அன்பிற்குரிய துலாம் ராசி நண்பர்களே தற்போது வரை உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த சனி பகவான் சார்வரி வருடம், மார்கழி மாதம் 12 ம் தேதி, ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி. சனி பகவான் தனுசு ராசியிலிருந்து சொந்த வீடான மகர ராசிக்கு செல்கிறார். அதாவது உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு செல்லும் சனி பகவான் அர்த்தாஷ்டம சனி தோஷத்தை ஏற்படுத்துகிறார்.
இதுவரை தாங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சியில் தடைகளையும், மந்த தன்மையயும் ஏற்படுத்தி முன்னேற்றம் இன்மையும் சந்தித்து வந்தீர்கள். மேலும் நிறைய பயண அலைச்சல்களையும் சந்தித்து வந்த தங்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சியினால் என்ன பலன்கள் நடைபெற போகிறது என்பதை பார்ப்போம் வாருங்கள்.
துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
- தன லாபம். சொத்து சுகம் கிட்டும்
- உத்தியோக உயர்வு கிட்டும்
- குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்
- முதியவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும்
- ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்
- வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிட்டும்
- மென்பொருள் தொழில் நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
விரிவான பலன்கள்
துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியாக சஞ்சாரம் செய்தாலும், துலாம் ராசிக்காரர்கள் ஜீவனகாரகன் சனியின் அருளை பெற, நீதி நேர்மை தவறாது ஜீவனத்தில் கடமையாற்றினால், துலாம் ராசி அன்பர்களுக்கு தொழில் ரீதியான நல்ல முன்னேற்றத்தையும், உத்தியோக உயர்வையும், உத்தியோக உயர்வினால் ஏற்படும் தன லாபங்களையும், தன லாபத்தினால் சொத்து சுகம் போன்ற வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரவிருக்கிறார்.
வருமானம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பொருளாதார மேன்மை ஏற்படும். துலாம் ராசிக்காரர்களின் வங்கி வைப்புத்தொகை அதிகரிக்கும். கருவூலம், வங்கி மற்றும் நிதி சம்பந்தப்பட்ட துறைகளில் பணியில் உள்ளவர்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் காலகட்டம் இது. ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள். மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு பொருளாதார ஏற்றம் உண்டாகும். சனி பெயர்ச்சியின் ஆரம்ப நிலையில் வியாபாரத்தில் உள்ளவர்கள் சிறிது லாபம் குறைந்தாலும் மே 2021 க்கு பிறகு நல்ல லாபத்தை சம்பாதிப்பர்.
ஆரோக்கியம் :
துலாம் ராசிக்காரர்களுக்கு ஈரல் மற்றும் கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். துலாம் ராசி பெண்களுக்கு அடிவயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். உணவு பழக்கவழக்கங்களில் கவனம் தேவை. உடல் நலக்கோளாறுகளால் அவதியுற்று வந்த துலாம்
ராசியினருக்கு மருத்துவ சிகிச்சையின் மூலம் நிவாரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுக்கு மந்தமான செயல்பாடுகள் மேலோங்கும். குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் இருந்தால் மந்தமான செயல்பாடுகள் மாறும். மூத்த ஆண் குடிமக்களுக்கு ஞாபகமறதி பிரச்சனை ஏற்படலாம். மூத்த பெண் குடிமக்களுக்கு தடுமாற்றம் அடிக்கடி கீழே விழுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
திருமண வாழ்க்கை குடும்பம்
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குடும்பத்தில் சொத்து சம்மந்தப்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். மார்ச் 2021 க்கு பிறகு குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை உருவாகும். துலாம் ராசிக்கு யோகாதிபதியான சனியின் சுகஸ்தான சஞ்சாரம் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் அன்யோன்யத்தை கூட்டும். கல்விஸ்தான சஞ்சாரம் குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டத்தை ஏற்படுத்தும். பெற்றோர்களின் உதவியால் குழந்தையின் கல்வியில் மேம்பாடு ஏற்படும். குடும்பத்தில் உள்ள வயதானவர்களிடம் நல்லிணக்க சூழ்நிலை ஏற்படும். மூத்த குடிமக்கள் ஆண்கள் பயணங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
தொழில்
சரியான வேலைவாய்ப்பு இல்லாமல் வேலை தேடி கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமைந்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள். மென்பொருள் துறையில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வெளிநாடு சென்று பணிபுரிய வாய்ப்புகள் அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் அதிக லாபம் சம்பாதிக்க ஏதுவான காலகட்டம் இது. திருமண தகவல் மையம், சமூக வலைதளம் மற்றும் விளம்பரத்துறைகளில் வர்த்தகம் அதிகரிக்கும்
குழந்தைகள், கல்வி
சனிபெயர்ச்சிக்கு முன் குழந்தைகளுக்கு படிப்பில் சற்று சுணக்கமான நிலை இருந்திருந்தாலும், சனி பெயர்ச்சிக்கு பின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களின் எளிதில் புரிந்து படிக்கும் திறன் அதிகரிக்கும். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி முன்னேறுவார்கள். கலை மற்றும் அறிவியல் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புகளில் சேர வாய்ப்புகள் நாடி வரும். மென் பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் படிப்பவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.
பரிகாரம்
நீங்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்வது, மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர் அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதன் மூலம் சிறப்பான பலன்களை, சனி பகவான் வழங்குவார்.
பொதுவாக துலாம் ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சி காலம் நல்ல மேன்மையைத் தரும் காலமாக அமையும் எனக் கூறி உங்களுக்கு சனி பகவான் எல்லா வளங்களும் வழங்க வேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம். நன்றி வணக்கம்.