் நம் பாவக்கணக் கை எழுதி கொண்டிருக்கின்றார். அவர் சளை த்தாலும் சளைப்பாரே தவிர, சனி பகவான் நாம் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார் அதற்கேற்றார் போல அவர் கண்டிப்பாக அவரின் பெயர்ச்சி யின…

சனிபகவானே கடவுளிடம் வரம் கேட்ட சம்பவம் பற்றி தெரியுமா ?

சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே போகிறது என்ற எண்ணம் வந்ததால் சிவனை நோக்கி தவம் செய்ய முடிவெடுக்கிறார். ஆனால் சூரிய பகவானை தனியாக விட்டு செல்ல அவருக்கு மனம் இல்லாததால் தன்னுடைய நிழலை கொண்டு சாயாதேவி என்றொரு பெண்ணை தன்னை போல உருவாக்குகிறார். பின் சாயாதேவியம் தான் இருந்து செய்யவேண்டிய அனைத்தையும் நீ செய்யவேண்டும் என்று கூறிவிட்டு குதிரை வடிவம் எடுத்து சிவனை நோக்கி தவம் இருக்க செல்கிறார் உஷா தேவி.

சூரிய பகவானும் சாயாதேவியை உஷா தேவி என்று நினைத்து அவரோடு வாழ்கிறார். அவர்கள் இருவருக்கும் கிருதவர்மா (சனி) என்ற ஆண் குழந்தையும், தபதி என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. தாயின் சாயல் சனிபகவானுக்கு வந்ததால், நிழலை போன்று கருமையான நிறத்தில் இருக்கிறார். சிறுவயதில் இருந்தே சனிபகவானின் செயல்கள் சில சூரியபகவானுக்கு பிடிக்கவில்லை. இதனால் சூரிய பகவான் சனிபகவானை காட்டிலும் மற்ற குழந்தைகளிடம் அன்பாக இருக்கிறார்.

ஆரம்ப கட்டத்தில் தந்தையின் அன்பிற்காக ஏங்கிய சனி பகவான் வளர வளர தந்தையின் மீது வெறுப்பு கொள்கிறார். ஒரு கட்டத்தில் தந்தையை தன் விரோதியை போல நினைக்க துவங்குகிறார். தன்னுடைய தந்தையை காட்டிலும் தான் சக்தி படைத்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி காசிக்கு சென்று அங்கு லிங்கம் ஒன்றை எழுந்தருளச் செய்கிறார்.

பின் பல்லாண்டு காலம் சிவனை நோக்கி கடுந்தவம் புரிகிறார். சனிபகவானின் பக்தியை கண்டு மெய்சிலிர்த்த சிவபெருமான் அவர்முன் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். நவகிரகங்களில் ஒருவராய் இருக்க வேண்டும், நவகிரங்களில் தன்னுடைய பார்வைக்கே வலிமை அதிகமாக இருக்க வேண்டும், தன் தந்தையை விடவும், தன் உடன் பிறந்தவர்களை விடவும் பலசாலியாக இருக்க வேண்டும் , சுருக்கமாக சொல்லப் போனால் உங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு தரவேண்டும் என்று வரம் கேட்டார்.

சனியின் தவப்பயன் காரணமாக ஈசன் அவர் கேட்ட வாரங்கள் அனைத்தையும் தந்தருளினார். அன்று முதல் சனீஸ்வரன் என்று அவர் அழைக்கப்பட்டார். ஈஸ்வரனிடம் இருந்து பல அற்புத வரங்களை பெற்றதால் சனியை கண்டு இன்றுவரை தேவாதி தேவர்கள் முதற்கொண்டு பலரும் அஞ்சுகின்றனர். ஆனால் சனிக்கே தொல்லை கொடுத்தவர்கள் அனுமனும் விநாயகரும் என்று பல புராண கதைகள் கூறுகின்றன.

பாப கிரகங்கள் வரிசையில் முதலிடம் வகிக்கும் இவரின் நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை ஆகும். காசியில் சிவபெருமானிடம் சனீஸ்வரன் வரம் பெற்ற பிறகு திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயிலிற்கு வந்து சிவனை வழிபட்டதாக கூறப்படுகிறது. திருநள்ளாறில் சனீஸ்வரனுக்கு இப்போது தனி சந்நிதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் என்ப தற்கு ஒரு கதை உண்டு. சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ஈடுபாடு. இல்லறத்தில் நாட்டமே இல்லை. இதை அறியாமல்அவருக்கு சித்திரதா என்பவர் தன் மகளை சனிபகவானு க்கு மணம் செய்து வைத்தார்.  கல்யாணமான பின்பும் கூட தன் மனைவியை நேசிக்காமல் தவத்திலே ஈடுபட்டார் சனீஸ்வரன். ஒரு பெண்ணை எதற்காகத் திருமணம் செய்து  கொண்டோம் என்பதை மறந்த சனிபகவானை எண்ணி எண்ணி விரக வேதனையால், அவன் மனைவி சபித்துவிட்டாள். 

 “ஒரு பெண்ணின் ஆசையைப் புரிந்து கொள்ளாத நீங்கள், கணவர் என்ற முறையில் வாழத் தெரியாத நீங்கள், உங்கள் தவவலிமை யின் ஆனந்தம் அடையாமல் போகட்டும் என்று சபித்த வார்த்தைகளால் சனிபகவான் நொந்து போனார். அன்று முதல் அவரது பார்வை வக்கி ரமாக  அமைந்துவிட்டது. அதை மாற்றவே முடியவில்லை என்பது ஐதீகம். 

 ஆகமங்களில், சனியினுடைய உருவம், உடை ஆகியவைப் பற்றிய செய்திகள் வருகின்றன. கரிய நிறமுடையவன். கரிய ஆடையை  அணி பவன் ஒரு கால் முடவன் இருகரம் உடையவன் வலக்கரத்திலே தண்டமும், இடக்கரத்தில் வரதக் குறிப்பும் உடையவன். பத்மபீடத்தில் வீற்றிருப்பவன். அட்ச மாலையை கொண்டு எட்டு குதிரைகள் பூட்டிய இரும்பு ரதத்தில் பவனி வருபவன். 

சனிபகவானுக்கு இருவகை மந்திரங்கள் உரியது. ஒன்று வேதம். இதற்கு ரிஷியாக இருப்பவர் இளிமிளி. அந்த மந்திரத்தின் பெயர் உஷ்ணிக்  என்ற சந்தத்தில் அமைந்தது. மற்றொரு மந்திரம் காயத்ரி சந்தசைக் கொண்டது. அதற்கு ரிஷி – மித்ரரிஷி. 

 நவக்ரக ஆராதனம் என்னும் நூலில் சனிபக வான் வில்லைப்போல ஆசனத்தில் வீற்றிரு ப்பான். அழகு வாகனம் உடையவன். மேற்கு நோக்கி  இருப்பான். நீல மேனி உடையவன். முடிதரித்தவன். சூலம், வில், வரதம், அபயம் கொண்டவன், மெல்ல நடப்பவன். கருஞ்சந்த னம் பூசுபவன்.  கருமலர், நீலமலர் மாலையை விரும்புகிறவன். கரு நிறக்குடை, கொடி கொண்டவன் என்று சனியைப் பற்றி குறிப்பி ட்டிருக்கிறது. சனிக்கு, அதிதேவதை யமன். வலப்பக்கத்தில் இவனை ஆவாகனம் செய்ய வேண்டும். இடப்பக்கத்தில் ப்ரத்யாதி தேவதையாகிய பிரஜாபதி இருப்பார்.

இவர் பெயரை கேட்டாலே அண்ட சராசரமே ஆடிப்போகும்.  சாதாரண மனிதர் முதல்,  சகல சம்பத்துகளும் பெற்ற தேவர்கள் வரை நடுங்கு வார்கள்.  

நீதிமான், நியாயவாதி. அதனால்தான் தராசு சின்னமான துலாம் ராசியில் உச்சமாகிறார். 

 கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர்.  ஜோதிட சாஸ்த்தி ரத்தில் ஆயுள் காரகன் என்று கூறப்படும் அதி முக்கியமான பதவியில் இருப்பவர்.  சூரிய பகவானின் இரண்டாவது புதல்வர். 

முதல் புத்திரர் அது யமன்.  பின்னவர் ஆயுளை வளர்த்தால், முன்னவர் ஆயுளை பறிக்கும் தொழிலை செய்பவர்.  சகோதரி யமுனை. காக்கையை வாகனமாக கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர். 

 புரட்டாசி மாதம், சனிக்கிழமை, ரோகினி நட்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில், தகப்பனார் சூரியபகவானுக்கும்,  தாயார் சாயாதேவிக்கும் பூர்வ புண்ணிய பொங்கு சோபன புத்திரன் சனீஸ்வரன் என்ற  சனி பகவான் ஜனனமானார். 

 அவர் பிறந்தநாளைதான் புரட்டாசி மாதம் வரும் ஒவ்வொரு சனி கிழமையும் விரதம் இருந்து அனுஷ்டிக்கிறோம். 

 எதற்கு? நீடித்த ஆயுளை பெற சனிபகவானின் அருளை பெற.  இது கோவிந்தனுக்கும் உரிய நாள் என்பது உண்மைதான்.  எள்தான் இவரது தானியம்.  அந்த எள் விஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து வந்ததாக சொல்லப் படுகிறது. இங்கே குறிப்பிட்டாக வேண்டிய ஒரு விஷயம் இது.   மற்ற கிரகங்கள் என்ன தான் யோக நிலையில் இருந்தாலும் சனிபக வானின் சம்மதம் இல்லாவிட்டால்  யூகத்தை பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.

 அதே சமயம் சனிபகவான் கொடுக்க துணிந்து விட்டால்,  அதை யாராலும் தடுக்க முடியாது. எதற்கு வம்பு என்று மற்ற கிரகங்கள் விலகி கொள்ளும்.

நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் என்று சொல்வார்கள்.

 அதனால் அவரை ‘சனீஸ்வரன்’ என்று போற்றுவர். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

 இதைத்தான் ‘ஏழரைச்சனி’ என்கிறார்கள். ‘கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி’, ‘யாரை விட்டது சனி’ என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.

ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து,

”உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர்  எவரேனும் உண்டா?” என்று கேட்டான்.

அதற்கு சனீஸ்வரன், ‘இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை.

ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!’ என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.

‘எங்கே செல்கிறீர்கள்?” என்று இந்திரன் கேட்க, ‘சிவனைத் தரிசிக்க!” என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.

நேராக கயிலாயம் சென்றவர், சிவன் – பார்வதி தேவியை வணங்கி நின்றார்.

”சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?” என்று கேட்டார்.சிவபெருமான்.

”பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்” என்றார் சனீஸ்வரன்.

”எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா. விளையாடுகிறாயா? கிரகங் களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?’ என்று கேட்டார்.

”ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்” என்று கேட்டார் சனீஸ்வரன்.

”ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது’ என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார்.

 ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?

ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன்.

ஏழரை நாழிகை கடந்தது. சிவபெரு மான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார்.

 சனீஸ்வரனை நோக்கி, ”பார்த்தாயா சனீஸ்வரா… உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?” என்றார்.

”இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்” என்றார்.

‘சனீஸ்வரனின் விதி’யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான்.

ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.

சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை. திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.

ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.

இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன.

ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.

அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ”பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்” என்று வேண்டினார்.

‘எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்’ என்றார் ஸ்ரீராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி,  ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு” என்றார்.

”சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ள லாம்” என்றான் அனுமன்.

”ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?”என்று கேட்டார் சனீஸ்வரன்.

”என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது.

என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும்.

‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.

அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு,

மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார்.

பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று.

அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. ‘தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூடச் சிந்தித்தார்.

 அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.

”சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், ”ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன்.

சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்’ என்றார் சனீஸ்வரன்.

”இல்லை, இல்லை… இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?’ என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன்,

”அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றார்.

”ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்’ என வரம் கேட்டார் அனுமன்.

சனியும் வரம் தந்து அருளினார்.

பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பீடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து

மங்குசனி, தங்குசனி, பொங்குசனி என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து,

முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ”ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம” என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!   

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 #வாழ்க_வளமுடன்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி, கொடுத்தாலும் இதை போன்ற அரியதகவல்கள், நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும். தெரிந்து கொண் டால் மட்டும் போதுமா?

அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம். இதை தவறாது செய்து முடித்தால், உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி, உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி.

அப்படிப்பட்ட , ஒரு தேவரகசியம் போன்ற தகவ லை, நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி

தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப் பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.

உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தா லும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.

இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி வன்னி மர விநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும், ஒரு மிகப் பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக் கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா, தெரியவில்லை!. ஆனால், உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..

செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கி யமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்ப து , உங்கள் முன்னோர் வழிபாடுதான்.

உங்கள் முன்னோர்களுக்கே, நீங்கல் உணவி டும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தி யை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான ஜீவ ராசி  காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடு வது வழக்கம். தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்த காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள்.

திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை “கா.. கா’ என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.

அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைக ளும் பறந்துவரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.

அப்படிச் சுவைக்கும் போது அந்தக் காக்கைகள்  “கா… கா…’’ என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக்காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றி லைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்க ள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழி பாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.

 

இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப் படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

காக்கை சனிபகவான் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சிதருமாம். காக்கைகளில் நூபூரம் பரிமளம், மணிகாக்கை அண்டங்காக்கை என சிலவகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காணமுடியாது. எமதர்மரா ஜன் காக்கை வடிவம் ஏடுத்து மனிதர்கள் வாழுமிடம்சென்றுஅவர்களின்நிலையைஅறிவாராம்.

அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதர ர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஓரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.

காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள்.வந்து கரைந்தால அதற்கு உடனே உணவிடவேண்டும்.

எனவே, காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்…

முதலில் நளதீர்த்தம் சென்று, குளத்தை வலமாக பிரதட்சணம் செய்து குளத்தில் நடுவில் இருக்கும், நளன், தமயந்தி குழந்தைகள் சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு முகமாக நின்று 9 முறை மூழ்கி எழ வேண்டும். பின், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் தண்ணீர் தெளித்துக் கொள்ள வேண்டும்.

கோயிலுக்குள் உள்ள சுவர்ண கணபதியை வணங்கி, சுப்ரமணியர் சந்நிதியை தரிசனம் செய்தபின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை யும், பின் தியாகேசரையும் தரிசிக்க வேண்டும் வலமாக வந்து, அம்மன் சந்நிதியை தரிசிக்க வேண்டும். கடைசியாக சனிபகவான் சந்நிதி வந்து வழிபட வேண்டும். பின்னர் பெரிய பிரகாரத்தை வலம் வர வேண்டும். அவரவர்க ளுடைய வசிக்கும் சக்திக்கும் ஏற்றபடி சனிபக வானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம், தர்ப்பணம், ரட்சை தானம், பிரீதி நவ நமஸ்கா ரம், நவ பிரதட்சணம் செய்யலாம்.

எல்லாநாளும் சனீஸ்வரரை வணங்கலாம் திருநள்ளாறு க்ஷேத்ரம் சனிபகவானுடன், தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட மூர்த்திகளை யும் கொண்டது. இங்கு சனிக்கிழமை மட்டும் தான் வழிபட வேண்டும் என்று சிலர் தவறாக வழிகாட்டுகின்றனர். இதனால் பக்தர்கள் கால்கடுக்க நின்று, சில நிமிடம் மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

ராகுகாலத்தில் ராகுவை வழிபடுவதைப் போன்றே சனிபகவானை, சனிஹோரை நேரத்தில் வழிபடலாம். இதன்படி ஞாயிறு காலை 10-11, மாலை 5-6, திங்கள் காலை 7-8, செவ்வாய் பகல் 11-12, இரவு 6-7, புதன் காலை 8-9, வியாழன் பகல் 12-1, இரவு 7-8, வெள்ளி காலை 9-10, மாலை 4-5, சனிக்கிழமை காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, ஆக இந்த வார நாள் நேரங்களிலும் சனிபகவானை வழிபட்டு அவரின் பரிபூரண அருளைப் பெறலாம்.

சனிக்கிழமை விரதம்:

சனிக்கிழமை தோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினமும் இரவு படுக்கும் போது அதனை தலைக்கு அடியில் வைத்து படுத்து மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். இதனை நமது வசதிக்கேற்ப 9, 48, 108 வாரங்கள் என பின்பற்றலாம். தேங்காய் முறியில் நல்ணெண்ணை விட்டு எள்ளு முடிச்சிட்டும், அல்லது எள் தீபம் (தில தீபம்) ஏற்றலாம். சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலவஸ்திரம், வடை மாலை சாத்தலாம். எள் சாதம் நைவேத்யம் செய்யலாம். அர்ச்சகர், அந்தணர் ஏழைகளு க்கு அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், அபிஷேக ஆராதனை மண்டல பூஜை செய்யலாம்.

எள்ளை சுத்தம் செய்து வறுத்த வெல்லம், ஏலக்காய் பொடியுடன் இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும் சனிபக வானுக்கும் படைத்து வினியோகிக்கலாம். ஆஞ்சநேயர், தர்மராஜன் ஆகிய தேவதைக ளை ஆராதனை செய்யலாம். அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திரம் அல்லது சனிபகவானின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியில் அர்ச்ச னை செய்யலாம் எல்லா நாளும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.

ராஜா சுவாமிநாத குருக்கள், திருநள்ளாறு கோயில் தலைமை அர்ச்சகர்

துலாமுக்கு பெயர்வதால் என்ன நிலை: இந்தமுறை சனிபகவான், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். துலாம் சனிக்கு உச்சவீடு. எனவே, அதிக ஆற்றலோடு திகழ்வார். எனவே, இந்தக்காலத்தில் ஏழரை, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி( அஷ்டமத்து சனியில் பாதி கஷ்டத்தைக் கொடுக்கும் நிலை) ஜீவனச்சனி(பணி, தொழிலில் சிரமம்) ஆகியவற்றை அனுபவிக்க இருப்பவர்கள் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.

சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர் களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( தஞ்சாவூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம்.

ஏழரையை பிரிக்கும் விதம்:

 ஏழரைச் சனி ஒருவரது வாழ்வில் பொதுவாக மூன்று முறை வரும். அதாவது  இரண்டறை ஆண்டுகள் அவர் ஒருவரது வாழ்வில் சஞ்சரிப்பார். அதில் முதல் முறை வருவதை மங்கு சனி, இரண்டாவதை பொங்கு சனி, மூன்றாவதை மாரகம் எனப்படும் மரணச்சனி என்பர். எனவே, இரண்டாம் முறையாக சனிப்பெயர்ச்சியை அனுபவிக்க இருப்பவர்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை. சிலருக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோக முன்னேற்றம், வீடு கட்டுதல் போன்ற நீண்டநாள் கனவுகள் இந்தக் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்புண்டு. மற்றவர்களுக்கு, அவரவர் சுயஜாதகத்தில், தசாபுத்தியின் அடிப்படையில் சிரமங்கள் குறையும்.

சனிப்பெயர்ச்சி பலனடையும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், தனுசு

சுமாரான பலன்பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், மகரம், கும்பம்

பரிகார ராசிகள்: கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம்

ஏழரைச்சனி யாருக்கு: கன்னி – கடைசி இரண்டரை ஆண்டுகள், பாதச்சனி, வாக்குச்சனி

துலாம் – இரண்டாம் கட்டம் ஜென்மச்சனி

விருச்சிகம்- ஏழரை ஆரம்பம், விரயச்சனி

அஷ்டமச்சனி யாரைத் தாக்கும்: மீனம்- இதுஏழரைச்சனிக்கு நிகராகவோ, அதற்கு அதிகமாகவோ கஷ்டம் தரும் எனச் சொல்லப்படுவதுண்டு.

சனி தோஷம் விலக்கும் பாடல்: அஷ்டமச்சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியினால் (மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ராசியினர்) இந்த சனிப்பெயர்ச்சியால், எதிர்பாராத இடர்ப்பாடுகளை சந்திக்க நேரும். அதில் இருந்து இறையருளால் தப்பிக்க படிக்க வேண்டிய பதிகம் இது.

 1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்

பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,

ஆகம் ஆர்த்த தோலுடையன், கோவண ஆடையின்மேல்

நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே

 1. தோடுடைய காதுடையன், தோலுடையன், தொலையாப்

பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்

ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த

நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே

 1. ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்

பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த

மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை

நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே

 1. புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே

மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,

பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,

நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே

 1. ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்

ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி

நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை

நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே

 1. திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்

எங்கள் உச்சி, எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச,

தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்

நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே

 1. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவு அதிர,

அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,

செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே

நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே

 1. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்

சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்

பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,

நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே

 1. உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி

அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்

எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்

நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே

 1. மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்

பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,

மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே

நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே

 1. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,

நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல

பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்

உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே!

திருமாலின் தீவிர பக்தரான திருக்கச்சி நம்பிகள் காஞ்சி பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்தார்.

இவரை ஏழரைச்சனி பிடிக்க வேண்டிய காலம் வந்து விட்டது.

இவரிடம் சனி பகவான், சுவாமி, தங்களை பிடி க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதற்கு தங்களது அனுமதி வேண்டும்,என வணங்கி நின்றார்.

அதற்கு நம்பிகள் ” பகவானே, தாங்கள் என்னை பிடிப்பதால் ஏற்படும் கஷ்டங்களை நான் தாங்கி கொள்வேன். அந்த கால கட்டத்தி ல் நான் பெருமாளுக்கு செய்யும் கைங்கரிய த்தில் ஏதேனும் இடைஞ்சல் ஏற்பட்டு விடுமே, எனவே ஏழரை ஆண்டுகள் என்பதை கொஞ்ச ம் குறைத்து கொள்ள கூடாதா என்றார்.

அதற்கு சனீஸ்வரர் ஏழரை மாதங்கள் பிடிக்க ட்டுமா? என்றார். நம்பியோ ஏழரை மாதம் அதிகம் என்றார். அப்படியானால் ஏழரை நாட்கள பிடிக்கட்டுமா? என்றார் சனி பகவான்.

வேண்டுமானால் ஏழரை நாழிகை பிடித்துக் கொள்ளுங்கள் என்றார். சனிபகவானும் ஒத்துக்கொண்டார். மறு நாள் நம்பிகள்,

பெருமாளுக்கு ஆலவட்டம் விசிறி விட்டு தமது இருப்பிடம் திரும்பினார். அப்போது சனிபகவான் நம்பிகளை பிடித்து கொண்டார்.

நம்பிக்கு ஏழரை ஆரம்பமாகிவிட்டது. அந்த நேரத்தில் கோயில் கருவறையில் திருவாராதனம் செய்ய ஆரம்பித்தார் ஒரு அர்ச்சகர்.

அப்போது நைவேத்தியம் வைக்கும் தங்க கிண்ணத்தை காணவில்லை. இதை யார் எடுத்திருப்பார்கள், யோசித்து, யோசித்து பார்த்தார் அர்ச்சகர்.

அப்போது தான் அவருக்கு ஞாபகம் வந்தது. கடைசியாக பெருமாளுக்கு கைங்கரியம் செய்து விட்டு போனது திருக்கச்சி நம்பி.

அவரோ மாபெரும் மகான் அவரா இந்த தட்டை எடுத்திருப்பார். ஒரே குழப்பம். இருந்தாலும் சந்தேகம் மட்டும் தீரவில்லை. கோயில் அதிகா ரிக்கு இந்த அர்ச்சகர் தகவல் தெரிவித்து விட்டார்.

கோயில் ஊழியர்கள் கோயில் முழுவதும் தேடினார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை. கடைசியாக நம்பிக்கு ஆள் அனுப்பி வரவழை த்து விசாரிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

நம்பிகள் வரவழைக்கப்பட்டார். தங்க கிண்ண ம் என்னாயிற்று?

ஆளாளுக்கு கேள்வி கேட்டனர். நெருப்பில் விழுந்த புழுவாய் நம்பிகள் துடித்தார். பெருமா ளே, உனக்கு நான் செய்த பணிக்கு, திருட்டுப் பட்டமா எனக்கு கிடைக்க வேண்டும்?

எப்போதும் என்னிடம் பேசுவாயே, இப்போது பேசு. எல்லோரது முன்னிலையிலும் பேசு என புலம்பினார். ஆனால் பெருமாளோ அமைதி யாக இருந்து விட்டார்.

நம்பிகள் நம்பிக்கை இழக்கவில்லை, பெருமாளே எல்லாம் உன் விருப்பப்படி நடக்கட்டும் என சொல்லிவிட்டு, தண்டனையை ஏற்றுக்கொள்வதற்காக அரசவை நோக்கி காவலர்களால் ரோட்டில் அழை த்து செல்லப்பட்டார் நம்பி.

மக்கள் அனைவரும் மிகவும் ஏளனமாக பார்த்தனர். இவருக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. இதற்குள் ஏழரை நாழிகை முடி ந்து விட்டது. அப்போது கோயில் அர்ச்சகர்கள் ஓடி வந்தனர்.

சுவாமி கிண்ணம் கிடைத்து விட்டது. சுவாமி யின் பீடத்திற்கு கீழே கிண்ணம் மறைந்து இருந்தது. அறியாமல் நடந்த தவறுக்கு மன்னியுங்கள் என மன்னிப்பு கேட்டனர்.

சனிபகவானும் இறைத்தொண்டு செய்த நம்பியிடம் நடந்ததை விளக்கி மன்னிப்பு கேட்டு விலகிக் கொண்டார்.

மாபெரும் மகானுக்கே சனிபகவானால் இந்த பாதிப்பு என்றால், சாதாரணமான நமக்கு சொல்லவே வேண்டாம். எனவே பெருமாளை வழிபட்டு சனிதோஷம் நீங்கப்பெறுவோம்…

காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது.

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர்.

முதல் சுற்று…

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக் காணலாம். சனிதரப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு…’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. “அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க” என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும்….

அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால் தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.

மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான்….

“சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா”  என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா” என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்”  என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.

ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது? “குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்” என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள்.

சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்.  இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு”  என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.

இரண்டாவது சுற்று…

இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார்.

ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

“என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சனி பகவானால் தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா…?’’ என்று தயங்குவீர்கள்.

அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்?

வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோ நிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்”  என்றொரு வாக்கியம் உள்ளது.

ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான். ‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்” என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன்…

தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர்.

கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது….

 

சனி பகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.

மூன்றாவது சுற்று….

கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும்.

எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது.

“நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்” என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல… சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்…