A. சூரியன்
ப்ரம்மாவால் படைக்கப்பட்ட ஏழு ரிஷிகளின் மூத்தவர் மாரி மகரிஷியாவார். இவருடைய புத்திரர் பெயரின் முதல் மனைவி அதிதிக்குப் பிறந்த குழந்தைதான் ஆதித்யன், பிரதானமான சூரியன் எனப்படும் கிரகமாகும். இவருக்கு கதிரவன், பானு ஆதித்யன், தினகரன், ஞாயிறு போன்ற இன்னும் பல பெயர்களும் உண்டு. ராசி வீடுகள் 12ல் ஒரே வீடு மட்டுமே ஆட்சி ராசியாகும் இதை ராஜகிரகம் என்பார்கள், சிம்மராசியே இதன் ஆட்சி வீடாகும். மூலத்திரிகோணம் சிம்மம் தான். இதன் உச்சவீடாக மேஷம் அமைந்துள்ளது. நீச வீடு துலமாகும்.
27 நட்சத்திரங்களில் கிருத்திகை, உத்திரம், உத்திராடம், சூரியன் சாரம் பெற்றவையாகும். சூரியன் ஆத்மா, தந்தை போன்ற காரகம் வகிக்கிறார்.
சூரியனுக்கு சந்திரன், செவ்வாய், குரு மூன்றும் நட்புக் கிரகங்கள். புதன் – சமம். சுக்கிரன், சனி, ராகு, கேது நான்கும் பகைக்கிரகங்களாகும். இவர் சஞ்சரிக்கும் காலம் ஒரு ராசியில் ஒரு மாதம் வீதம் ஒரு ஆண்டில் 12 ராசிகளையும் சுற்றி வந்து விடுகிறார். சூரியனின் மகா திசை 6 ஆண்டுகள். இந்த மிகக்குறைவான 5 ஆண்டு காலத்தில் ஜாதகரைப் படாதபாடு படுத்தி வருகிறார்.
B. சந்திரன்
சந்திரன் சப்தரிஷிகளில் அத்திரிமகரிஷியின் புத்திரராவார் மேலும் புதனின் தந்தையுமாவார். இவருக்கு சந்திரன், சோமன் மதி, நிலவு, நீங்கள், அம்புலி எனப் பல பெயர்களும் உண்டு.
சந்திரன் தேவ குருவான பிரகஸ்பதியான வியாழன் மனைவி தாரையுடன் காதல் கொண்டு அவள் மூலம் புதன் என்ற புத்திரனைப் பெற்றாள். இதனால் தன்மாமாவான தட்சராஜனால் தேய்வு சாபம் பெற்றார். பின்னர் சிவபெருமான் அருளால், தேய்ந்த ஒளி வளரும் பேற்றையடைந்தார். இதனால் சந்திரன் 15 நாட்கள் தேய்வதும் 15 நாட்கள் வளர்வதுமாக தோற்றம் மாறும் நிலை ஏற்பட்டது.
சந்திரனுக்கும் ஒரே ராசி வீடுதான் ஆட்சி வீடாகும். அந்த ராசி கடகம். ரிஷப ராசி மூலத்திரிகோணமாகவும் உச்சராசியாகவும் அமைந்துள்ளது. விருச்சிக ராசி இதன் நீச ராசியாகும். சந்திரன் ஒரு ராசியைக் கடக்க 2 1/4 நாட்களாகிறது ராசிகளையும் சுற்றிவர 27 1/2 நாட்களாகின்றன. இவ்வித துரித சஞ்சாரத்தினால் ஒரு மாதத்தில் 12 ராசிகளிலுமுள்ள கிரகங்களை எல்லாம் ஒரு முறை சந்தித்துவிடுகிறது. இந்தக் காட்சியை ‘சங்கிரகம்’ என்பார்கள்
சந்திரன் புத்தியறிவுக்கும் உடலுக்கும். அன்னைக்கும் காரகராவார். கிரகங்களில் இதை ராணி என்று நவக்கிரக பரிபாலனம் குறிப்பிடுகிறது. ரோகிணி, அஸ்தம், திருவோணம் மூன்று நட்சத்திர சாரம் பெற்றுள்ளது. சூரியன், புதன் சுபர்களாவார்கள். செவ்வாய், குரு, சுக்கிரன், சனி நால்வரும் சமமாவர். ராகு கேதுக்கள் ஜென்ம பகை.
ஜெனன கால ராசிக்கு 8வது ராசியில் சந்திரன் கோச்சார முறையில் சஞ்சரிக்கும் போது ஜாதகருக்கு சந்திராஷ்டம் தோஷம் ஏற்படுகிறது. பிரயாணத்தில் கூட விபத்தோ, பொருள் திருட்டோ ஏற்படலாம். மற்ற கிரகங்களும் கூட அந்த 8ஆம் ராசிக்கு வரும்போது தோஷங்களைக் கொடுக்கத்தான் செய்யும்.
C. செவ்வாய் (அங்காரகன்)
சப்தரிஷிகளால் ஒருவரான பரத்வாசர் என்பவரின் புதல்வரே செவ்வாய். இச்செவ்வாய், விநாயகரின் அருளைப் பெற்றதால்
மங்களன்’ என்ற பெயரையும் அடைந்தார். பூமாதேவியால் வளர்க்கப்பட்டதால் பூமி காரகன்’ ஆனார். இவரை யுத்தகிரகம் என்றும் சொல்வார்கள். கிரகபரிபாலனத்தில் தளபதி என்ற பதவியைப் பெற்றுள்ளார்.
பாபக்கிரகங்களில் 2ஆம் இடத்தைப் பெற்றவர். இவருக்கு மேஷம், விருச்சிகம் இரண்டு ராசிகளும் ஆட்சி வீடுகளாகும் மேஷத்தில் மூலத்திரிகோணம் பெறுகிறார். மகர ராசி உச்ச வீடாகும். கடக ராசி நீச ராசியாகும். மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இந்த மூன்று நட்சத்திரங்களும், ஆதிபத்யமுள்ள பாதசாரங்களாகும். இவருக்கு சூரியன், சந்திரன், குரு இம்மூவரும் நட்புக் கிரகங்களாகும்.
சுக்கிரன் – சனி சமக்கிரகங்கள், புதன், ராகு, கேது மூன்றும் பகைவர்களாவார்கள். இவர் ஒரு ராசியைக் கடக்க மாதங்களாகின்றன. 12 ராசிகளையும் சுற்றி வர ஆண்டுகளாகின்றன. இவரது காரகத்வம், சகோதரர்கள், பூமி, வீடு போன்றவற்றிற்கு செயல்படுகிறது. உத்தியோக காரகன் என்றும் சொல்வார்கள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் திருமணத்தில் இந்தச் செவ்வாயின் பங்கும் உண்டு. ‘செவ்வாய் தோஷம்’ என்ற பெயரில் தோஷத்தை உண்டு பண்ணுவார். ஆண் பெண் இருவருக்கும் இத்தோஷம் ஏற்பட்டிருந்தால் திருமண தடை ஏற்படாது. ஒருவருக்கிருந்து மற்றவருக்கில்லையானால் திருமணம் செய்யலாகாது. மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும்.
D. புதன்
அத்திரி மகரிஷியின் மூத்த புதல்வரே சோமன் எனப்படும் சந்திரனாவார். இவர் ஜோதிடக்கலையில் வல்லவர். குருவின் பத்தினியான தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்த புத்திரராவார் இப்புதன் சுக்கிரனுக்கு அடுத்த சுப கிரகமாக விளங்குகிறார். இவருக்கு மிதுனம், கன்னி இரண்டு ராசிகளும் ஆட்சி வீடுகளாகும் கன்னியே மூலத்திரிகோண ராசியாகும். கன்னி ராசி உச்சராசியாகவும் அமைந்துள்ளது. மீன ராசியில் நீசம் அடைகிறது நட்சத்திரங்களில் ஆயில்யம், கேட்டை, ரேவதி இம்மூன்றும் புதனின் ஆதிபத்தியம் பெற்ற பாதசாரம் ஆகும்.
புதனுக்கு சுபத் தன்மையுண்டு என்றாலும் சூரியன் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாபிகளில் ஒருவரோடு கூடினாலோ, பார்க்கப்பட்டாலோ, புதனும் பாவியாகி விடுகிறார். புதன் பாபிகளின் ராசியில் நின்றாலும், சேர்ந்தாலும், பார்வை பெற்றாலும் பாதசாரம் பெற்றாலும் பாவியாவார். இவருக்கு சூரியனும், சுக்கிரனும் நட்பு. செவ்வாய், குரு, சனி, ராகு, கேது சமம், சந்திரன் பகையாகும். புதன் ஒரு ராசியில் சஞ்சரிக்க ஒரு மாத காலமாகும். 12 ராசிகளையும் ஒரு முறை சுற்றிவர ஒரு ஆண்டு ஆகும். இவர் தாய்மாமன், கல்வி, வித்தை போன்றவற்றிற்கு காரகனாகிறார். ஒரு ஜாதகருக்கு புதன் கெட்டிருந்தால் தாய்வழி உறவால் எந்த நன்மையும் ஏற்படாது.
—————————–
E. குரு (வியாழன்)
குருவே நவக்கிரக பரிபாலனத்தில் சுப கோள்களின் தலைவராக விளங்குகிறார். பாபக்கிரகங்களின் தீய பலனை தன் பார்வையால் கட்டுப்படுத்தும் சக்தி பெற்றவர். குரு சப்தரிஷிகளில் சேர்ந்தவரல்லர். இவரை ‘பிரம்மரிஷி என்பார்கள் பிரம்மனால் படைக்கப்பட்ட பிரம்மரிஷிகள் 7 பேர், சப்தரிஷிகள் 7 பேர். இந்த பிரம்மரிஷிகளில் ஒருவர்தான் பிரகஸ்பதி என்ற குரு.
தேவர்களுக்கு அரசனாக தேவேந்திரன் இருந்தார். அந்த தேவராஜனுக்கும் தேவர்குலத்துக்கும் குருவாக இருப்பவர்தான் பிரகஸ்பதி. இவரை குரு என்றும் வியாழன் என்றும் சொல்வார்கள் தனுகம், மீனராசியும் இவருக்கு இரண்டும் ஆட்சி வீடுகளாகும். தனுசு ராசியில் மூலத்திரிகோணம் பெறுகிறார். கடக ராசி உச்ச விடாகவும், மகரராசி நீச ராசியாகவும் அமைந்துள்ளது.
நட்சத்திரங்களில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி மூன்றும் இவருடைய ஆதிபத்தியம் பெற்று பாத சாரமாக விளங்குகின்றன குருவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் மூன்றும் நட்பு கிரகங்கள். சனி, ராகு, கேது சமம். புதன், சுக்கிரன் பகை கிரகங்களாகும்.
குரு ஒரு ராசியைக் கடக்க ஓராண்டு ஆகும். 12 ராசிகளையும் சுற்றிவர 12 ஆண்டுகளாகும். இவர் தனம் புத்திரர் போன்ற காரகம் பெற்றவராவார்.
குரு, வக்கிரமாகி, தான் நின்ற ராசியிலிருந்து பின்னாலோ முன்னாலோ சென்றாலும் தன் பூர்வ ராசியில்தான் அதிக பலம் உண்டு. இதைப்போலவே சனீஸ்வரனுக்கும் சக்தியுண்டு
F. சுக்கிரன் (வெள்ளி)
சப்தரிஷிகளில் ஒருவரான பிருகு மகரிஷியின் புதல்வரே சுக்கிராச்சாரி வெள்ளி (சுக்கிரன்) என்ற பெயர்களோடு அழைக்கப்படுகிறார். இவர் குருவுக்கு அடுத்தபடியான சுபக்கிரகமாகும். பூமிக்கு அடுத்துள்ள கிரகம், சந்திரன். அதற்கடுத்துள்ள கிரகம் சுக்கிரனாகும். ரிஷபம் துலாம் இரு ராசிகளும் ஆட்சி வீடுகளாகும். துலாம் மூலத்திரிகோண ராசி மீனராசி உச்சமாகவும், கன்னிராசி நீசமாகவும் ஏற்பட்டுள்ளது. பரணி, பூரம், பூராடம் இம்மூன்று நட்சத்திரங்களின் ஆதிபத்தியம் பெற்று சாரபலம் அடைகிறது
————————–
சுக்கிரனுக்கு புதன், சனி, ராகு, கேது நான்கும் நட்புக் கிரகங்கள். செவ்வாயும், குருவும் சமம். சூரிய சந்திரர்கள் பகை கிரகங்களாகும். ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சரிப்பார் ராசிகளையும் ஒரு முறை சுற்றிவர ஓர் ஆண்டு ஆகும் சூரியன், சுக்கிரன், புதன் மூன்று கிரகங்களும் மாதம் கிரகம் களாகின்றன. இந்த மூன்று கிரகங்களும் மூன்று ராசிகளுக்கு தான் பாகைக்குள் சஞ்சரிக்கின்றன. எனவே இவற்றை முக்கூட்டுக் கிரகங்கள் என்பார்கள். சுக்கிரன் சூரியனைத் தாண்டி 49 பாகைக்கு அப்பால் செல்லாது. அதேபோல் புதனும் சூரியன் தாண்டி 27 பாகைக்கு மேல் செல்லாது
G ராகு – கேது
சப்தரிஷிகளில் முதன்மையானவர் மரீசி மகரிஷி ஆவார் அவருடைய புத்திரரே கசியபர். கசியபருக்கு 13 மனைவிகள். அதில் இரண்டாவது மனைவியான திதிக்குப் பிறந்தவர்கள் ஹிரண்யன், இரணியாட்சன் எனும் இருவர். சிம்ஹி என்ற பெண் மகளும் உண்டு, கசியபரின் 5ம் மனைவியான மனுவிற்கு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களின் விப்ரசித்து என்பவனுக்கு இரண்டு முகங்கள் உண்டு
இந்த விப்ரசித்துவிற்கும், ஹிரணியனின் சகோதரியான சிம்ஹிக்கும் பிறந்தவன் சுவர்பானு என்ற அரசனாவான்
தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்த சமயத்தில் சுபர்பானு என்ற அசுரன் மாறுவேடத்தில் தேவர்கள் வரிசையில் வந்து, திருட்டுத்தனமாக அமிர்தத்தைப் பெற்றுண்டதால், மோகினி வடிவில் அமிர்தத்தைப் பங்கிட்டு வழங்கிக் கொண்டிருந்த ஸ்ரீமத் நாராயண மூர்த்தியால் தலைவேறு
முண்டம் வேறாக வெட்டப்பட்ட போதிலும் சாகாவரம் பெற்ற காரணத்தால் இரு உருவங்களை அடைந்தான் தலைப்பகுதி சுவர் பானுவின் உருவத்தில் கேதாகவும் உடல் பரிதி பாம்பாக மாறி ராகுவாகவும் பெயர் பெற்றனர் இவ்விரு வரும் பிறப்பால் அசுரர்களும், அமிர்தம் உண்டதால் இறவாப் புகழ் பெற்று தேவர்களின் பக்கத்திலேயே
இடம் பெற்றனர் இந்த ராகு கேது பாவ கிரக வரிசையில் இடம் பெற்றுள்ளன. இவைகளை நிழல் கிரகங்கள் என்றும், சாயா
கிரகங்கள் என்றும் சொல்வார்கள். இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று சமசப்தம ராசிகளில் 180 பாகையில் நின்று மற்ற கிரகங்களை எதிர்த்து எதிர் திசையில் சுற்றி வருகின்றன ராசிச்சக்கரத்தில் இவை இரண்டுக்கும் சொந்த வீடுகள் கிடையாது எந்த ராசியில் சஞ்சரிக்கின்றதோ அந்த ராசியின் அதிபதியின் செயல்பாடுகளையும், பார்க்கும் கிரகத்தின் செயல்பாடுகளையும் பாதசாரக் கிரகத்தின் செயல்பாடுகளையும் கொண்டே பலனளிக்கின்றன. விருச்சிகத்தில் உச்சமும், ரிஷபத்தில் நீசம் பெறுவதாகக் கூறப்படுகிறது. ராகுவின் நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம் மூன்றுமாகும். கேதுவின் நட்சத்திரங்கள் அஸ்வினி, மகம், மூலம் மூன்றுமாகும். இவர்களுக்கு சனியும் சுக்கிரனும் நட்பு, புதனும், குருவும் சமம். சூரியன், சந்திரன், செவ்வாய் பகைக் கிரகங்களாகும். ராகுவுக்கு யோகம், போகம் காரகமாகும் கேதுவுக்கு ஞானம், மோட்சம் கிரகமாகும்
H. சனி
மரீசி மகரிஷியின் புத்திரர் கசியபர். கசியப்பருக்கு 13 மனைவியர்கள் உண்டு. முத்த மனைவி அதிதியின் வயிற்றில் உதித்தவர்களில் பிரதானமானவர் சூரியன். சூரியனின் புத்திரரே சனி.
ஜோதிட சாஸ்திரத்தில் இடம்பெறும் சனியின் குணநலன்களையும், ஸ்தான, காரகப் பலன்களையும் அறிய சில உதாரணங்களை மட்டும் அறியலாம். மரீசி மகரிஷியின் புத்திரர் கசியபரின் வழி வந்த சூரியனே, சூரியகுலத்து அரசர்களின் மூல புருஷராவார். சூரியனுக்கு சங்கை, பிரபை, ரைவதநாட்டு இளவரசி, சாயாதேவி என நான்கு மனைவியர்கள் உண்டு அதில் துவஷ்டாவின் மகளான சங்கை எனும் சமுக்ஞைக்கு வைவஸ்வத மனு, யமன், யமுனை ஆகிய மூவர் பிறந்தனர் குதிரை வடிவில் சமுக்ஞையோடு சூரியன் கூடும் சமயத்தில் அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.
பிரபை என்ற இரண்டாம் மனைவிக்குப் பிறந்தவன் பிரதவன் என்பவன். இளவரசிக்கு ரைவதன் என்ற புத்திரன் பிறந்தான் நான்காம் மனைவியான சாயாதேவிக்கு சாவர்னி, விஷ்டி தபதி, சனி ஆகிய புத்திரர்களும், இரு பெண்மக்களும் பிறந்தனர் அரச தர்மப்படி முத்த புதல்வரான வைவஸ்தமனு சூரிய குலத்திற்கு அரசரானார். சூரியனின் கடைப்புதல்வரான சனி, தவமியற்றி சிவபெருமானின் அருளைப் பெற்று நவக்கிரகமாகி, நவக்கிரக பரிபாலனத்தில் இடம் பெற்றார். பரமேஸ்வரன் தமது ஆயுள் படைப்பான வல்லமையை சனிக்கு அளித்து, தமக்குக் ஒப்பாக சனி இடம் பெறும்படி “சனீஸ்வரன்” என்று பட்டம் சூட்டினார் ஆகையால்தான் சனியின் ஆதிக்கம் உள்ள ஒவ்வொருவரும் சிவ மதத்தைக் கடைப்பிடிக்கும் சிவபக்தர்களாகிறார்கள்.
சனிஸ்வரரின் மனைவி நீலாவதி என்பவராவார். இச்சனிக்கு திருநள்ளாற்றில் ஆலயம் உண்டு. அதில் சாந்தி, பூஜைகளைச் செய்து வந்தால் சனியின் உக்கிரம் குறைந்து விடும்
ஜோதிடத்தில் சனி பாப கிரக வரிசையில் சேர்த்துள்ளார்கள், ராசிகளில் மகரம், கும்பம் இரண்டும் சனியின் ஆட்சி வீடுகளாகும். கும்பராசி மூலத்திரிகோணமாகும். துலாராசி உச்சவீடாகவும், மேஷராசி. நீச வீடாகவும் அமைந்துள்ளன நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி இவை மூன்று நட்சத்திரங்களும் சனியின் ஆதிக்கமுடைய பாதசாரங்களும். சனிக்கு புதன், சுக்கிரன், ராகு, கேது நட்பு, குரு சம கிரகமாகும் சூரியன், சந்திரன், செவ்வாய் மூன்றும் பகை கிரகங்கள். இவர் ஆயுள் காரகத்தில் அதிக பிரமிக்க வருவார். ஒரு ராசியை விட்டு மறுராசிக்குச் செல்ல 24 ஆண்டுகள் ஆகின்றன. 12 ராசிகளையும் ஒரு முறை சுற்றிவர முப்பது ஆண்டுகள் ஆகும் இவ்விதம் மந்தமாக இயங்குவதால் இவருக்கு ‘மந்தன்’ என்ற பெயரும் ஏற்பட்டது. இவர் காரி என்றும் முடவன் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்