Saneeswara Temple

அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில்(கேது ஸ்தலம்) ,கீழப்பெரும்பள்ளம்,வாணகிரி

Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

ஏறத்தாழ 1900 வருடங்களாக இருந்து வரும் ஒரு கோவில் ஆகும். நவகிரகங்களில் இது கேதுவுக்கு உரியது. சோழ மன்னர்கள் கட்டிய அழகான கோவில். இந்த தலத்தின் வரலாறு என்னவெனில், அசுரர்களும் தேவர்களும் சேர்ந்து பாற்கடலை வாசுகி என்ற நாகத்தைக் கொண்டு, மேரு மலையை சுற்றி மத்தாக உபயோகித்து அமிர்தம் பெற முயற்சி செய்தனர். ஒரு புறம் தேவர்களும் மறுபுறம் அசுரர்களும் இழுத்தனர். மலையைச் சுற்றியதால் வாசுகியின் உடல் புண்ணாகியது. வலி தாங்காது, நாகப்பாம்புவின் தன்மையால், விஷத்தைக் கக்கியது. இதனால் கலவரம் அடைந்த தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். ஈஸ்வரனும் அவர்களைக் காக்க, தானே அந்த விஷத்தை எடுத்து விழுங்கினார். பார்வதி தேவி எம்பெருமானின் கண்டத்திலேயே அவ்விஷத்தை நிறுத்தி நிவர்த்தி செய்தார். இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னர், வாசுகி, தன்னால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட கஷ்டத்தையும் தன்னால் சிவ அபச்சாரம் நடந்து விட்டதே என்று கவலை கொண்டு, மனம் வருந்தி, தனக்கு பிராயசித்தம் தருமாறு வேண்டி, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள். சிவபெருமான் காட்சி தந்து, ஆசி வழங்கி, வாசுகியின் தியாகத்தை பாராட்டினார். வாசுகி சிவபெருமானிடம், இந்த தலத்தில் காட்சி தந்த இடத்திற்கு பெருமை சேர்க்க, இங்கு அதே கோலத்தில் எழுந்து அருள் வேண்டும் என கெஞ்சினார். அவளது கோரிக்கையின் படி இங்கு நாகநாதராக அருள் பாலிக்கின்றார்.

இங்கு கேது பிரதான மூர்த்தியாகும். மற்ற நவகிரகங்கள் இல்லை. தனி சன்னதியில் பாம்பு தலையுடன் மனித உடலோடு காட்சி தருகிறார். நிழல் கிரகமாக கருதப்படும் கேது தானாகவே ஒளிவிடும் சூரிய, சந்திர கிரகத்துடைய அடி பாகமாகவே உள்ளது. இங்கு அருள் பாலிக்கும் கேது பகவான் சிம்மபீடத்தில் சிவபெருமானை நோக்கி வணங்கியபடி உள்ளார். ஞானத்தை அள்ளி தரும் கேது இங்கு அனுகிரகம் செய்யும் அன்பராகவே வீற்றிருக்கிறார். இவருக்கு ராகு காலத்தில், எமகண்டத்தில் விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது. கேதுவின் சன்னதியில் சூரிய பகவானின் சிலைகள் இரண்டு இருக்கின்றன. அத்துடன் சனீஸ்வரர் சிலையும் உண்டு. தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள உத்ராயண காலத்தில் ஒரு சூரியனுக்கும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சணாய காலத்தில் மற்றொரு சூரியனுக்கும் தனிப்பட்ட விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது.
சுவாமி : அருள்மிகு நாகநாத சுவாமி.

அம்பாள் : அருள்மிகு சௌந்தரநாயகி.

மூர்த்தி : நடராசர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், பிள்ளையார், கேது, தனி அம்பாள்.

தீர்த்தம் : நாகதீர்த்தம்.

தலவிருட்சம் : மூங்கில் மரம்.

கேதுவின் திசை – வட மேற்கு,

கேதுவின் ரத்தினம் – வைடுரியம்,

கேதுவின் வண்ணம் – கரும்புகை வண்ணம்,

கேதுவின் சுவை – உறைப்பு,

கேதுவின் வாகனம் – சிங்கம்,

கேதுவின் தானியம் – கொள்ளு,

கேதுவின் தெய்வம் – விநாயகர்,

கேதுவின் மலர் – செவ்வரளி,

கேதுவின் உலோகம் – கருங்கல்,

கேதுவின் கிழமை – ஞாயிறு.

கேதுவின் பலன்கள் – தரித்திரம், வியாதிகள் மற்றும் பீடைகளில் இருந்து நிவர்த்தி.

இங்கு கேது பகவான் தனிச் சன்னதியில் எழுந்தருளி உள்ளார். இங்கு வந்து வழிபட்டால் கேதுத் தொடர்பான தோஷங்கள் விலகி நன்மைகள் நடக்கும். கேது தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் திருட்டு பயம், கெட்ட பழக்கங்கள், சொத்து சேதம் அடைதல் அல்லது நாசமடைதல், மானமிழத்தல் மற்றும் புத்திர தோஷம் போன்றவற்றால் அல்லல் படுவர். இங்கு வந்து கேது பகவானை தரிசிக்கும் பக்தர்கள் தோஷங்களில் இருந்து முக்தி அடைவர் என நம்பப்படுகிறது.

ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம் கீழப்பெரும்பள்ளம். கேதுவின் நிறம் சிவப்பு என்பதால், இவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபட வேண்டும். மேலும், கொள்ளு சாதம் படைத்து வழிபட வேண்டும். படைத்த கொள்ளு சாதத்தை இங்கேயே வரும் பக்தர்களுக்கு விநியோகித்துவிட வேண்டும். வீட்டுக்கு எடுத்துச்செல்லக் கூடாது. ஜாதகத்தின்படி கேது தசை மற்றும் கேது புத்தி நடைபெறும் காலங்களில் இத்தலம் வந்து கேதுவுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மை அடையலாம்.

Rengha Holidays & Tourism

Rengha Holidays & Tourism

Rengha Holidays tour operators offers a vast range of holiday packages for destinations across the world. This leading online travel agency caters to various segments of travelers travelling to every part of the globe.

About Us

Rengha holidays South India Tour Operators ( DMC ) make your international travel more convenient and free, We facilitate your visa requirements, local transport, provide internet access and phone connectivity, hotel booking, car rentals, Indian vegan meals and much more. We have family tour packages, honeymoon tour packages, corporate tour packages and customized tour packages for some special occasions. Rengha holidays South India tour operators caters to all your holiday needs.

Recent Posts

Follow Us

Famous Tour Packages

Weekly Tutorial

Sign up for our Newsletter