அன்பிற்குரிய மிதுன ராசி அன்பர்களே ! உங்களுக்கு இதுவரை சப்தம ஸ்தானத்தில் இருந்து கண்டக சனி தோஷத்தை கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான், தற்போது சார்வரி வருடம், மார்கழி மாதம், 12 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி, சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு செல்லும் சனி பகவான் அதாவது உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்..
உங்களுக்கு இது நாள் வரை கண்டகச் சனி தோஷத்தை கொடுத்து, பலருக்கு வீட்டில் தங்க முடியாத நிலையையும் வெளியூர், வெளிநாட்டு யோகத்தையும் கொடுத்து, மேலும் வேறுபாடுகளையும் ஒருசிலருக்கு ஏற்படுத்தி கணவன், நண்பர்களுக்குள், மனைவிக்குள் கருத்து பிரச்சனைகளையும், கூட்டுத்தொழிலில் சங்கடங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த கண்டக சனி தோஷமானது, தற்போது விலகி அஷ்டமச்சனி தோஷமாக மாறி உள்ளது. இந்த அஷ்டம சனி தோஷ காலத்தில் என்ன பலன்கள் மிதுன ராசி அன்பர்கள் அனுபவிப்பார்கள் என்பதை காண்போம் வாருங்கள்.
மிதுனம் சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
- தனம் வருமானம் பெருகும்
- கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் வரும்
- பதவி உயர்வு, தொழில் வளர்ச்சி ஏற்படும்
- ஆரோக்கியத்தில் கவனம் தேவை
- சிறு முதலீட்டில் அதிக லாபம் கிட்டும்
- வெளிநாட்டு பயணம் தொழில் அமையும்
- உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும்
- தொழில் தாமதம் நீங்கும்
- தடைபட்ட திருமணம் நடக்கும்
- திருமண வாழ்வில் தொழில், வேலைக்காக பிரிவுகளை சந்திப்பார்
- கல்வியில் படிப்படியாக மேன்மை கிட்டும்
விரிவான பலன்கள்
மிகச் சிறப்பாக சிந்தித்து நுட்பமாக செயல்பட்டு வரும் மிதுன ராசி அன்பர்களே தங்களின் முயற்சிகள் எதுவாக இருந்தாலும் முதலில் தோல்வியை கொடுத்தாலும் நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என்பதை மறவாதீர்கள். ஆகவே, எந்த ஒரு செயலாக இருந்தாலும் முதலில் ஒரு தடை உருவாகி தான் வழி கிடைக்கும். ஆகவே, தடையை கண்டு கலங்காமல் தொடர்ந்து முயற்சி செய்யும்பொழுது நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
வருமானம்
வரவேண்டிய பணம் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் தடைபடும். இருப்பினும் நிச்சயமாக வரவேண்டிய பணம் மற்றும் வருமானங்கள் வந்து சேர்ந்துவிடும். பொதுவாக நீங்கள் எதிர்பார்க்கும் காலத்தில் வரவேண்டிய பணம் வராது. எதிர்பார்க்காத நேரத்தில் வரவேண்டிய பணம் அல்லது தங்களுடைய லாபம் அனைத்தும் வந்து சேரும். உத்தியோக உயர்வினால் வருமானம் உயர்வு ஏற்பட்டு பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள மிக அருமையான காலக்கட்டம் இது. குழந்தைகளின் மேற்ப்படிப்பிற்காக செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணை மூலமாக பொருளாதார லாபம் ஏற்பட்டு அது எதிர்பாரா செலவீனங்களுக்கு பக்கபலமாக இருக்கலாம். வங்கி சேமிப்புகள் உயர்வடையும்.
திருமண வாழ்க்கை குடும்பம்
திருமண வாழ்க்கை சற்று பிரச்சினையை ஏற்படுத்தினாலும் அதை சமாளிக்கும் திறன் உங்களுக்கு உண்டு. கணவன் மனைவிக்குள் பல நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் தீரும், திருமண வாழ்வில் தொழில், வேலைக்காக பிரிந்தவர்கள் சேர்வார்கள். குடும்பத்தை பொறுத்தவரை கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு விலகும். தடைபட்ட திருமண முயற்சிகள் கை கூடும்.
குழந்தைகள்
புத்திரபாக்கியம் எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு சற்று தாமதத்தை ஏற்படுத்தும். மேலும் குழந்தைகளுக்கு இந்த காலத்தில் தொழில் அமைவது வேலை கிடைப்பது போன்ற சுபப் பலன்கள் நடக்கும் சிலர் தந்தை வழி முன்னோர்களுக்கு கர்மம் செய்யும் சூழலும் ஏற்படும். குழந்தைகள் வேலைகள் வேலைகள் கிடைக்கும்.
மிதுனம் வேலை, தொழில்
தொழில் நிலையைப் பொறுத்தவரை மிகச் சிறப்பாகவே இருக்கும் எனக் கூறலாம். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு தொழிலில் ஒரு மாற்றத்தையும் சந்திப்பர் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி செய்பவர்களுக்கு இந்த காலம் ஒரு பொற்காலம் எனக் கூறலாம் வெளிநாட்டு முயற்சி மிகச்சிறப்பாக நடைபெற்று வாய்ப்புகள் கிட்டும். அடிமைத் தொழில் புரிபவர்களுக்கு சிறந்த காலகட்டமாக உள்ளது. தரகு, கமிஷன், தகவல் தொடர்பு, விளம்பரம் மற்றும் பயணம் சார்ந்த தொழில் புரிபவர்களுக்கு இது ஒரு முன்னேற்றமான காலகட்டமாகும். எண்ணெய் மற்றும் சுரங்கத் தொழில் செய்பவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். யூக வணிகத் தொழில்களான பங்கு மற்றும் பொருள் வர்த்தகம் செய்பவர்களுக்கு மிகச் சிறந்த கால கட்டமாக இருக்கும். சிறு முதலீட்டாளர்கள் தொழிலில் அதிக லாபம் ஈட்ட முடியும். தரகு தொழில் புரிபவர்கள் அதிக முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது ஜனவரி 2021 க்கு பிறகு தரகுத்தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்
வீடு வாகனம்
இப்பெயர்ச்சியினால் புதிய வீடு கட்டும் முயற்சியாவது சற்று தடைபட்டாலும் நடந்துவிடும். இந்த காலத்தில் புதிய வீடு கட்டுதல், பழைய வீட்டை பராமரிப்பு செய்தல் சிறப்பு. வீடு,வாகனத்திற்காக கடன் படுவீர்கள்.
ஆரோக்கியம்
அடி வயிறு மற்றும் குடல் சமந்தப்பட்ட உபாதைகள் வரலாம். நல்ல வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றுவது அடிவயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு ஒத்துழைக்கும். குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவு ஏற்படலாம், முதியோர்க்கு மூட்டு மற்றும் பாதங்களில் வலி உண்டாகலாம் ஆதலால் வெளியே பயணிக்கும் போது கவனம் தேவை.
மிதுனம் கல்வி
குழந்தைகளுக்கு அறிவாற்றல் நன்றாக வெளிப்படும் காலமாக இந்த சனிப்பெயர்ச்சி கால கட்டம் திகழப்போகிறது. குழந்தைகள் பொது அறிவு பயன்படுத்தி ஈடுபடும் போட்டிகளில் எளிதில் வெற்றிபெற்று புகழ் அடைய இந்த சனிப்பெயர்ச்சி அனுகூலமாக திகழப்போகிறது. கல்லூரி செல்லும் மாணவர்கள் கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கவும், கிரகிக்கும் ஆற்றல் பெறுகவும் சிறந்த காலகட்டமாக இருக்கும். ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடுபவர்களுக்கு ஆரம்ப காலகட்டத்தில் தடை ஏற்பட்டாலும் பிறகு வெற்றிகரமாக ஆராய்ச்சியை முடிக்க சிறந்த ஒரு காலகட்டமாக அமைகிறது.
பரிகாரம்
உங்களின் இஷ்ட தெய்வ கோவில்களுக்கு எண்ணை தானம் செய்வது மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதுவதால் மேலும் சிறப்பான சுப பலன்களை சனி பகவான் வழங்குவார்
பொதுவாக மிதுன ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் சற்று போராட்டத்துடன் மேன்மையைத் தரும் காலமாக அமையும். தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம் நன்றி வணக்கம்.