பாதாள உலகத்தில் இருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால், இக்கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலமும் திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கியபோதிலும், நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிராகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கிறார்.
பொதுவாக, ராகு மனிதத் தலை, பாம்பு உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால், அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும்போது பாலின் நிறமும் நீலமாகிவிடுகின்ற அதிசயத்தையும் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை.
ராகு பகவான், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்து இறைவன் “நாகநாதர்” எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்தபோதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் தருவது சிறப்பு. நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலம் என்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனி சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் “மங்கள ராகு”வாக அருளுவது விசேஷம். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகன் ஆவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார்.
கோயில்: நாகநாதர் கோயில், திருநாகேஸ்வரம் (ரகு கோயில்)
சுவாமி : அருள்மிகு திருநாகநாத சுவாமி.
அம்பாள் : அருள்மிகு பிறையணியம்மன்.
மூர்த்தி : ஆதி விநாயகர், கிரிகுஜாம்பாள், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகம், இராகு பகவான், சேக்கிழார், பாலறாவாயார், அழகம்மை, அறுபத்து மூவர்.
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி.
தலவிருட்சம் : செண்பகம்.
உலோகம் – கலப்பு
ரத்தினம் – கோமேதியகம்
நிறம் – அடர் பழுப்பு
மாற்றம் நேரம் – 1-1 / 2 ஆண்டுகள்
மகாதிசை நீடிக்கும் காலம் – 18 ஆண்டுகள்
தலச்சிறப்பு :
இது சேக்கிழாரின் அபிமான ஸ்தலம். சேக்கிழாரால் திருப்பணி செய்யப்பட்டது. இராகு பகவான் சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க மகாசிவராத்திரி அன்று நாகநாத சுவாமியை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றார். இத்திருக் கோயிலில் இராகு பகவான் மங்கள ராகுவாக நாகவல்லி நாககன்னி சமேதராய்க் காட்சி அளிக்கிறார். இராகு பகவானின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்படும் பால் நீல நிறமாக மாறுகிறது. இராகுவினால் ஏற்படக் கூடிய தோஷங்கள் அகல இராகுவுக்குப் பாலாபிஷேகம் செய்கின்றனர். இத்தலத்தில் நாகநாத சுவாமி அருகில் பிறையணியம்மன் சன்னதி உள்ளது. கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் அம்பாளின் பாதத்தில் நிலவு ஒளிபட்டுப் பாதத்தில் இருந்து சிரசிற்குச் செல்லும் காட்சி அற்புதமாகும். இத்தலத்தில் இறைவி கிரிகுஜாம்பாள், லட்சுமி, சரஸ்வதி ஆகியோருடன் அருள் பாலிக்கிறார். அம்பாளுக்குப் புனுகு மட்டுமே சாத்தப் படும். நவக்கிரகத் தலத்தில் இது இராகுத் தலமாகும். இராகு தோஷ பரிகாரத்திற்காக மக்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.
வழிபட்டோர் : இராகு பகவான், ஆதிசேஷன், தட்சகன், கார்க்கோடகன், கெளதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன், சேக்கிழார்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது. கிரிகுசாம்பிகை சந்நிதி உள்ள தனிக்கோவிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.
இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரியபுஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகிறது. இத்தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு, ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களால் ஆன சக்கரங்களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவது போன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கௌதம முனிவர் இங்கே வழிபட்டு அகலிகையோடு மீண்டும் இணைந்தார். நளன் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். பாண்டவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். சந்திரவர்மன், இத்தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி நாகேசுவரரை வழிபட்டு நாய் வடிவு நீங்கினான். இந்திரன் சாபம் நீங்கப்பெற்றான்.
ஜாதகத்தில் ராகு திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருநாகேஸ்வரம் கோவிலுக்கு வந்து விநாயகர், சிவன், கிரிகுஜாம்பாள் ஆகியோரை வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஹோமம், நாகசாந்தி செய்யலாம். கோவிலில் உள்ள வன்னி மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் திருமண தோஷம் விலகும். அதே போன்று வீட்டிற்கு நாகம் வந்தால் அவர்கள் பித்தளையில் நாக வடிவினை செய்து கோவிலில் வைக்க வேண்டும். நாகதோஷம் உள்ளவர்கள் கல்லால் ஆன நாக வடிவை வைத்து தோஷம் நீங்க வழிபாடு செய்ய வேண்டும்.
ராகு திசை கடுமையாக பாதித்தால் செவ்வாய்க்கிழமை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் துர்க்கை, காளியை வழிபடுவது நல்லது. உளுந்துசாதம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். நாகநாதருக்கு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தால் சகல தோஷங்களும், துன்பங்களும் நீங்கி நாகநாதரின் பரிபூரண அருள் கிடைக்கும்